`ஓரியன்’ – 3 , 4

This entry is part 12 of 12 in the series 4 ஜூலை 2016

இவர்கள் குறுக்கே வந்து தடுத்து, ஏதோ கையால் சமிக்ஞை காட்ட அவர்கள் திரும்பிப் போனார்கள். “ தோழர்களே! பிரிவு—88 ன் தலைவரின் சார்பாக உங்களை வரவேற்கிறோம். பயம் வேண்டாம் அவர்கள் உங்களின் உடையைப் பார்த்துதான் நீங்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்த எதிரிகள் என்று துரத்தினார்கள். உங்களின் இந்த உடையைக் களைஞ்சிடுங்க.இங்கே கிருமிகள் ஆபத்து எதுவுமில்லை.” —-இவர்களுக்கு அவர்கள் பாணியிலான மாற்று உடை அணிய ஏற்பாடு செய்தார்கள்.சற்று ஒதுக்குப்புரமாக சென்று இருவரும் உடையை மாற்றினார்கள். அவர்களுடன் வந்திருந்த ஸோம்னா […]

ஈரானின் மஹிஷாசுரமர்தினி

This entry is part 11 of 12 in the series 4 ஜூலை 2016

குருவீரன்   தேலமான் (Deylaman) என்ற வடக்கு ஈரான் பிரதேசத்தில் இந்த வெள்ளி கமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களும், வரலாற்றாய்வாளர்களும், இது துர்கா மஹிஷாசுரமர்தனி என்று அடையாளம் காட்டுகின்றார்கள். (1) இன்னும் சுவாரஸ்யமாக, மிக அதிக தரம் வாய்ந்த வெள்ளி நாணயங்கள் உருவாக்கத்துக்கும் இது புதிய பார்வைகளை தருகிறது. இது கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏழாம் நூற்றாண்டின் பின் பகுதியில் இருந்த ஷாஹி மற்றும் ஜுன்பில் அரசுகளின் மீது நடந்த அரபிய […]

ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை

This entry is part 10 of 12 in the series 4 ஜூலை 2016

ப.கண்ணன்சேகர் ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை இந்திய நாட்டினை எழுச்சியுற செய்திட இளையோரை தூண்டிய இன்முக பேச்சாளர்! சிந்தனை கொண்டிட செழிப்போடு வாழ்ந்திட சித்திரை நிலவென சொல்வளம் வீச்சாளர்! வந்தனம் செய்திட வணங்கிடும் நாட்டினை வ்லிமையின் பாரதம் வேண்டிய பன்பாளர் சுந்தர வடிவாக சுதந்திரம் கண்டிட சுடர்மிகு திரியென சொல்லிடும் நெறியாளர் ! பரமாம்ச சீடராய் பகுத்தறிவு பெற்றிட பாரெல்லாம் ஆன்மீகப் பணிகளை செய்தவர்! உரமேற்றி இந்தியரை உள்ளத்தால் உழுதிட உண்மையின் […]

புரியாத புதிர் 

This entry is part 1 of 12 in the series 4 ஜூலை 2016

ருத்ரா அவன் கேட்டான். அவள் சிரித்தாள். அவள் கேட்டாள். அவன் சிரித்தான். அந்த சிரிப்புகளும் கேள்விகளும் சிணுங்கல்களும் இன்னும் புரியவில்லை. இருவருக்கும் புரியவில்லை அது காதல் என்று. காதலுக்கு மட்டுமே புரிந்தது அது காதல் என்று. காதல் என்று புரிந்தபோது வெகு தூரம் வந்திருந்தார்கள். அடையாளம் தெரியாத‌ மைல் கற்களோடு தாலி கட்டி மேளம் கொட்டி.. குடும்பம் குழந்தை குட்டிகள் என்று. வேறு கணவன் வேறு மனைவி எரிமலையில் அதே உள்ளங்கள் வெந்து முடிந்தும் உருகி வழிவது […]

காப்பியக் காட்சிகள் சிந்தாமணியில் ​உழவும் ​நெசவும்

This entry is part 2 of 12 in the series 4 ஜூலை 2016

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com   மனிதன் தனது வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் இயற்கையாகக் கிடைக்காதபோது அவற்றைச் செயற்கையாக உருவாக்க முயன்ற முயற்சியே தொழில்களாகும். மனிதன் பல்வேறு தேவைகளின் அடிப்படையில் பலவகையான தொழில்கள் உருவானது. இவ்வகையில் உருவான தொழில்களைச் செய்வோர் அத்தொழில்களின் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டனர். இதுவே பிற்காலத்தில் சாதிகளாக மாற்றம் பெற்றன. சீவகசிந்தாமணியில் உழவு, வணிகம், நெசவு, கொல்லு, தச்சு உள்ளிட்ட பலவகையான தொழில்கள் […]

