1.முடித்தல் தொலைபேசிப் பேச்சை முடிக்கும்போதெல்லாம் என் குரலில் வருத்தம் படிந்துவிடுகிறது மெதுமெதுவாக இறகையசைத்து வானைநோக்கி எழுகிற ஆனந்தம் ஏன் பறந்தபடியே இருப்பதில்லை? இன்னும் நீட்டிக்கும் வாய்ப்புக்காக உன்னுடன் சொல்லிப் பகிர்ந்துகொள்ள நினைவுகளைச் சீய்க்கிறது மனக்காகம் இந்த முறையாவது சிரித்தபடியே விடைதரவேண்டுமென எடுத்த முடிவு பனித்துளியாக விழுந்து கரைந்துபோகிறது சரி, வைக்கட்டுமா என கேட்டே தீரவேண்டியிருக்கிறது திசையெங்கும் திரும்பித் துள்ளிப் பறக்கும் பட்டத்தின் கயிற்றை அறுப்பதுபோல வைத்த பிறகுதான் சொல்ல மறந்த கதையொன்று உதிக்கிறது அடுத்த முறையாவது வருத்தம் […]
பாவண்ணன் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் மீரான் மைதீன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி பல நண்பர்களிடம் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அக்கதையின் பெயர் ’மஜ்னூன்’. அரபுமொழியில் அது ஒரு ஏளனச்சொல். பைத்தியம் என்பதுபோல. அரபு சிறையில் அகப்பட்ட ஒருவன், விடிந்தால் தண்டனை என்கிற நிலையில் தன் பிரியமான மனைவிக்குக் எழுதும் கடிதம்தான் அச்சிறுகதை. வேலை தேடிச் சென்ற அரபுநாட்டில், உரிய பதிவுச்சீட்டு இல்லாமல் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு தப்பித்தப்பி ஓடி, […]
பவள சங்கரி மச்சி, எங்கடா இருக்கே, சீக்கிரம் வாடா.. ஷாப்பிங் போகணும்னு சொன்னேனில்ல.. எங்கடா, இப்பதான் டூட்டி முடிச்சு வெளியே கிளம்பறேன். வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும். பீக் ஹவர்.. பஸ் கிடைச்சி வரணுமே.. அப்புடி என்னடா அவசரம் உனக்கு.. வீக் எண்ட் போலாமே மச்சி…” “இல்லடா, என்னோட போன் ரொம்ப மக்கர் பண்ணுது.. உடனடியா வாங்கியாகணும். முக்கியமான டேட்டாஸெல்லாம் அழிஞ்சி போச்சுன்னா என்ன பண்றதுன்னு பயமா இருக்குடா.. இன்னைக்கு சம்பளம் வாங்கினேன். அதான் […]
செல்லவில்லை. இல்லை செல்ல முடியவில்லை. செல்ல முடிந்திருந்தாலும் ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடியுமா? ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடிந்தாலும் இற்றைப் பொழுதில் இரு பறவைகளில் ஒரு பறவை தனியாய் இன்னொன்றை நினைந்திருப்பதைப் போல அற்றைப் பொழுதிலும் அவனை நினைந்திருந்திருப்பேன் என்பதன்றி வேறென்ன செய்திருக்க முடியும்? சென்றிருக்க முடியும் என்பதால் இப்படியெல்லாம் என் வாலை நானே விழுங்குகிறேனா? செல்லவில்லை என் பால்ய சிநேகிதன் சாவுக்கு என்பது நினைத்தால் தேள் கொட்டும் இன்னும். கு.அழகர்சாமி
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 13 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 49, 50, 51, 52 இணைக்கப்பட்டுள்ளன.
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (That Shadow My Likeness) (Full of Life Now) என் நிழல் என்னைப் போலவே ! முழுத் துடிப்புள்ள என் வாழ்வு ! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 1. என் நிழல் என்னைப் போலவே ! என்னைப் போலிருக்கும் என் நிழல் முன்னும் பின்னும் போகும், வாழ்வு […]
முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை, 630561 அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகிவிடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக […]
ரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் செங்கதிரும் அவரது நண்பர்களும் செங்கதிர் தாம் சில கதைகளை மொழிபெயர்த்ததோடு ரேமண்ட் கார்வரின் வாழ்க்கை விவரங்களோடு தன் ரசனை சார்ந்த ஒரு நீண்ட முன்னுரையும் தந்துள்ளார். எனக்கு ரேமண்ட் கார்வர் புதிய அறிமுகம். இதற்கு முன் படித்திராத, கேள்விப்பட்டும் இராத பெயர். ரேமண்ட் […]
12. ஓட்டமும் நடையுமாக ராமரத்தினம் கோவிலின் நுழை வாயிலை யடைந்த போது அவன் உடம்பு முழுவதும் வேர்வையில் சில்லிட்டிருந்தது. புழுக்கமான அந்நிலையிலும் கோவிலின் அரசமரத்துக் காற்றின் குளுமையால் வேர்வையின் பிசுபிசுப்புச் சற்றே தணிந்த உணர்வை அனுபவித்தவாறு அவன் விரைவாய்க் கோவிலுள் நுழைந்தான். கோவில் பூட்டப்படும் நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்ததை ஆளரவம் குறைந்திருந்ததி லிருந்து அவன் புரிந்துகொண்டான். மின் தடை ஏற்பட்டிருந்தது. முதலில் அவன் எண்ணெய் விளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில் இருந்த பிராகாரத்துக்குப் போனான். அங்கே தட்சிணமூர்த்தியின் சன்னதிக்குப் பின்புறத்திலிருந்து […]
டாக்டர் ஜி. ஜான்சன் 25. அரங்கேற்றம் பாரதி நாடக் குழுவின் முதல் கூட்டம் வெகு விமரிசையாக நடந்தேறியது.பதினைந்து பேர்கள் ஒன்றுகூடிய அக் கூட்டத்தில் முறைப்படி செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. நான் அப்போது என்னுடைய பள்ளியின் ராபிள்ஸ் தமிழ் மாணவர் கழகத்தின் தலைவராக இருந்த அனுபவத்தால் கூட்டத்தை சிறப்பாக வழி நடத்தினேன். பாரதி நாடகக் குழு அமைத்ததின் நோக்கத்தை எடுத்துரைத்தேன். உடனடியாக முதல் நாடகத்தை வருகிற தமிழர் திருநாள் விழாவில் அரங்கேற்றம் செய்யப்போவது குறித்து விளக்கினேன். நாடகத்தின் பெயர் […]