புற இயக்கி !

This entry is part 1 of 6 in the series 8 ஜனவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா. இமயத் தொட்டிலை ஆட்டி  எப்படி  எழும் பூகம்பம் ? பசிபிக் தீவுகளில்   குப்பென எப்படிக் குமுறிடும் எரிமலை ? பூமியின் உட்கருவிலே  தீக்குழம்பை  ஈர்ப்புக்கு எதிராய் பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும்  அசுர அணு உலை ஒன்று எப்படி உருவானது ? ஆழ்கடல் அடியில் பன்னூறு அணுகுண்டு வெடித்து  அசுரச் சுனாமிப் படை  அலைகள்  எப்படிக் கரையேறி அழிக்கும் ? தாயின் கர்ப்ப பையில்  அற்புதச்  சிசு  எப்படி உருவாகுது, பத்து மாதம் வளர்ந்து ?   […]

பாலையும் சிலப்பதிகாரமும்

This entry is part 5 of 6 in the series 8 ஜனவரி 2023

                ( பாலை நிலம் நிரந்தரமான ஒன்றே )   காவடி மு. சுந்தரராஜன் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள ஐவகை நிலங்களில் பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நெடுங்காலமாக நிலவி வருகிறது. அது சரியல்ல என்பதை நிறுவவே இக்கட்டுரை.  சிலப்பதிகாரத்தில், காடு காண் காதையில்,  கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்தியல் இழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் […]

இசை!

This entry is part 4 of 6 in the series 8 ஜனவரி 2023

கிறிஸ்டி நல்லரெத்தினம் ++ இடம் வந்திரிச்சி சார், பெல்லை அடிங்க…. யோவ், பஸ்ஸ நிறுத்தய்யா….. கவனம் சார் … மெதுவா… மெதுவா… அம்பிட்டு தூரம் இல்லீங்க…. நேரா போய் அங்கிட்டு தெரியிற ஆலமரத்தடியில சோத்துக் கை பக்கம் திரும்பினா நம்ம வீடு சார் ….. பக்கத்திலதான் சார் நா சொன்ன விஜயா தியேட்டர். எங்க மாமாவுக்கு தியேட்டரில பெரிய வேல – அவருதாங்க படம் காட்டற புறெஜெக்டர் மிசின ஓட்டறவர். அம்மாட தம்பி…. நல்ல மனுஷன்.. கழுத்தில […]

ஆணவம் கன்மம் ….

This entry is part 3 of 6 in the series 8 ஜனவரி 2023

செந்தில்… ஒரு அந்தி மாலை நேரம்….அமைதி தவழும் அடர்ந்த கானகம் ஒன்றின் குறுக்குப் பாதைகளில் ஆணவச் செருக்குடன் என் நடைப்பயணம்…..திண்மையான செருப்பு அணிந்த திமிருடன் வழியில் கிடந்த முட்கழி ஒன்றை எற்றி உதைத்தேன்….அதன் மறுமுனைக் காற்றைக் கிழித்து என் கண்களை நோக்கி எகிறியது…. கணத்தில் கர்வம் நீங்கி கவனத்துடன் கடந்த போதுமனம் கவர்ந்த மணங்கமழ் மலர் ஒன்றை பறிக்க விழைகையில்வழிமறித்த முட்கொடி ஒன்றை பயபவ்யத்துடன் விலக்கி தள்ளினேன்…அதுவோ ஒரு முரட்டு வலிமையுடன் என் தலையை முட்கீரிடமாக சுற்றி […]

அந்தக்கரணம்

This entry is part 2 of 6 in the series 8 ஜனவரி 2023

உஷாதீபன் தினமும் காலையில் யோகா வகுப்பிற்குச் சென்று வரும் நான் மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்வது உண்டு. அம்மாதிரி நேரங்களில் அதிகம் போக்குவரத்து இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து, என் நடைக்கு உகந்த இடங்களாகக் கொண்டு வழக்கமாகச் சென்று வருவேன். வாகனங்களின் இரைச்சல் அதிகமில்லாத, குறுக்கீடுகள் இல்லாத பகுதியாக என்பது கூடத் தொடர்ந்த நடைப் பயிற்சி அனுபவத்தின்பாற்பட்டுத்தான். ஒரு சிறு விஷயத்திற்குக் கூட நமக்கு அந்தந்தச் செயலுக்கேற்றாற்போல் அனுபவம் தேவைப்படுகிறது. அப்படியானால்தான் நாம் அதிலே மன நிம்மதியை […]

மறுபடியும் 1967 , வரலாறு ரிபீட் ஆகுமா ? ராஜாஜி –  கமல்   

This entry is part 6 of 6 in the series 8 ஜனவரி 2023

சோதாசன் 1967 தமிழகத்தின் வரலாற்றின் முக்கியமான வருடம். 1962 ல் காங் தடுமாற ஆரம்பித்த சூழல் ஆரம்பித்தது. தொடர் காலங்களில் பக்தவத்சலம் முதல்வாகி காமராஜர் காங் மத்திக்கு செல்கிறார். அதன் பின் வரும் தேர்தலில் 1967 ல் காங் தனித்துப் போட்டியிடுகிறது. முதலியார் வகுப்பைச் சேர்ந்த  பக்தவத்சலம் பெரும் நிலக்கிழார். அதே கெத்துடன் சமரமற்ற ஓர் நிலைப்பாட்டில் இருக்கிறார். ஒரு பக்கம் அர்சிப் பிரச்சனை  எலிக்கறியை காங் தின்னச் சொன்னது எனும் செய்திகள்.   மறுபக்கம்,  எம் […]