பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-6)

This entry is part 33 of 43 in the series 17 ஜூன் 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பொதுவுடைமை பாடிய கவிஞர்கள் பொதுவுடைமைச் சிந்தனைகளை முதன் முதலில் பாடிய பெருமை மகாகவி பாரதியாரையே சாரும். பொதுவுடைமை இயக்கமோ, தொழிற்சங்க இயக்கமோ உறுதியாகக் கால் கொள்ளாத காலத்தில் ரஷ்யாவில் நடந்த புரட்சியின் விளைவாகப் பாடியவர் பாரதியார். ‘‘வையகத்தீர் புதுமை காணீர்’’(ப.,90) என்று ரஷ்யப் புரட்சியைப் பாடிய பாரதியார், ‘‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக் கொருபுதுமை’’ ‘‘எல்லாரும் ஓர் குலம் […]

பூட்ட இயலா கதவுகள்

This entry is part 32 of 43 in the series 17 ஜூன் 2012

ரமேஷ்ரக்சன் தொடர் மழையின் இரவில் திண்ணையில் ஒதுங்கிய நாயின் ஊளையின் குரலால் தோளில் சாய்ந்துறங்கும் மகளின் காதுகளில் விழவும் தலை நிமிர்த்து வாசல் நோக்கியவள் பயம் அப்பிய மனதினை விரல்களில் புகுத்தி தோள் பற்றி கதவை தாழிட சமிக்ஞை செய்கிறாள் சந்தையில் சந்தித்த கீழத் தெருக்காரன் ஒருவன் பாலுக்கான காசோடு வருவதை அவள் அறிந்திருக்க நியாயமில்லை!

முள்வெளி அத்தியாயம் -13

This entry is part 31 of 43 in the series 17 ஜூன் 2012

“டாக்டரு.. டாக்டரு” ன்னு நீங்க அதுலயே நிக்கிறீங்கம்மா…” பொறுமையிழந்தவளாக பொன்னம்மளைப் பார்த்துக் கிட்டத் தட்ட கத்தினாள் மஞ்சுளா. “டாக்டரு இவரு பப்ளிக்ல தவறாகவோ தொந்தரவாகவோ நடந்துக்கலேன்னாக்க நார்மல் அப்படீங்கறாரு… ஆனா இவரை வீட்டுக்குள்ளே அடைச்சு வைக்கறது பெரும் பாடா இருக்கு. ரெண்டு நாளைக்கி மின்னாடி வேலைக்காரி செக்யூரிட்டி எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்திட்டு இவரு வீட்டுக்கு வெளியிலேயே போயிட்டாரு…நாலு இடத்தில பேந்தப் பேந்த முளிச்சிக்கிட்டு நின்னா அக்கம்பக்கத்தில இருக்குறவங்க வம்பு பேசறாங்க .. என்னைத்தானே விசாரிக்கறாங்க… நீங்க கொஞ்ச […]

இலங்கையில் வாழும் பெண் கவிஞர்களின் கவனத்திற்கு ..!

This entry is part 30 of 43 in the series 17 ஜூன் 2012

…………………………………………………………………………………… இன மத பாகு பாடுகள் இன்றி தரமான பெண் கவிஞர்கள் 25 பேர்களின் கவிதைகளை ஒன்று சேர்த்துஒரு கனதியான தொகுப்பாக தடாகம் கலை இலக்கிய வட்டம் (இன்சாஹ் அல்லாஹ் இலங்கையில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மா நாட்டின் போது வெளியிடுவதற்காண ஏற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றது எனவே கவிதாயினிகள் தாங்களது தரமான 05கவிதைகளுடன் , உங்களைப்பற்றிய குறிப்புக்களும் , பாஸ்போட் அளவு புகைப் படமும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம மேலதிக விபரங்களுக்கு […]

துருக்கி பயணம்-5

This entry is part 27 of 43 in the series 17 ஜூன் 2012

  அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா   மார்ச்-31   உயிர் வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு நாட்களும் முக்கியமானதுதான். கப்படோஸை பிரிகிறபோது மனதைச் சமாதானப்படுத்த வேறு காரணங்கள் உடனடியாகத் தோன்றவில்லை. இனி திரும்பவும் கப்படோஸ் அனுபவம் வாய்க்குமா? இங்கு கழித்த இரண்டு நாட்கள் போல மறுபடியும் அமையுமாவென என்னை நானே கேட்டுக்கொண்டபோதுதான், நமது வாழ்க்கையில் எல்லா நாட்களும் முக்கியமானவையென நினைத்துக்கொண்டேன். இன்னொரு கப்படோஸ் எனக்கு அவசியமற்றதாகப் பட்டது. கப்படோஸ் கப்படோஸ் மட்டுமே […]

