ஜெயமோகனின் இந்தியா : ராஜன் குறையின் “தர்க்க” ரீதியான மறுப்பும் பூச்சாண்டி வேடக் கலைப்பும்

This entry is part 32 of 32 in the series 1 ஜூலை 2012

நண்பர் ராஜன் வழக்கம்போல அவர் பாணியில் நக்கலும் நையாண்டியுமாக ஜெயமோகனுக்கு பதிலெழுதியிருக்கிறார். http://mdmuthukumaraswamy.blogspot.com/அதனை இங்கே காணலாம். அந்த கட்டுரையிலிருந்து சில முக்கியமான பகுதிகளை இந்த கட்டுரையிலேயே மேற்கோள் காட்டுகிறேன். ராஜனின் கட்டுரை முழுவதும் விரக்தி நெடி அடிக்கிறது. தமிழ் “அறிவுஜீவி எழுத்துக்களின் என்னத்த கன்னையா” என்ற பெயரில் அவருக்கு அழியாத இடம் கிடைத்துவிடும் என்று கருதும் அளவுக்கு புலம்பி வைத்திருக்கிறார். இருந்தாலும், அவற்றை அவர் “தர்க்கரீதியான மறுப்பு” என்ற அடைப்பு வேறு கொடுத்துவிட்டதால், பேசிவிடுவோம் என்று நானும் […]

அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சி

This entry is part 31 of 32 in the series 1 ஜூலை 2012

    (கட்டுரை:  2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அண்டவெளிச் சுற்றுச் சிமிழுடன் விண்வெளி விமானிகள் கையாட்சி நுணுக்கத்தில் விண்வெளிக் கப்பலை இணைத்து பிறகு பிரித்து வெற்றி கரமாய் மீண்டார் பூமிக்கு. சுய இயக்கத்தில் முதன்முதல் விண்சிமிழ் இணைப்பாகி இடம் மாறிச் சோதனை செய்தார். 2020 இல் புது விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றிவரும் விண் வெளியில் நீந்தி மண் மீது கால் வைத்தார் முன்னொரு சைனத் தீரர் ! அமெரிக்க விண்வெளி […]

அன்பிற்குப் பாத்திரம்

This entry is part 30 of 32 in the series 1 ஜூலை 2012

  என் நெடு  நாளைய கனவு அன்று நிறைவேறி இருந்தது.  நான் ஐந்து வருஷமாகத் தொடர்ந்து எப்போதும் பள்ளிக்கூடத்துக்கு  மதிய சாப்பாடு  எடுத்துச் செல்லும் அலுமினிய டிஃபன் பாக்ஸில் அடைக்கமுடியாத அளவிற்கு ஓட்டை விழுந்துவிட்டதால் என் அக்கா பள்ளிக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த ( எவர் ) சில்வர் டிஃபன்பாக்ஸ் அன்று எனக்குப் பள்ளிக்கு எடுத்துச் செல்லக்  கிடைத்திருந்தது . ரொம்பச் சின்னதாகவும் இல்லாமல் அதேசமயத்தில் ஒரு சம்புடம் போல இருந்தாலும் ரொம்பப் பெரியதாகவும் இல்லாமல் அதன் உடம்பில் […]

குழந்தைகள் நலனைப் பலி கொடுக்கும் மதவாதக் கலாசாரம்

This entry is part 29 of 32 in the series 1 ஜூலை 2012

உலகம் முழுவதும் நீக்கப்பட்டாலும், போலியோ பாகிஸ்தானில் மறையவில்லை நான்கு மாதங்களுக்கு முன்னால், இந்தியாவில் ஒரு வருடம் எந்த போலியோ தாக்குதலும் இல்லாமல், ஒரு முழு வருடம் கடந்தது என்பதை அறிந்து உலகம் மகிழ்வடைந்தது. இந்த சாதனை, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், நைஜீரியா என்ற மூன்று நாடுகளே போலியோவினால் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்க ஏதுவானது. போலியோவிற்கு எதிரான போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. உலக சுகாதார நிறுவனம் பதற்றத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது. நைஜீரியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் போலியோவால் […]

ஒரு வெளிர் நீல நிறப் புள்ளி : பூமி மீது ஓர் அன்னியப் பார்வை

This entry is part 28 of 32 in the series 1 ஜூலை 2012

நெல் க்ரீன்ஃபீல்ட்பாய்ஸ் (An Alien View Of Earth by Nell Greenfieldboyce February 12, 2010) இந்த வாரம் ஒரு புகைப்படத்தின் 20ஆம் ஆண்டுவிழா. அது மிகவும் ஆழமான பொருள் பொதிந்த புகைப்படம். இருப்பினும் அந்த புகைப்படம் இருட்டாகவும், ஏறத்தாழ ஒன்றுமே இல்லாததாகவும் தோற்றம் கொண்டது.   1990ல் நாசா வின் வாயேஜர் 1 விண்வெளிக் கலம் எடுக்த புகைப்படம் இது. 4 பில்லியன் மைல்களுக்கு அப்பால் நம் பூமி எப்படி தோற்றமளிக்கும் என்று காட்டும் […]

