இன்று எந்தப் பெருமழையும் பெய்யவில்லை. இன்று எந்த தலித்தும் கொல்லப் படவில்லை. இன்று எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவில்லை. இன்று எந்த பெருநடிகன் படமும் வெளியாகவில்லை. எந்த அபிமானப் பெருந்தலைவரும் மறைந்து விடவில்லை. எந்த கட்டளையும் வரவில்லை , தெண்டனிட்ட கட்சியிலிருந்து. எந்த தொலைவண்டியும் கவிழவில்லை. எங்கும் துப்பாக்கிச் சூடு இல்லை. எப்படிப் பொங்கி வரும் கவிதை? நடிகன் வாய்ப்புக் கொடுத்தால் இக்கால நாயகன். அரசியல் தலைவனோ , எழுத்து விற்பனை மாயவனோ பணம் பண்ண வழி செய்தால் […]
_ லதா ராமகிருஷ்ணன் (*WELFARE FOUNDATION OF THE BLIND என்ற பார்வையற்றோர் நன்நல அமைப்பு பார்வையற்றோரின் பிரச்சினைகளையும், ஆற்றல்க ளையும் எடுத்துக்காட்டும் எழுத்தாக்கங்களையும் பார்வையற்றோரின் எழுத்தாக்கங்களையும் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. இவ்வாண்டு இந்த ஜூன் மாதம் 16 ஆம் நாள் அன்று நடைபெற்ற ஆண்டுவிழாவில் தமிழாசிரியை சு.ரம்யாவின் கட்டுரைத்தொகுப்பு(50 பக்கங்கள்) வெளியிடப்பட்டது. நூலை உரிய நேரத்தில் நேர்த்தியாக வெளியிட்டுத் தந்தவர்கள் எங்கள் அமைப்பின் நூல்வெளியீட்டு முயற்சிகளுக்கு என்றும் உறுதுணையாக இருந்துவரும் புதுப்புனல் பதிப்பக நிறுவனரான நண்பர்கள் ரவிச்சந்திரன் […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது? நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால் கண்களைத் துடைத்துவிடக்கூடும்…. கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள் சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும் மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து வாய்நிறைய சிரிக்கக்கூடும்…. நெடுஞ்சாண்கிடையாகக் காலடியில் விழுந்தால் தவறி விழுந்துவிட்டோமோ எனப் பதறி தாங்கிப் பிடிக்கத் தாவிவரக்கூடும்….. அதுவும் அடிபட்ட குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கோருவது _ அவர்களின் வலிகளை வாங்கிக்கொள்ள வழியில்லாது?
நிஜத்தைச் சொல்லிவிட்டு கனவு செத்துவிட்டது கடவில் விழுந்த காசு செலவு செய்ய முடியாது கிளைகளை துணைகளை அறுத்துவிட்டு கடலானது ஆறு தோம்புக்காரர் முதுகில் என் மஞ்சள் டீ சட்டை வெள்ளிக்கிழமை தொழுகையில் என் ஒரு வெள்ளிக்காசு அந்த நோயாளிக்கு இழப்பு நான் படித்த என்னைப் படித்த புத்தகங்கள் நூலகங்களுக்கு நன்கொடை என் எழுத்துப்படிகள் தோம்பில் தற்கொலை மின்தூக்கிக் கடியில் என் ரோஜாத் தொட்டி உயிர்விடப் போகிறது நான் கவிதை எழுதும் மூலையில் உலர்கின்றன உள்ளாடைகள் அடையாளம் இழந்தது […]
ஒரு மாணவன் கணவனாகிறான். கணவன் அப்பாவாகிறான். அப்பா தாத்தாவாகிறான். பிள்ளைகள், பேரர்கள். வெவ்வேறு நாடுகள். வெவ்வேறு கூடுகள் குஞ்சுகள் என்று எல்லாரும் சிதறியபின் தாத்தாவுக்கு ஓர் ஆசை. மீண்டும் எல்லாரையும் ஒருசேரப் பார்க்கவேண்டுமாம். குறிஞ்சி பூப்பதுபோல், அரிய சூரிய கிரகணம் காணக் கிடைப்பதுபோல் யாருக்காவதுதான் அது சாத்தியமாகிறது. அந்த ஆசை எனக்கு சாத்தியமாகி யிருக்கிறது. எல்லாரும் அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரின் விளிம்பில் இருக்கும் டப்ளின் நகரில் என் மகள் வீட்டில் ஒன்று கூடினோம். இதோ எல்லாரும் கூடி […]
