சூரியப்ரபை சந்திரப்ரபை

This entry is part 8 of 8 in the series 6 ஜனவரி 2019

விவசாயம் பொய்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து இல்லாமல் கொள்ளிடம் கருவாட்டு மணலாய்ச் சுருண்டிருந்தது. கால்வாயும் வாய்க்காலும் வெள்ளமாய்ப் பொங்கி மடைதிறந்து முப்போகம் விளைந்த பூமியில் இன்று போர் போட்டு ஒரு போக விவசாயம். வந்தால் வெள்ளமும் புயலும் வந்து கெடுக்கிறது. இல்லாவிட்டால் பாயிவரப்பான்கள் அணையைத் திறக்க மாட்டேன் என்கிறான்கள். ”கோபாலா காப்பாத்து.” கவலையோடு பட்டாலையில் குறிச்சியில் சாய்ந்திருந்தார்கள் ஆவுடையப்பன் செட்டியார். ”அப்பச்சி” என்று அழைத்தாள் லெச்சுமி. மாசமான வயிறு சொலிந்து இருந்தது. லேசான சோகையோடு கால் மாற்றிக் […]

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – பகுதி 1

This entry is part 7 of 8 in the series 6 ஜனவரி 2019

இந்தப் பகுதியில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய பயமூட்டும் விவாதங்களை முன்வைப்போம். இத்துறையின் சில வல்லுனர்கள் இது மிகவும் அபாயம் வாய்ந்த ஒரு முன்னேற்றம் என்று சொல்லி வருகிறார்கள். இன்னும் சிலர், அப்படி பயப்பட பெரிதாக ஒன்றும் இல்லை என்கிறார்கள். பல பாதுகாப்பு சார்ந்த முன்னேற்றங்கள் மனிதர்களிடம் உள்ள பல கட்டுப்பாடுகளை எந்திரங்களிடம் ஒப்படைத்து விடும் என்ற சந்தேகம் எழுந்தாலும், இதில் எவ்வளவு கற்பனை உள்ளது என்பதை ஆராய்ந்தால் உண்மை தெரிந்து விடும். நம்முடைய சர்ச்சைகள் […]

சபரிமலை – தொடரும் போராட்டங்களும் வாதங்களும்

This entry is part 4 of 8 in the series 6 ஜனவரி 2019

சபரிமலை கோவில் பழக்கங்களை பல்வேறு விதங்களில் வரையும் அரசியல் மூன்று நிலைகளில் மையம் கொண்டுள்ளது. 1. இது பெண்களை அன்னியப்படுத்துகிறது. பெண்களின் உரிமையை நிலைநாட்டவேண்டும் 2. இது மாதவிடாயை தீட்டு என்று அசிங்கப்படுத்துகிறது. 3. இது இந்து மதத்தை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்ததால் இப்படிப்பட்ட பெண்ணுக்கு எதிரான நிலைப்பாடுகளை கோவில்கள் கொண்டிருக்கின்றன. இதே போலத்தான் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் நுழைவதை பார்ப்பனர் எதிர்த்தனர். இன்று பெண்கள் நுழைவதை எதிர்க்கின்றனர். இந்த மூன்று அரசியல் வாதங்களுமே தவறானவை. மேலும் பிரச்னையை மேற்கத்திய […]

3. இடைச்சுரப் பத்து

This entry is part 6 of 8 in the series 6 ஜனவரி 2019

  ’இடைச்சுரம்’ என்பது இடைவழிப்பயணத்தைக் குறிக்கும். பொருள் தேடச் செல்லும் தலைவனுக்குப்  இடைவழிப்பயணத்தின் போது தலைவியின் நினைவு வருவதும் அதனால் அவன் வருந்துவதும் இயல்பானதாகும். இப்பகுதியில் உள்ள பாடல்கள் அனைத்தும் இடைவழியில் அவன் செல்லும்போது ஏற்படும் நினைவுகள் பற்றியே இருப்பதால் இப்பெயர் பெற்றது. ===================================================================================== இடைச்சுரப் பத்து—1 உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை அலறுதலை ஓமை அங்கவட்டு ஏறிப் புலம்புகொள விளிக்கும் நிலம்காய் கானத்து மொழிபெயர் பல்மலை இறப்பினும் ஒழிதல் செல்லாது ஒந்தொடி குணனே. [உலறு=காய்ந்த; உளிவாய்ப் […]

