மிதிலாவிலாஸ்-25

This entry is part 1 of 17 in the series 12 ஜூலை 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பலவானாக இருந்த தான் எதிர்பாராமல் வலையில் சிக்கிக்கொண்டு விட்டது போல் தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கே வெட்கமாக இருந்தது. பதினெட்டு வயது நிரம்பிய சித்தூ விரலை அசைக்காமல், வாய் வார்த்தை எதுவும் பேசாமல் தன்னை முழுவதுமாக தோற்கடித்து விட்டான். அந்தச் சிறுவன் மீதா தனக்கு பொறாமை! சீ…சீ.. அவனுள் இருந்த மன வலிமை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பவும் எழும்பியது. இவற்றையெல்லாம் ஜெயிக்கும் சக்தி இந்த உலகத்தில் ஒன்றுக்குத்தான் இருக்கிறது. […]

தொடுவானம் 76. படிப்பும் விடுப்பும்

This entry is part 2 of 17 in the series 12 ஜூலை 2015

டாக்டர் ஜி. ஜான்சன் 76. படிப்பும் விடுப்பும் ஆங்கில வகுப்பில் தாமஸ் ஹார்டியின் ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” நாவல் அருமையாக முன்னேறியது. பாதி பேர்கள் நன்றாகத் தூங்கினாலும், அது வழக்கமானதுதான் என்பதை நன்கு அறிந்திருந்த குண்டர்ஸ் கண்டும் காணாமல் பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார். நடத்திக்கொண்டிருந்தார் என்பதைவிட ஒருவரை படிக்கச் சொல்லிவிட்டு கேட்டுக்கொண்டிருந்தார் என்றே கூறலாம். அவ்வாறு அவருடைய இருக்கையில் அமர்ந்து அதே வரிகளை கடந்த சில வருடங்களாகக் கேட்டுப் பழகிப்போன அவருக்குக்கூட உறக்கம் வருவதை […]

என்னுள் விழுந்த [ க ] விதை !

This entry is part 3 of 17 in the series 12 ஜூலை 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் திருத்துறைப்பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் கலத்தில் நான் தமிழ்ப்பாடத்தில் வாங்கிய மதிப்பெண் எப்போதும் 15 – ஐத் தாண்டியதில்லை. அதுவும் 14 1/2 தான் ஆசிரியரின் கருணையால் 15 ஆகும் ; இது வாடிக்கை ! ஆங்கிலத்தில் மட்டும் நான் எப்போதும் முதல் மாணவன். தமிழில் இவ்வளவு எழுத்துக்கள் இருந்தால் கஷ்டமாக இருக்காதா ? வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் அப்பாவின் கை என் முதுகைப் பதம் பார்த்ததில்லை. கணிதம் கஷ்டமாக இருந்தது […]

சண்டை

This entry is part 4 of 17 in the series 12 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன் சண்டைகளில் பல வகைகள் உண்டு. ஆனால் குடும்ப சண்டைகள் ஒன்றும் பெறாத விசயங்களுக்காக நடக்கும். பரவலாக பொழுது போகாத வெட்டிக் கூட்டம் ஒன்று எல்லா ஊர்களிலும் உண்டு. அவை இந்த சண்டைகளுக்கான ஆடியன்ஸ். வீட்டுக்குள் நடக்கும் சண்டைகளை வானொலி ஒலிச்சித்திரமாக சன்னலருகில் நின்று கேட்கும் அந்த கூட்டம். சண்டை முற்றி தெருவுக்கு வரும்போது அது தொலைக்காட்சி தொடராகி விடும். பெரியசாமி, சின்னச்சாமி சண்டை ஒரு மெகா சீரியல். இதற்கு இரட்டை இயக்குனர்களாக செயல்படுவார்கள் அவர்களின் […]

பாபநாசம்

This entry is part 5 of 17 in the series 12 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 நெல்லை மண்ணில் கமலாதிக்கத்துடன் மலையாள த்ரிஷ்யம்! 0 பெண்டாள வந்த கயவனைப் போட்டுத் தள்ளிய தன் குடும்பத்தைக் காப்பாற்ற சுயம்புலிங்கம் போடும் நாடகமும், அதை முறியடிக்க காவல் அதிகாரி கீதா தீட்டும் திட்டங்களுமே இந்த திரில்லரின் மூன்று மணி நேரக் கதை. மூன்று மொழிகளில் வெற்றி வாகை சூடிய கதையைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. ஆனால் உலக நாயகனின் நடிப்பைப் பற்றி சொல்ல ஒரு அத்தியாயம் போதாது. பூவோடு சேரும் நாரும் மணம் […]