நினைவுகளின் சுவ ட்டில் (89)

This entry is part 26 of 43 in the series 17 ஜூன் 2012

காலையில் எழுந்து பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால் ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் அவர்களின் நடமாட்டம் இருந்தது. இரவில் பார்த்த பத்துப் பதினைந்து பேருக்கு மேலாக நிறையப் பேரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள எல்லாம் சுற்று வட்டார கிராமத்து ஜனங்கள். என்றார் ஜார்ஜ். சரி வாங்க காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு குளித்து ஏதாச்சும் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ஸ்டேஷனில் தான் எல்லா வசதிகளும் இருக்குமே. அது ஒரு சின்ன […]

அன்னியமாகிவரும் ஒரு உன்னதம் – பழகி வரும் ஒரு சீரழிவு

This entry is part 25 of 43 in the series 17 ஜூன் 2012

நா. விச்வநாதனை எத்தனை பேர் அறிவார்களோ, படித்திருப்பார்களோ, படித்து ரசித்திருப்பார்களோ தெரியாது. இன்றைய எழுத்து வானில் ஒளிரும் தாரகைகளில் அவர் இல்லை. நிச்சயம்.  அவர் எழுத்தும், அவர் நம் முன் நிறுத்தும் உலகமும் அவ்வுலக மனிதரும் வாழ்க்கையும் இன்று ஃபாஷனபிளாகக் கருதப்படுபவை அல்ல. இதுவும் நிச்சயம். இவை கூகிள் தந்தவையோ, கட்சிக்கொள்கைகள் தந்தவையோ அல்ல. லத்தீன் அமெரிக்க தந்ததும் அல்ல. தஞ்சை கிராமம் தந்தவை.   அவர் அதிகம் எழுதுபவரும் அல்ல. இதையும் சேர்த்து மூன்று சிறுகதைத் தொகுப்புகள், […]

2012 ஆகஸ்டில் இறக்கப் போகும் நாசாவின் செவ்வாய்க் கோள் தளவூர்தி

This entry is part 24 of 43 in the series 17 ஜூன் 2012

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செந்நிறக் கோளுக்கு மீண்டும் உந்தப் போகுது நாசா தள ஊர்தி யோடு ! தானாக ஊர்தியை இறக்க தலைகீழ் ஏவுகணைகள் ஈர்ப்பு விசை எதிர்த்து கீழிறக்கும் வானிறக்கியால் ! தாறுமா றான களத்தில் ஆறு சக்கரத் தேர் உலவும் ! நீள மானது தளவூர்தி ! கனமானது ! நூதன மானது சாதனை வாகனம் ! இதுவரை ஏவப் படாத புதுமைத் தள விஞ்ஞான ஆய்வகம் ! […]

ப.மதியழகன் க‌விதைக‌ள்

This entry is part 23 of 43 in the series 17 ஜூன் 2012

ஜகத்மித்யை பருவத்தில் பாட்டு கேட்பது தனிமையில் சிரிப்பது கண்ணாடி பார்ப்பது சகஜம் தான் மிலேச்ச நாட்டில் மொழி தெரியாமல் சுற்றுபவனைப் போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தால், கண்டுபிடிப்பது கஷ்டமல்ல காதல் தான் காதலின் சின்னமே கல்லறை தான் கேள்விப்பட்டதில்லையா காதலில் விழுவது தெய்வத்தைத் தொழுவது எல்லாம் ஒன்று தான் ஓர்மை இல்லாவிடில் சமூகக் கழுகுக்கு இரையாவாய் விடாயை விட்டுத் தொலை உலகை சாளரத்தின் வழியே பார்க்காமல் முச்சந்தியில் நின்று பார் சிவசங்கரன் சொல்லிச் சென்றது சிற்றறிவுக்கு சிறிது […]

பஞ்சதந்திரம் தொடர் 48

This entry is part 22 of 43 in the series 17 ஜூன் 2012

பொன் எச்சமிட்ட பறவை ஒரு மலைக்கருகில்  பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் ஒரு பறவை இருந்து வந்தது. அதன் எச்சத்திலிருந்து தங்கம் உற்பத்தியாகி வந்தது. ஒருநாள் அந்த இடத்துக்கு ஒரு  வேடன் வந்தான். அந்தப் பறவை அவன் எதிரிலேயே எச்சம் இட்டது. அது விழுகையிலேயே தங்கமாக மாறுவதை வேடன் கண்டான். ஆச்சரியமடைந்து போனான். ‘’ஆஹா, குழந்தைப் பருவத்திலிருந்து நான் பறவைகளைப் பிடித்து எட்டு வருஷங்கள் ஆகின்றனவே! ஒரு நாளாவது பறவையின் எச்சத்தில் பொன்னைக் கண்டதில்லையே!’’ என்று […]