டாக்டர் ஜி. ஜான்சன் டாக்டர் பார்த் கழுத்தில் போட்ட ரோஜாப்பூ மாலையை கழற்றாமலேயே ஒளி வாங்கியின் முன் கம்பீரமாக நின்று சுமார் அரை மணி நேரம் ” ட்ரூப்பா ” திட்டம் பற்றி உரையாற்றினார். அவருக்குப் நாங்கள் அன்போடு அணிவித்த மலர் மாலைக்கு அவர் மரியாதையை அவ்வாறு தருகிறார்.( நம்மவர்களுக்கு ஆசையோடு ஒரு மாலையை அணிவித்தால் அதை உடன் கழற்றி விடுகின்றனர். அந்த மாலைக்குக் கிடைக்கும் மரியாதை அந்த ஒரு நிமிடம்தான்.அதை அணிவிக்கும் கணம்தான் அதற்குப் பெருமை.) […]
[July 26, 2018] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/zMon3OZ7r8I ESA Mars Express Probes for Liquid Water Lakes செவ்வாய்க் கோளில் முதன்முதல் அடித்தளத் திரவநீர் ஏரி கண்டுபிடிப்பு இதுவரைச் செந்நிறக்கோள் செவ்வாயில் நீரோட்டத் தடங்களும், துருவப் பகுதிகளில் உறைந்து கிடக்கும் பனிப்பாறைகளும், ஈர்மைக் கருகில் உருவாகும் கனிமங்களுமே [Minerals] நாசா & ஈசா விண்ணுளவிகளும், தள ஊர்திகளும், தரை உளவிகளும் […]
ஸிந்துஜா முகநூல் ஒரு முகமூடி அணிந்தவர்களின் விளையாட்டு அரங்கமாகி விட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து ‘சட்’டென்று இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை. தயக்கமும் இல்லை. முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே. சிலருக்கு ஜாதி, சிலருக்கு மதம், சிலருக்குப் பொறாமை, பலருக்கு டைம் பாஸ் என்று இந்த விளையாட்டு அரங்கத்தில் கூவம் விரிந்து ஓடுகிறது. சற்று விவரமான ஆட்கள் ,அவர்கள் விவரமான ஆட்கள் என்பதால், உண்மையைப் பேசுவதற்கு வெட்கப்படாதவர்களாகவும் […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முடிவில்லாப் பேய் மழை போல் வார்த்தைகள் பறக்கும் காகிதக் குவளைக் குள்ளே ! தாறுமாறாய் நடப்பர், கடப்பர் அவரெலாம் உலகத்தின் ஊடே நழுவி ! துயர்க் கடல் ! இன்ப அலைகள் தடுமாறிச் செல்லும், என்னைக் கட்டித் தழுவி, வெளிப்படை யான என் மனத்தின் ஊடே ! ஜெய் குருதேவா ! ஜெய் ஓம் ! எதுவும் மாற்றா தென் உலகை ! எதுவும் மாற்றா தென் உலகை ! […]
டாக்டர் ஜி. ஜான்சன் ( TONSILLITIS ) நம்முடைய தொண்டையின் பின்புறத்தில் இரு பக்கங்களிலும் சதை போன்ற இரு உறுப்புகள் உள்ளன. இவை நோய்க் கிருமிகள் சுவாசக் குழாய்களினுள் புகாமல் சல்லைடைகள் போன்று தடுத்து நிறுத்துகின்றன. இவை எதிர்ப்புச் சக்தியையும் உண்டுபண்ணுகின்றன. இவற்றைதான் ” டான்சில் ” அல்லது தொண்டைச் சதை என்கிறோம். சில வேளைகளில் நோய்க்கிருமிகள் இவற்றையே தாக்குகின்றபோது இவை வீக்கமுற்று வலிக்கும். இதைத்தான் “: டான்சிலைட்டிஸ் ” அல்லது தொண்டைச் சதை வீக்கம் என்கிறோம். […]