மண்தான் மாணிக்கமாகிறது

This entry is part 6 of 17 in the series 12 ஜூலை 2015

கிட்டத்தட்ட பத்து நாட்கள் ரஜூலா கப்பலில் பயணப்பட்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார் நயினா முஹம்மது என்கிற நயினார். தேக்காவில் இருக்கும் அலி டீக்கடையில் வேலை பார்க்கத்தான் அவர் வருகிறார். கப்பல் தஞ்சோங் பஹாரில் வந்து நின்றது. மேட்டூர் மல்லில் தைத்த இரண்டு அரைக்கை சட்டை, இரண்டு தறிக் கைலி, லைஃபாய் சோப், 501 சவுக்காரம் அரை பார், கருவப்பட்டை பல்பொடி, ஓர் ஈரிழைத் துண்டு எல்லாமுமாக ஒரு எல் ஜி பெருங்காயத் துணிப்பையில் வைத்து அதன் காதுகளை […]

சாகசம்

This entry is part 7 of 17 in the series 12 ஜூலை 2015

சேயோன் யாழ்வேந்தன் பழுத்த இலை காத்திருக்கிறது காற்றின் சிறு வருகைக்கு ஒரு பறவையின் அமர்வுக்கு அல்லது காம்பின் தளர்வுக்கு தன்னை விடுவித்துக் கொள்ள. பென்டுலம் போல் அசைந்துகொண்டோ உருளையைப் போல் சுழன்றுகொண்டோ தரையிறங்கும் இறுதி சாகசப் பயணத்தை யாரேனும் பார்த்து வியக்கக்கூடுமென அது காத்திருக்கிறது தன்னிடத்தை விட்டு இவ்வளவு தூரம் வந்ததை சிலர் வியந்து பேசவும் கூடும் ஓர் எறும்பைச் சுமந்து அது இறங்கும் அதிசயத்தை இரு கூரிய கண்கள் வியந்து பாடவும் கூடும். பழுத்த இலை […]

வொலகம்

This entry is part 8 of 17 in the series 12 ஜூலை 2015

எஸ்ஸார்சி தேரோடும் வீதிய்ல்தான் அந்த சவம் கிடந்தது.சவம் என்றால் சவம் இல்லை.முண்டம்தான் கிடந்தது. யாருடைய உடல் அது தலை எங்கே போனது. தெருவில் பத்து பேருக்குக்குறையாமல் இங்கும் அங்கும் விறைத்துகொண்டு நடக்கிறார்கள். ஏதோ விபரீதம் நடந்துவிட்டிருக்கிறது.வீதி என்று முத்லில் சொன்னதைத் தெரு என்று கொஞ்சம் மாற்றிச்சொல்லி இருக்கிறேன்.கொலை அல்லவா நடந்து முடிந்திருக்கிறது.ஆகத்தான் அப்படி.. காண்போரிடம் எல்லாம் என்னாய்யா நடந்தது அவன் கேட்டான்.. தெருவில் நடமாடிய பத்து பேரில் ஒருவன் அவனை வாயை மூடிக்கொள் என்று செய்கை காட்டினான். […]

ஆச்சாள்புரம் [ வையவனின் குறுநாவல்களை முன்வைத்து ]

This entry is part 9 of 17 in the series 12 ஜூலை 2015

வளவ. துரையன் மிகப் பெரியதாக மெகா நாவல்கள் வரத்தொடங்கிய பின்னர் சிறிய நாவல்களின் வரவு மிகவும் குறைந்து விட்டது. அதிலும் குறு நாவல்கள் என்ற வடிவம் சுத்தமாக அற்றுப் போய் விட்டது. முன்பு ’கணையாழி’ இதழ் குறுநாவல் போட்டி நடத்தி அவ்வப்போது இந்த வடிவத்துக்குப் புத்துயிர் கொடுத்து வந்தது இச்சூழலில் வையவனின் ’ஆச்சாள்புரம்’ எனும் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுதியைப் படிக்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. . ஆச்சாள்புரம் எனும் சிற்றூருக்கு வேணு ஆசிரியராகப் பணிபுரியப் பொறுப்பேற்கிறான். […]

திரு நிலாத்திங்கள் துண்டம்

This entry is part 10 of 17 in the series 12 ஜூலை 2015

பாச்சுடர் வளவ. துரையன் ஒரே பாசுரம் பெற்ற திவ்யதேச வரிசையில் இடம் பெறுவது திருநிலாத்துண்டம் என்னும் பெயர் பெற்ற திவ்யதேசமாகும். இத்திவ்யதேசம் பல அதிசயங்களைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டதாகும். முதலில் இத்திவ்யதேசம் ஒரு சைவத்திருக்கோயிலின் உள்ளே இருக்கிறது. ஆமாம்; இத்திவ்யதேசம் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோயிலின் உள்ளேதான் உள்ளது. இதேபோல திருக்கள்வனூர் எனும் திவ்யதேசமும் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயிலுக்குள்ளேதான் இருக்கிறது. திருநிலாத்துண்டம் மற்றும் திருக்கள்வனூர் இரண்டும் எப்படி சைவத் திருக்கோயில்களுக்குள் வந்தன என்பது தெரியவில்லை. ஒருவேளை நிலாத்துண்டத்தான் கோயிலும், […]