ஒரு தவறான வாயில் வழியாக …

This entry is part 3 of 11 in the series 11 ஜூன் 2017

  கூடையில் சுமந்து சென்ற சொற்களைக் கொட்டிக் கவிழ்த்தான் அவன்   தீயின் தகிப்புடனான அவள் எதிர்வினையின் வீச்சில் அடிக்கடி சிறைப்பட்டு மீள இயலாமல் திணறினான்   அவன் அறியாமை நைந்து நைந்து இருள் இழை இழையாக அவனைவிட்டு விலகியது   திராவகம் வீசப்பட்ட பெண் முகம் போல அவன் முகம் சிதைந்து கிடந்தது   பிரவேசம் வெகு எளிமையாகவும் வெளியேறுதல் அவனுக்கு உயிர் வாதையாகவும் இருந்தது   இருளோடு நுழைந்து சுயத்தின் கசுடுகள் உதிர உதிர […]

கல்வி நிலையங்களும் விளம்பர (குறும்)படங்களும்

This entry is part 5 of 11 in the series 11 ஜூன் 2017

எஸ்.ஹஸீனா பேகம் நேற்று தற்செயலாக லோக்கல் டிவி சேனலில் வரும் கல்வி நிலையத்திற்கான விளம்பர படத்தினை காண நேர்ந்தது.விளம்பர படம் அல்ல விளம்பர குறும்படம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த விளம்பர காட்சியை பாா்க்கும்போது அந்த பள்ளி முதல்வருடனான ஒரு சந்தி்ப்பு நினைவுக்கு வந்தது. சில வருடங்களுக்கு முன்பு நான் பணிபுரிந்த பள்ளியின் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மேற்குறிப்பிட்ட பள்ளி முதல்வா் அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியா்களை மட்டும் அமர்த்தி பள்ளியையும் கல்வித்தரத்தினையும் முன்னேற்றுவதற்கான […]

எனது ஜோசியர் அனுபவங்கள்

This entry is part 2 of 11 in the series 11 ஜூன் 2017

  ஜோதிடர்களுடான எனது அனுபவங்கள் சுவையானவை! அப்போது நாங்கள் மாம்பலத்தில் இருந்தோம். எனது தகப்பனார் ஒரு வாழ்க்கையைத் தொலைத்த ஆசாமி. வருடத்தில் எந்த மாதத்தில் வேலையிலிருப்பார். எப்போது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருப்பார் என்பது எந்த சித்தரும் கணிக்க முடியாத ஒன்று. இதனாலேயே ஒரு வேலை கிடைத்தவுடன் விடாமல் அதைப் பிடித்துக் கொண்டு முன்னேறியவன் நான். ஸ்திரத் தன்மைக்கு ஏங்கும் மனதாக என் மனது ஆனதற்கு அப்பாவும் காரணம். அதற்காகவேனும் அவருக்கு நான் நன்றி சொல்ல […]

பாட்டியின் சுருக்குப் பையும், பழைய செல்லாக் காசுகளும்…!

This entry is part 4 of 11 in the series 11 ஜூன் 2017

  ஆ.மகராஜன், திருச்சி பொங்கலுக்காகப் பரணில் கிடந்த  பழைய பொருட்களை  ஒதுங்கவைத்துக் கொண்டிருந்தபோது துருப்பிடித்த ஒரு பழைய டிரங்க் பெட்டிக்குள் அந்த சுருக்குப்பை கிடைத்தது… அப்பொழுது யாரும் அக்கறையோடு  கண்டு கொள்ளாத, பாட்டி கடைசி வரை தன் இடுப்பிலேயே வெள்ளைப் புடவைக்குள் சொருகிப் பாதுகாத்து வைத்திருந்த பை அது…   இறுகிப்போயிருந்த சுருக்குக் கயிற்றைப் பிரயத்தனப்பட்டு இழுத்துத் திறந்ததும், உள்ளே பல்லாண்டுகளாய் அடைபட்டுக் கிடந்த எராளமான  செல்லாக் காசுகள் ‘கலகல’வென தரை முழுக்கச் சிதறி உருண்டோடின…   […]

இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது

This entry is part 6 of 11 in the series 11 ஜூன் 2017

Posted on June 10, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ நிலவைச் சுற்றிய சந்திரயான் -1 உலவிச் சென்று நாசா துணைக்கோளுடன் வடதுருவத்தில் ஒளிமறைவுக் குழியிலே பனிப்படிவு கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று பாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக ! சந்திரனில் சின்னம் வைத்தது இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் இப்பயணம் பந்தய மில்லை ! விந்தை புரிந்தது இந்தியா ! சந்திராயன் -2 […]

