Posted inகவிதைகள்
ஒரு கேள்வி
சேயோன் யாழ்வேந்தன் காற்றும் வேண்டும் காகிதம் வேண்டும் நூலும் வேண்டும் வாலும் வேண்டும் கையும் வேண்டும் பறக்கவைக்கும் பக்குவம் வேண்டும் எதுவும் புரியாமல் எழுதவும் தெரியாமல் எளிதாய் வாங்க இது என்ன கவிஞன் என்ற பட்டமா என்ன? seyonyazhvaendhan@gmail.com