பழங்குடி அமெரிக்கர்களின் மீது கலாச்சார வன்முறையை நடத்திய கிறிஸ்துவப் பள்ளிகள் – மறுவிசாரணை தேவை

This entry is part 5 of 8 in the series 6 ஜனவரி 2019

அன்னா ஹால்   அமெரிக்க பெரும்பான்மை கலாச்சாரத்தில் பழங்குடி அமெரிக்கர்கள் பற்றிய உரையாடலே இல்லாமல் இருக்கிறது. பள்ளிக்கூட பாடங்களில் பழங்குடி அமெரிக்கர்களின் கலாச்சாரம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அமெரிக்க அரசியலிலோ அது பேசப்படுவதே இல்லை. சமீபத்தில் நான் அறிய நேர்ந்த ஒரு விஷயம், எவ்வாறு கிறிஸ்துவ நிறுவன பள்ளிகள் பழங்குடி அமெரிக்கர்களின் கலாச்சாரங்களின் மீது ஒரு அழிவை திட்டமிட்டு உருவாக்கின என்பதை பற்றியது. ஒரு காலத்தில் ஐரோப்பிய கலாச்சார விழுமியங்களே உயர்ந்தவை என்றும், எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது […]

வன்மம்

This entry is part 1 of 8 in the series 6 ஜனவரி 2019

‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’-அவ்வையார் ‘ஒரே வர்ணம்தான் அதுக்குன்னு நாம உட்டுட முடியாது’ மருமங்குடி கிராமத்து அண்ணனும் தம்பியும் பேசிக்கொண்டார்கள். பழைய அம்பாசிடர் காரின் டிக்கியில் தம்பியின் பெண். அவள் வெட்டுக்கொட்டகைக்குஏற்றப்படும் பன்றிக்குட்டியாய்கட்டிக்கிடக்கிறாள்.தம்பிபெற்ற ஒரே மகள். காவிரிக்கரை மீதுள்ள பெருநகரத் தனியார்க்கல்லூரியில் படித்துவந்தவள்.தம்பியின் எதிர்வீட்டுப்பையன் அவனும் அதே கல்லூரியில் படித்துவந்தான். இருவருக்கும் இடையே காதல், அந்தத் தீயை யார் மூட்டிவிட்டது.எதற்காக அதனைவளர்த்துவிட்டிருக்கிறார்கள்.அக்காதல் பயணம் நஞ்செனத் தொடர்ந்தது. ‘வாயில துணி வச்சி அடச்சி அவ […]

துணைவியின் இறுதிப் பயணம் – 7

This entry is part 2 of 8 in the series 6 ஜனவரி 2019

  என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !   [Miss me, But let me go]   ++++++++++++++   [25] தங்க ரதம்   தங்க ரதம் போல் வீட்டில் தினம் உலாவி வருவாள் ! மங்கா ஒளி முகத்தோடு வீட்டில் தினம் விளக்கை ஏற்றுவாள். தகதக்கும் அந்த தங்க மேனியாளை திருமணத்தில் கைப் பற்றிய நான், இறுதியாக என்னிரு கைகளால் எரியும் நெருப்பிலே தள்ளினேனே ! நான் தள்ளினேனே […]

அம்ஷன் குமார் “ஆவணப்பட இயக்கம்” நூல் வெளியீடு

This entry is part 3 of 8 in the series 6 ஜனவரி 2019

ஆவணப்படங்களுக்கான தேவைகள் முன் எப்போதையும்விட இப்போது அதிகம் உணரப்படுகின்றன. ஆவணப்படத் தயாரிப்புகளும் அவற்றின் வெளியீடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. டிஜிடல் உபகரணங்களின் வரத்துக்குப்பின் யார் வேண்டுமானாலும் படங்களை எடுக்கலாம் என்கிற நிலைமையும் உருவாகியுள்ளது. ஆனால் ஆவணப்படத்தை தொழில்பயன்பாட்டிற்காகவோ கலைவெளிப்பாட்டிற்காகவோ  தனிப்பட்ட தேவைக்காகவோ உருவாக்க அதன் அடிப்படைகளை அறிந்துகொள்வது மிக அவசியம். முன்பின் திரைப்பட அனுபவம் இல்லாதவர்களும் எளிதாக அவற்றைக் கற்றுகொண்டு ஆவணப்படம் எடுக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆவணப்படத்திற்கு வர்ணனை எழுதுதல் நேர்காணல் செய்தல் படப்பிடிப்பு நடத்துதல் ஒலிப்பதிவு, […]