மக்பூல் ஃபிதா ஹுசைன் – நீண்ட நெடிய கலை வாழ்வில் சில கரும்புள்ளிகள்

This entry is part 33 of 33 in the series 12 ஜூன் 2011

எம் எஃஃப் ஹுசைன் தன் 95-ஆம் வயதில் மரணமுற்ற போது மீண்டும் அவர் குறித்து எழுந்த விவாதங்களில் அவர் கலைச் சிறப்புப் பற்றி கொஞ்சமாகவும், இந்துக் கடவுளர்களை அவர் நிர்வாணமாக வரைந்திருந்ததால் எழுந்த எதிர்ப்பு அலை பற்றி அதிகமாகவும் இருந்தது. இந்தியாவிற்கு வெளியே இருந்த ஒரு இந்தியக் கலைஞனின் மரணம் இது. ஆனால் ஹுசைனின் மனம் முழுக்க இந்தியாவில் தான் இருந்திருக்க வேண்டும். அவர் கிட்டத் தட்ட அறுபதாயிரம் ஓவியங்களுக்கு மேல் வரைந்ததாய்த் தெரிகிறது. ஆனால் அடிப்படையில் […]

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3

This entry is part 32 of 33 in the series 12 ஜூன் 2011

(மே மாதம் 31, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன.  ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” நிக்கோலை லாவெராவ் […]

இப்போதைக்கு இது (நடந்து முடிந்த தேர்தலும் ஆட்சிமாற்றமும்)

This entry is part 31 of 33 in the series 12 ஜூன் 2011

எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக தமிழக மக்கள் தங்களிடமுள்ள வன்முறை சாரா எனில் வலுவான ஒரே ஆயுதமான ‘வாக்குரிமையை’ப் பயன்படுத்தி ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். மக்களின் வாக்குரிமையை, வாழ்வுரிமையை மதித்துநடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே தோல்வியடைந்தவர்களுக்கும் சரி வெற்றியடைந்தவர்களுக்கும் சரி தேர்தல் தரும் பாடமாக இருந்துவருகிறது. தேர்தல் முடிவுகளை தமிழக மக்களின் தோல்வி என்று திருவாய் மலர்ந்தருளினார் குஷ்பு. இதுநாள்வரை இன்னலுறும் தமிழக மக்களுக்காக நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பாராமல் அவர் ’வெயிலே படாமல் அரசியல் நடத்துபவராக இன்றை தமிழக முதல்வர் […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 39

This entry is part 30 of 33 in the series 12 ஜூன் 2011

तृतीयाविभक्तिः (tṛtīyāvibhaktiḥ) சிறப்பு விதிகளில் ஒன்றான सह (saha) அதாவது ‘உடன்’ என்ற வார்த்தையைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம். ’ सह ’ इति पदं यत्र प्रयुज्यते तत्र तृतीयाविभक्तिः भवति। (saha iti padaṁ yatra prayujyate tatra tṛtīyāvibhaktiḥ bhavati |) ’உடன்’ என்ற சொல்லுடன் இணைக்கப்படும் சொல் எப்போதும்  மூன்றாம் வேற்றுமையில் அமையும். (முக்கியக்குறிப்பு :    सः (saḥ) ,  सह (saha) இவ்விரண்டின் உச்சரிப்பும் ஒரே போலத்தான் […]

ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-

This entry is part 29 of 33 in the series 12 ஜூன் 2011

ஷாப்பிங் மால்களில் முயல்குட்டிகளும் பூனைக்குட்டிகளும் கடந்த போது அவன் கண்கள் அவைபோல் துள்ளின. கூட வரும் மனைவி பார்க்கும்போது கீழ்விடுவதும் பின் ஏந்திக்கொள்வதுமாக நீண்டன அவன் கண்கள் குறுகலான கடையில் இருந்த காலண்டர் சாமியின் ஆயுதம் அவனை மிரட்டியது . கண்களை வெவ்வேறு கோணங்களுக்கு உள்ளாக்கியபோதும் தட்டுப்பட்டபடியே இருந்தன அவை. இடப்பக்கக் கடைவழியே குதித்துச் சென்றவைகளை பட்டைக் கண்ணாடிகள் பலவாய்ப் பிரதிபலித்தன. பர்சின் கனம் குறைந்து பைகளின்கனம் அதிகமானபோது அவன் உரசிச்செல்லும் சில பூனைகளையும் வெறுக்கத்துவங்கி இருந்தான்.. […]