ஆயா

This entry is part 7 of 11 in the series 11 ஜூன் 2017

  காலிங் பெல் மணி அடித்தவுடன், படுக்கையில் இருந்து எழுந்து வெளிக்கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த ஆச்சர்யம் புரிந்தது பூரணிக்கு.   தன்னால் எப்படி நடக்க முடிகிறது. ஸ்டிரோக் வந்து ஒரு வருடமாய் உணர்வற்று கிடந்த தனது வலது கால் குணமாகிவிட்டதா..   நம்ப முடியவில்லையே..   ஆச்சர்யமும், சந்தோசமும் கலந்த முகத்தோடு வந்து கதவை திறந்து பார்க்க, தபால்காரர் நின்று கொண்டிருந்தார். மருமகள் பேருக்கு ஏதோ ஒரு கம்பெனியில் இருந்து கடிதம் ஒன்று […]

கலித்தொகை காட்டும் மகளிர் கற்புக் கோட்பாடு

This entry is part 8 of 11 in the series 11 ஜூன் 2017

  முனைவர் ப.சுதா   மின்னஞ்சல் Semmozhitamil84@gmail.com   சங்க நூல்களில் எட்டுத்தொகை நுல்களுள் ஒன்றான கலித்தொகை ‘கற்றறிந்தா ரேத்துங்கலி” என்று சான்றோரால் பாராட்டப் பெறும் பெருமையுடையது ஆகும். கலிப்பாக்களின் தொகுப்பாக இந்நூல் காணப்படுவது. இதன் சிறப்பாகும். இலக்கண நூல்களில் கூறும் அகப்பொருட் பகுதிக்கு இந்நூல் இலக்கியமாகத் திகழ்கறது. பாலைக் கலியைப் பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக்க் கலியைக்  கபிலரும், மருதக்கலியை மருதநில நாகனாரும், முல்லைக் கலியை நல்லுருத்திரனாரும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் இயற்றியுள்ளனர். இக்கலித்தொகை 150 பாடல்களைக் கொண்டுள்ளது. […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 9 of 11 in the series 11 ஜூன் 2017

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++ [73] கேள் மீண்டும், ரம்ஸான் முடியும் தருணம் மாலை வேளை, நிலவு எழுவதற்கு முன்பு முதிய குயவன் கடைக்கு முன் நின்றேன் களிமண் பாண்டக் குழு வரிசை சூழ நான். [73] Listen again. One Evening at the Close Of Ramazan, ere the better […]

கவிதைகள்

This entry is part 10 of 11 in the series 11 ஜூன் 2017

அருணா சுப்ரமணியன் 1. இழப்பு  பல்லக்கு பயணம்  பாதுகாப்பான படுக்கை  இருக்குமிடம் நீரும்   எடுத்துப்போடும்  சீட்டுக்கு நெல்மணியும்  சொகுசு வாழ்க்கை  ஜோசிய கிளிக்கு  என்கிறான்  அதன் சிறகுகளை வெட்டி எறிந்து .. 2. இணை தூக்கம் புதிதாக வாங்கிவந்த  முயல் குடும்பத்தின்   குட்டி முயல் பொம்மை மிகவும் பிடித்தது  அம்முவுக்கு..  நாள் முழுதும்  தன்னோடே வைத்து கொஞ்சியவள்   இரவு வந்ததும்  மற்ற முயல்களுடன்  தூங்க விட்டு போனாள்  தன் தனியறைக்கு… 3. இலக்கு   வசந்தத்தின் வாசம்  வாசலில் வீச தொடங்கிய […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 16

This entry is part 11 of 11 in the series 11 ஜூன் 2017

16. கிஷன் தாசின் பங்களாவில் நடுக்கூடம். பிரகாஷ் தன் எம்.பி.ஏ. தேர்வுக்கான பாடத்தைப் படித்துக்கொண்டிருக்கிறான்.  படிப்பவன் போல் தென்பட்டாலும், அவனது முகத்தில் சிந்தனை தேங்கியிருக்கிறது. அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அங்கேயே  பக்கத்தில் சோபாவில் அமர்ந்தவாறு கிஷன் தாஸ் நாளிதழ் ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று கிஷன் தாஸ், “இப்போதெல்லாம் நாளிதழ்களில், கற்பழிப்பு, கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் எக்கச்சக்கமாக வருகின்றன. இந்த அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இந்த முழு உலகமுமே பெண்களுக்குப் […]