அ. « Tout ce que j’ai le droit de faire est-il juste ? » உரிமையின் பேரால் செய்வதனைத்துமே நியாயமா ? அல்லது சரியா ?. இக்கேள்வி அண்மையில் பள்ளி இறுதி வகுப்பு பொது த் தேர்வு மாணவர்களில் இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக தேர்வு செய்திருந்தவர்களுக்கு தத்துவப் பாடத்தில் கேட்கப்படும் இரண்டு கேள்விகளில் இரண்டாவது. இக்கேள்வி சட்டம் நமக்கு அனுமதிக்கிற உரிமைகள் பற்றி பேசுகிறது. அனுமதிக்காத உரிமைகள் அல்லது மறுக்கிற உரிமைகள் பற்றி கேள்வி எழுப்புவதில்லை. […]
சாகித்ய அகாதெமியின் ‘சிறுவர் கதைக் களஞ்சியம்’ எனும் சிறுவர் கதை நூல் அறிமுகம் : சுப்ரபாரதிமணியன் பேசியதில் : பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் )., 2. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் 3, சிறுவர்கள் பற்றிய இலக்கியம் என பல்வேறு பிரிவுகள் இருப்பதை சிறுவர்கள் இலக்கியம் பற்றிச் சொல்லலாம். இன்று பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் ) அதிகமாக உள்ளது. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் அதிகம் […]
மகிழினி காந்தன் சுவிஸ் ஈக்களைப்போல் அலைபாயும் விழிகள் காற்றில் விரித்த புத்தகம் போல் பட படக்கும் நெஞ்சம் மேல் மூச்சில் வந்து போகும் சுவாசம் வெற்றிடத்தில் தேடிப்பார்க்கும் கைகள் எதிர்பார்ப்பும் அங்கலாய்ப்பும் கதிர் கொண்டு கவிழும் நெற்பயிர்போல் தாங்காது வீழாது தவிக்கும் என் நெஞ்சுக்கு உன் வார்த்தை ஒன்றே தேற்றும் அமிர்தம்!
இளஞ்சேரல் கதைகளின் வழியாக பிறர் வாழ்வின் கணங்களை அறிந்து கொள்வது தனித்துவம்தான். நமக்குக் கதைகள் அவர்களுக்குச் சம்பவங்கள். அகிலா தன் அருகாமை உறவுகளின் இயல்புகளைக் காட்சிகளாக்கி உள்ளார். முதல் சிறுகதை நூல் எனச் சொல்லிவிட முடியாதபடி சிறந்த கதைகள் இடம் பெற்றுள்ளது. பால் பேதமற்ற படைப்பு மொழியில் தமிழ்ச்சிறுகதை உலகிற்கு மேலும் ஒரு சிறந்த தொகுப்பு. அருகாமை உறவுகளிலிருந்து பெறுகின்ற அனுபவங்களில் புதுமையான வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்வதில்தான் கதைசொல்லியின் பணி இருக்கிறது. அந்த வகையில் […]
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++ [85] மத வெறுப்பாளி யோடு மது விளையாடும், என் மதிப்பு அங்கியைப் பறிக்கும் முழுதாய், மது விற்போர் வாங்குவது எதுவென வியப்பேன் நான். விற்றதில் பாதிக்குடி வெகு முக்கியச் சரக்கு. [85]. And much as Wine has play’d the Infidel, And robb’d me of my Robe […]
கவிதாயினி மீனாட்சிசுந்தரமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுப்பு “வனம் உலாவும் வானம்பாடி”. பெரும்பாலும் எல்லாக் கவிதைகளும் இயற்கையையே பாடுபொருளாகக் கொண்டுள்ளன. அதிலும் சூரியன் நிறைய கவிதைகளில் காணப்படுகிறான். கவிதைகளுக்கேற்ற படங்களா? அல்லது படங்களுக்கேற்ற கவிதைகளா? என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது. படங்கள் இருப்பதால் எக்கவிதைக்கும் தலைப்பு அளிக்கவில்லை போலும். முதல் கவிதையில் சூரியன் அப்போதுதான் உதிக்கத் தொடங்குகிறான். அதைக் கவிதாயினி செங்கதிரோன் “உலா போகப் புறப்பட்டான்” என்கிறார். அதுவும் ஒற்றை யானையில் கிளம்பப் போகிறான். அவன் வந்து […]