மயிர் நீப்பின்…

This entry is part 3 of 12 in the series 4 ஜூலை 2016

  சேயோன் யாழ்வேந்தன் உடைந்த வளையல்களை, மல்லிகைச் சரத்தை, ஏன் ஒருமுறை தாவணியைக் கூட உதறிவிட்டுத் தப்பியிருக்கிறாய். கடைசியில் கண்ணீர்த்துளிகளை உதறிவிட்டு கல்யாணமும் செய்துகொண்டாய். உதறுவதற்கு இங்கே என்ன இருக்கிறது உதிர்கிற ரோமம் தவிர? seyonyazhvaendhan@gmail.com

தொடுவானம் 126. ஹிப்போகிரெட்டஸ் உறுதிமொழி

This entry is part 4 of 12 in the series 4 ஜூலை 2016

                                                       டாக்டர் ஜி. ஜான்சன்           126. ஹிப்போகிரெட்டஸ்  உறுதிமொழி           மருத்துவ வகுப்பு வெளி நோயாளிகள் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அமைந்திருந்தது. விரிவுரை ஆற்றும் மேடையும் மாணவ மாணவிகள் அமர்ந்து குறிப்புகள் எடுக்கும் வகையில் மேசை நாற்காலிகளும் சொகுசாக இருந்தன. டாக்டர் மில்லர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இளம் வயதினர். அவர்தான் எங்களுக்கு மருத்துவப் பாடத்தின் அடிப்படைகளைச் சொல்லித் தருவார். அவருடடைய ஆங்கில உச்சரிப்பு வேறு விதமாக இருந்தாலும் புரிந்துகொள்ளும் வகையில் இருந்தது. அவர் முதலில் […]

புறக்கோள் புளுடோவில் அடித்தளப் பனிக்கடல் உறைந்திருப்பதைப் புதுத் தொடுவான் விண்ணுளவி உறுதிப் படுத்தியுள்ளது

This entry is part 5 of 12 in the series 4 ஜூலை 2016

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FvksfIDVGAA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LgzM-uV81YE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ_Wp4bcLFI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KfODJpfS0fo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html ++++++++++++++++++++ புதுத் தொடுவான் விண்ணூர்தி முதன்முதல் நெருங்கி புளுடோ பனிக்கடல் இருப்பைக் கூறும் . அணுசக்தி உந்து ஆற்றலில் மிகுந்த வேகத்தில் கடந்து செல்கிறது விண்கப்பல். புளுடோ வையும் சாரன் துணைக் கோளையும். நாற்பது ஆண்டுக்கு முன் பறந்த முதலிரு வாயேஜர் விண்ணூர்திகள் காணாத விந்தைகள் காணும் ! புளுடோ வுக்கும் அப்பால் பறந்து […]

மலர்ந்துவிடச் செய்துநிற்போம் !

This entry is part 6 of 12 in the series 4 ஜூலை 2016

( எம் . ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா ) கடவுளில் காதல் கொள்ளு கல்வியில் காதல் கொள்ளு கடமையில் காதல் கொள்ளு காதலில் காதல் கொள்ளு இடர்தரும் விதத்தில் காதல் எற்படும் பொழுது ஆங்கே குறையுனை வந்தே சேரும் குழப்பத்தில் இருப்பாய் நாளும் ! ஒருதலைக் காதல் செய்தால் உளமெலாம் வருத்தம் சேரும் நிலவதைப் பார்க்கும் போதும் நெருபென நினைக்கத் தோன்றும் அளவிலா துன்பம் அங்கே அகத்தினை உடைத்தே நிற்கும் ஒருதலைக் காதல் என்றும் உயிருக்கே […]

கவித்துவப் புள்ளிகள் – செல்வராஜ் ஜெகதீசனின் ‘சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை’ –

This entry is part 7 of 12 in the series 4 ஜூலை 2016

பாவண்ணன் ஒரு புறக்காட்சியில் மானுட வாழ்வின் சாரத்துக்கு இசைவான அம்சத்தைக் கண்டடைவதை ஒரு பேரனுபவம் என்றே சொல்லவேண்டும். கவிதைக்குள் அந்த அனுபவத்தைப் பொருத்தமான சொற்களால் கட்டியெழுப்பும்போது, அது மகத்தான அனுபவமாக உருமாறிவிடும். பிறகு, கச்சிதமாகச் செதுக்கியெடுக்கப்பட்ட ஒரு கோவில் சிற்பம்போல மொழிக்குள் அந்த அனுபவம் நிலைத்திருக்கத் தொடங்கிவிடும். எழுத்துப் பயணத்தில் இந்தத் தேடலின் விசையால் உந்தப்படாத கவிஞர்களே இல்லை. அந்தரங்கம் தொகுதியின் வழியாக தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் செல்வராஜ் ஜெகதீசன். சிவப்பு பச்சை மஞ்சள் […]