அலையும் வெய்யில்:-

This entry is part 28 of 33 in the series 12 ஜூன் 2011

பார்க் பெஞ்சுகளில் சூடு ஏறி அமர்ந்திருந்தது. மரங்கள் அயர்ந்து அசைவற்று நின்றிருந்தன. ஒற்றைப்படையாய்ப் பூக்கள் பூத்திருந்தன. கொரியன் புல் துண்டுகள் பதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. டெரகோட்டா குதிரை சாயம் தெறிக்கப் பாய்ந்தது. இலக்கற்ற பட்டாம்பூச்சி செடிசெடியாய்ப் பறந்தது. குழாய்களில் வழிந்த நீரை சூரியன் உறிஞ்சியபடி இருந்தது. உஷ்ணம் தகிக்க நிழல்களும் ஓடத் துவங்கி இருந்தன. காவலாளியும் பூட்டுவாருமற்று விரியத் திறந்திருந்தது கதவு உடைதட்டி எழுந்த அவள் ஒரு முத்தத்தை நிராகரித்திருந்தாள்

ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4

This entry is part 27 of 33 in the series 12 ஜூன் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஆயுத உற்பத்திச் சாலைகள் தொழிலாளருக்கு வேலை, ஊதியம், நல்வாழ்வும் அளித்து, மனித இனத்தின் ஆத்மாக்களை நசுக்கினும் ஆக்கப் பணியே புரிகின்றன.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வாழ்வுக் காலம் முழுவதும் வரையற்ற இன்பப் பூரிப்பு எப்படி இருக்கும் ?  உயிரோடுள்ள எந்த மனிதனாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது !  பூமியில் ஓர் நரகமாய் இருக்கும் அந்த வாழ்வு !” […]

“பழமொழிகளில் தன்முன்னேற்றச் சிந்தனைகள்“

This entry is part 26 of 33 in the series 12 ஜூன் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com முன்னோர்கள் தங்களது வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவமொழிகளே பழமொழிகளாகும். இப்பழமொழிகள் வாழ்க்கைக்குப் பயனுள்ள பல கருத்துக்களை வழங்கும் வாழ்வியல் பெட்டகமாகத் திகழ்கின்றன. மனச்சோர்வு ஏற்படுகின்றபோது ஆறுதல் சொல்லும் தோழனாகவும், வாழ்க்கையினை முன்னேற்றும் ஏணிகளாகவும் இப்பழமொழிகள் திகழ்கின்றன. முயற்சி இன்று அனைவரும் கூறும் முதல் அறிவுரை முயற்சியே. இம்முயற்சி இன்றேல் உலக இயக்கம் இல்லை எனலாம். மேலும் இன்றைய எந்திர உலகில் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வதே அருகி வருகின்றதை நாம் பலவிடங்களிலும் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிதற்றும் சிறுவன் (கவிதை -37)

This entry is part 25 of 33 in the series 12 ஜூன் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ சொல்ல நினைப்பதை நான் பேச வில்லை என்றால் எனது கன்னத்தில் அறைந்து விடு ! பிதற்றும் சிறுவன் தவறிப் பிடிபடும் போது அன்புத் தாய் போல் எனக்கு நன்னெறி புகட்டு ! தாக முள்ள மனிதன் சாகரம் நோக்கி ஓடினான் ! கழுத்துக்குக் கத்தியை நீட்டியது கடல் !   ++++++++++++   ரோஜாப் பூ மேடை நோக்கிய மல்லிகைப் பூவும் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -4)

This entry is part 24 of 33 in the series 12 ஜூன் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “மௌனத்தையும், அமைதியையும் நேசிப்பவனுக்குப் பிதற்றுவாயரிடமிருந்து எங்கே ஓய்வு கிடைக்கும் ?  கடவுள் என் ஆத்மா மீது பரிவு காட்டி மௌன சொர்க்கத்தில் தங்கிக் கொள்ள பேசாமைக்கு வரம் தருவாரா ?  இந்தப் பிரபஞ்சத்தில் நான் போய் ஏகாந்தத்தில் இனிதாய் வசிக்க எந்த மூலை முடுக்காவது இருக்கிறதா ?  வெற்றுக் காலிப் பேச்சுகள் நடமாடாத எந்த இடமாவது உள்ளதா ?  தன் வாய்ப் பேச்சை […]