கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ

This entry is part 20 of 40 in the series 8 ஜனவரி 2012

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, இத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறு வேண்டுகோள் கடிதத்தை தங்கள் மேலான இதழில் வெளியிட வேண்டுகிறோம். தள்ளாத வயதில் நோயுடன் போராடும் கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ தங்கள் மேலான இணைய இதழ் மூலம் இத்தகவல் கோடான கோடி தமிழ் இலக்கிய ஆர்வலர்களை சென்றடைய உதவுமாறு வேண்டுகிறோம் எஸ். ஷங்கரநாராயணன் பத்ரிநாத் எழுத்தாளர்கள் pbn1961@gmail.com letter to thinnai

கவிஞானி ரூமியின் கவிதைகள் – எனக்கொரு குருநாதர் (கவிதை -56)

This entry is part 19 of 40 in the series 8 ஜனவரி 2012

(1207 -1273) ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றிரவு என் குருநாதர் போதித்த அறிவுரை இது : வறுமைப் பாடத்தைப் பற்றியது எதுவுமே ஒருவருக் கில்லாமை ! எதன் மீதும் இச்சை கொள்ளாமை ! நான் அமணமாய் நிற்கிறேன் ரூபிக் கற்கள் நிரம்பிய சுரங்கத்தின் உள்ளே செந்திறப் பட்டு உடுத்தி ! மினு மினுப்பு மழுங்கிப் போனது கடலைக் காண்கிறேன் இப்போது ! ஓரே கணத்தில் நேரும் நகர்ச்சிகள் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (கவிதை – 52 பாகம் -2)

This entry is part 18 of 40 in the series 8 ஜனவரி 2012

(On Joy and Sarrow) மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “இலையுதிர் காலத்தில் மலைப் பள்ளத்தாக்குகள் ஊடே சென்று நீ முணுமுணுக்கிறாய். அப்போது மரங்கள் உன் இரங்கற் கூக்குரலை எதிரொலிக்கும். குளிர்காலத்தில் உனது அடிமை விலங்குகளை நீ உடைக்கிறாய் ! அப்போது இயற்கையும் உன்னோடு ஒத்துழைத்துப் புரட்சி செய்கிறது. வசந்த காலத்தில் வலுவற்று, ஊக்கமின்றி தூக்கத்திலிருந்து விழிப்புற்று எழுகிறாய் ! அவ்வித மயக்க கொந்தளிப்பில் தூண்டப் பட்டு வயல்களும் […]

முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு

This entry is part 17 of 40 in the series 8 ஜனவரி 2012

முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு முனைவர் மு. பழனியப்பன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் திரு ஜி.பி முருகானந்தம் என்பவர் தன்வரலாற்று இலக்கியங்கள் ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் செய்த முனைவர் பட்ட ஆய்வேட்டின் மீதான வாய்மொழித் தேர்வு 10.01.2011 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி ஆங்கிலத் துறை மொழி ஆய்வுக் கூடத்தில் நடைபெற உள்ளது. இதற்கு புறத் தேர்வளாராக முனைவர் போ. சத்தியமூர்த்தி (மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ) […]

நன்றி உரை

This entry is part 16 of 40 in the series 8 ஜனவரி 2012

(30.4.2011 அன்று மாலை வாதங்கள் விவாதங்கள், தொகுப்பு வெளியிடப்பட்ட தருணம் கடைசியில் நான் நன்றி கூறு முகமாகச் சொன்னது, இங்கு சற்று ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ) முஸிபத் கபீ அகேலே நஹி ஆத்தி என்பார்கள். நம்மூரிலெ கூட கேட்டை மூட்டை செவ்வாய் என்று ஏதோ சொல்வார்கள். கஷ்ட காலம் என்று வந்தால் அது தனியாக வராது. நீங்கள் எல்லாம் மூன்று மணி நேரமா உட்கார்ந்திருக்கிறீர்கள். கடைசியில் நான் நன்றி சொல்ல வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. இவ்வளவு […]

தீட்டுறிஞ்சி

This entry is part 15 of 40 in the series 8 ஜனவரி 2012

தூர்த்த குளக்கரையிலிருந்து வந்த விசும்பலின் துயர்வெடிக்கக் கலைந்த தூக்கத்தின் எரிச்சலோடு இடம் அடைய அதிர்ந்தேன் எழுப்பிய தூண்களிடையே நின்றிருந்தாள் குலசாமியான செல்லியம்மன் யாது துயர் தாயே மண்டியிட்டேன் அவளும் மண்டியிட்டு தலைநிமிராது நாப்கீன்கள் படைக்க வேண்டினாள் வீடு திரும்ப நினைத்துக்கொண்டேன் பெரியாயிக்கு சேலை படைக்கும் அம்மாவின் வேண்டுதலையும் நிறைவேற்றிட வேண்டுமென…