திண்ணைப் பேச்சு – புத்தகங்களிற்கு எதிரான போர்

This entry is part 27 of 32 in the series 1 ஜூலை 2012

இஸ்மத் சுக்தாய் எழுதிய ஒரு கட்டுரையினை ராகவன் தம்பி இந்த வாரம் அளித்துள்ளார். எப்படி இஸ்மத் சுக்தாய் எழுதிய ஒரு கதைக்காக அவர் மீது வழக்க்குத் தொடரப் பட்டது என்றும் அவர் அதனை எதிர்கொண்டது எப்படி என்றும் முன்னமே மலர் மன்னன் ஒரு முறை சுக்தாய் வரலாற்றை எழுதியவர்களின் கட்டுரையிலிருந்து மொழியாக்கம் செய்து அளித்துள்ளார். http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20708232&format=html ராகவன் தம்பியின் மொழியாக்கம் நேரடியாக இஸ்மத் சுக்தாய் வார்த்தைகளிலேயே வெளியாகிறது. புத்தகத்திற்கு எதிரான போர் என்பது எல்லாக் காலங்களிலும் கருத்துகளை […]

மணமான அந்தப் பெண்களின் பெயரில்…

This entry is part 26 of 32 in the series 1 ஜூலை 2012

  உருது மூலம் – இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி மாலை நான்கு அல்லது நாலரை மணி இருக்கலாம். வாசலில் அழைப்பு மணி அலறியது.  வேலைக்காரன் ஓடிச்சென்று கதவைத் திறந்தவன் கலவரமான முகத்துடன் ஓடிவந்தான். “யார் அது?” “போலீஸ்”.  இந்தத் தெருவில் ஏதாவது ஒரு வீட்டில் களவு போனால் இங்குள்ள எல்லா வீடுகளின்  வேலைக்காரர்களிடம் முதலில் விசாரணை நடக்கும். “போலீஸ்?” என்று எரிச்சலுடன் கேட்டுக் கொண்டே பரபரப்புடன் எழுந்தார்  ஷாஹித். “ஆமாம் […]

துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி

This entry is part 25 of 32 in the series 1 ஜூலை 2012

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் ஏப்ரல் ஒன்றாம் தேதி பிற்பகல்  அண்ட்டல்யாவின் பழைய நகரத்தோடு கழிந்தது. ஒரு தேசத்தைப்போலவே    ஊர் அல்லது நகரத்திற்கும் நெடிய வரலாறுகளுண்டு. இலக்கியம் போன்று பாடல் போன்று இசைபோன்று கடந்த காலத்திய நீங்காத நினைவுகளை மீட்கவென்று ஊரின் ஒரு தோப்போ, குளமோ நகரத்தின் கோபுரமோ, கோட்டை மதிற்சுவரோ காலக் கறையானுக்கு இரையாகமல் நிற்கலாம். இம்மகிழ்ச்சியும், களிப்பும் அந்தி நேரக் காற்றுபோல மனதோடு சலசலப்பவை கல்வெட்டுபோல காலத்தை எதிர்கொள்ளும் எச்சங்கள்  அவை வரலாற்றின் […]

சின்னஞ்சிறு கிளியே…!

This entry is part 24 of 32 in the series 1 ஜூலை 2012

கோமதி   மாடி வராண்டாவில் பளபளவென்று உடையணிந்தபடி பட்டாம்பூச்சிபோல் நின்றிருந்த ஸஹானாவை கீழே இருந்து அர்ஜுன் கூப்பிட்டான். “ஸஹானா” என்று ராகத்துடன்! உடனே, “ஹாய்!” என்று கையசைத்துச் சிரித்தாள் ஸஹானா.   “ஆச்சு, மணி நாலடிச்சாச்சு. கிளம்பிட்டா ராணி! இனிமே இருட்டினாத்தான் உள்ளே நுழைவாள்”, என்று அம்மா பாட்டியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.   “ஆமா, நாம தான் உள்ளே அடைஞ்சுண்டிருக்கோம், அதுபாட்டிலே வெளியே போய்ட்டுவரட்டுமே, அதுக்கென்ன?“ என்று பாட்டி ஸஹானாவுக்குச் சார்பாய் பேசினாள்.   கோகுலத்தில் கண்ணன் வளர்ந்ததுபோல் […]

அஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்

This entry is part 23 of 32 in the series 1 ஜூலை 2012

  தமிழகத்தின் தொன்மையான வரலாற்றில் அரேபிய வணிகர்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.  தமிழகத்தில் முத்தும் பவளமும், பொன்னும், மணியும், அகிலும் சந்தனமும் ஏற்றுமதி செய்யப்பட்டன.  தமிழக அரேபியத் தொடர்பை “நீரின் வந்த நிமிர்ப்பரிப் புரவி’ என்ற பட்டினப்பாலைப் பாடல் சுட்டிக்காட்டுகிறது தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சோழ நாட்டின் ஆட்சிஎல்லைக்கு உட்பட்டிருந்தது. அரேபியர் சோழமண்டலக் கரையை மாபார் என்று குறிப்பிடுகின்றனர்.  கடலூர், பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், கோவளம், காயல்பட்டினம், பாண்டிச்சேரி, கீழக்கரை, தூத்துக்குடி என இதன் துறைமுகப்பகுதிகள் விரிவடைந்து […]