சாந்தகுமாரின் ‘மௌனகுரு’

This entry is part 14 of 40 in the series 8 ஜனவரி 2012

சென்னையை விட்டு பதினைந்து நாட்கள் போனதில் ராஜபாட்டை, மௌனகுருவைத் தூக்கி விட்டது. இருந்தாலும் விடுவதாயில்லை என்று மல்டிப்ளக்ஸில் தேடி, பார்த்தே விட்டேன். முதலிலேயே பத்திரிக்கை விமர்சனங்கள் நல்ல படம் என்று சொல்லிவிட்டதால் பணத்திற்கு பங்கமில்லை என்று எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தேன். படத்தின் பின் பாதி கொஞ்சம் போராளி சாயல் இருக்கிறது. அதே மாதிரி கொசு ரீங்காரம் பின்னணி எபெக்டுடன்.. ஆனால் அதோடு ஒற்றுமை ஓவர். சட்டென்று கோபப்படும் கதைநாயகன் அருள்நிதி அதிகம் பேசாதவன். அடிதடி என்று ஆகி […]

சிற்றிதழ் அறிமுகம் : சங்கு

This entry is part 13 of 40 in the series 8 ஜனவரி 2012

. முப்பது வருடங்களுக்கு மேலாக கடலூரிலிருந்து வந்து கொண்டிருக்கும் சிற்றிதழ். சுப்பிரமணியம் என்கிற தமிழாசிரியரின் ஆர்வத்தால் கொணரப்படும் இதழ். அவர் வளவ. துரையன் என்கிற புனைப்பெயரில் எழுதுகிறார். சிறகு ஆரம்பித்த காலத்தில் இருந்து சங்குக்கும் எனக்கும் தொடர்பு உண்டு என்றாலும் பெரிதாக என்னை ஈர்க்க வில்லை இதழ் என்று தான் சொல்ல வேண்டும். வாசகனின் சுவாரஸ்யத்தைக் கூட்டாத வடிவமைப்பு, நெருக்கமான அச்சிட்ட வரிகள், ஒரு படைப்புக்கும் இன்னொரு படைப்புக்கும் இல்லாத இடைவெளி என்று நெருக்கடியாக வெளிவந்து கொண்டிருந்தது […]

கிறுக்கல்கள்

This entry is part 12 of 40 in the series 8 ஜனவரி 2012

பூப்போலத் தூங்குமென்னை பூகம்பமாய் எழுப்பியது… இன்று போய் நாளை வாருங்களென்றே என் உறக்கத்தை உடுத்திக் கொண்டேன். தூக்கத்திலே மொட்டுவிட்ட வரிகள் அதிகாலையில் துகிலுரித்துக் கிடந்தன வெந்நீரில் விழுந்து விட்ட கிருமியாய் சொற்கள் கரைந்தே போயின வெள்ளம்போல் பொங்கி வந்த பாட்டு விடிந்ததும் வடியக் கண்டேன் வெங்காயம் போல் உரித்து வந்த கற்பனை வெந்தயம் போல் கசக்கக் கண்டேன் பசுமையிலே ஓரிரவு பறிபோனாலும் இன்பா நளினமாய் வருவதை இப்போதெல்லாம் நசுக்கிடாமல் பேனாமுட்களில் கோர்த்துக் கொள்கிறேன் பொங்கிவரும் கவிதை பொசுங்கிவிடாமல்…

ஏன்?

This entry is part 11 of 40 in the series 8 ஜனவரி 2012

ஊனத்தின் நிழல் படிந்த மங்கலான இடத்தில் எழுதப்பட்டுள்ளது, எனக்கான கேள்விகள் ஆனால்? விடைஎழுத யார்யாரோ! ஒளிபுக முடியாத ஒரு இருள் பேழைக்குள் அடைக்கப்பட்டுள்ளுது எனது பகல்கள்! வியர்க்காத ஒரு மனிதனின்ஊனில் மாட்டிக்கொண்டுள்ளது என்னது தாகத்தின் தண்ணீர்! ஏனோ? சலித்து போகாத எனது விடைத்தாள்களில் மட்டும் எப்போதும் பிழைதிருத்தம்!