1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு

This entry is part 1 of 23 in the series 21 ஜூன் 2015

சி. பந்தோபாத்யாயா மெயின்ஸ்ட்ரீம், வால்யும் XLVIII, No 34, ஆகஸ்ட் 14, 2010 ஞாயிறு 22 ஆகஸ்ட் 2010 (தமிழில்: அருணகிரி) கொலை என்கிற கொடூரமான குற்றத்தை ”அரசியல் கொலை” என்று தனியே வகைப்படுத்துவதா என்று ஒருவர் கேட்கக்கூடும். ஒரு குற்றம் என்றால், அதன் பின்னுள்ள நோக்கமே அதைத் தனியாய் வேறுபடுத்திக்காட்டுகிறது. சட்டத்திற்கான ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி ”அரசியல் குற்றம்” என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது: ”அரசியல் காரணத்திற்காக அல்லது அரசியல் நோக்கால் ஈர்க்கப்பட்டு செய்யப்படும் குற்றம். அந்தச் செயல் […]

ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்

This entry is part 2 of 23 in the series 21 ஜூன் 2015

ஜூடித் நியூரிங்க் சுலைமானி, குர்திஸ்தான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர், ஜொராஸ்டிரிய மதம் தான் தோன்றிய நிலத்துக்கு மீண்டும் வருகிறது. ஈராக்கிய குர்திஸ்தான் அரசின் மத அமைச்சகம், இங்கு ஜர்தாஷ்டி ( Zardashti) என்று அழைக்கப்படும் ஜொராஸ்டிரிய மதத்தை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக பதிவு செய்து, குர்து அரசாங்கம் இந்த மதத்துக்கு என்று தனி அமைச்சகமும், இந்த மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் கோவில்களைகட்டிகொள்ள அனுமதியும் அளிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது. ஐரோப்பாவில் ஜோராஸ்டிரிய அமைப்பை 2006இல் உருவாக்கியவரும், […]

மிதிலாவிலாஸ்-23

This entry is part 3 of 23 in the series 21 ஜூன் 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள்.. மைதிலி விழித்துக் கொண்டதும் பழகிவிட்டச் செயல் போல் அபிஜித்தின் தலை மீது கையை வைப்பதற்காக கையை நீட்டினாள். அவன் தலையோ, முகமோ கையில் தட்டுப்படவில்லை. மைதிலி தலையை திருப்பிப் பார்த்தாள். அபிஜித் படுக்கையில் இல்லை. தலையணையில் ஒரு காகிதத்தில் குறிப்பு இருந்தது. மைதிலி அதை எடுத்துப் பார்த்தாள். அதில் இப்படி இருந்தது. “சாரி டியர், நான் ஊருக்கு போகாமல் முடியாது. இரவுக்குள் திரும்பி விடுவேன். ஜுரம் […]

தொடுவானம் 73. இன்பச் சுற்றுலா

This entry is part 4 of 23 in the series 21 ஜூன் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் அண்ணன் பேருந்துக்குள் எழுந்தது தெரிந்தது. அதை வெளியிலிருந்தவர்களும் பார்த்திருப்பார்கள். ஆனால் அப்போது அந்த அதிசயம் நடந்தது. திடீரென்று அவருக்கு முன் இருக்கைகளிலிருந்து எழுந்த பத்து காவலர்கள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு திமுதிமுவென்று இறங்கினர். அவர்களைக் கண்ட கூட்டம் சிதறி ஓடியது. காவலர்கள் அவர்களை துரத்திக்கொண்டு ஓடினார்கள்.அதைத் தொடர்ந்து அண்ணன் இறங்கினார். அவரைப் பின்தொடர்ந்து இன்னும் சில அரசியல் பிரமுகர்கள்போல் ( வேட்டி அணிந்திருந்தனர் ) காணப்பட்டவர்கள் இறங்கினார்கள். ” யாரடா எங்க ஊர் வாத்தியாரை […]

தூக்கத்தில் தொலைத்தவை

This entry is part 5 of 23 in the series 21 ஜூன் 2015

சேயோன் யாழ்வேந்தன் தூக்கம் கலைந்தெழுந்த குழந்தை வீறிட்டழுகிறது தன் கைக்குக் கிடைத்த ஒன்று காணாமல் போனதுபோல் உள்ளங்கைகளைப் பார்த்தபடி கூப்பாடு போட்டழுகிறது எதைக் கொடுத்தும் சமாதானமாகவில்லை என்ன தொலைத்ததென்று அதற்குச் சொல்லவும் தெரியவில்லை தொலைத்தது சுதந்தரமோ என்னமோ? பெற்ற சுதந்தரத்தைப் பேணிக் காக்கத் தெரியாத நானெப்படி உதவுவேன் – கனவின் இருளில் கைப்பொருள்தன்னை தொலைத்த குழந்தைக்கு? seyonyazhvaendhan@gmail.com

சமூகத்திற்குப் பயன்படும் எழுத்து

This entry is part 6 of 23 in the series 21 ஜூன் 2015

தோழர் ஆர். நல்லக்கண்ணு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் NCBH நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா திருப்பூரில் நடைபெற்றது . * தலைமை : இரா. சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர், க.இ.பெ.மன்றம் ) தாங்கினார். வரவேற்புரை: ரங்கராஜ் ( மேலாளர்,NCBH கோவை ) வழங்கினார் . .சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் பற்றி தோழர் ப.பா இரமணி ( மாநில செயலாளர், க.இ.பெ.மன்றம்) , தோழர் ரவி ( திருப்பூர் மாவட்டச் […]

காஷ்மீர் மிளகாய்

This entry is part 7 of 23 in the series 21 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன் கண்ணன் ஸாரைப்பற்றி கோபிதான் சொன்னான். நேற்று ஒரு இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்த போது தோளில் ஒரு கை தட்டியது. கோபி. என் பால்ய சிநே கிதன். பொன்னேரிக்காரன். நானும்தான். ஒன்றாய் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தோம். அதற்கப்புறம் அவன் சினிமா ஆசையில் சென்னை போனவன் தான். இப்போதுதான் சந்திக்கிறேன். ‘ கோபி ‘ ‘ கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே ‘ ‘ எப்படிடா ஐம் ஸாரி எப்படி […]

“உன் கனவு என்ன?” – ரஸ்கின் பாண்ட்

This entry is part 8 of 23 in the series 21 ஜூன் 2015

[ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் : வளவ துரையன் ] நான் லிட்ச்சி மரத்தின் கிளயில் உட்கார்ந்திருந்தேன். தோட்டத்துச் சுவரின் மறுபக்கத்திலிருந்து கூன் விழுந்த ஒரு வயதான பிச்சைக்காரன் பறக்கின்ற வெண்மைத் தாடியுடனும், கூரிய பார்வையுள்ள பழுப்பு நிறக் கண்களும் கொண்டவனாய் என்னைப் பார்த்தான் ” உன் கனவு என்ன “ என்று என்னை அவன் கேட்டான். தெருவில் செல்லும் கந்தையான ஆடை உடுத்தியிருந்த ஒருவனிடமிருந்து வந்த அந்தக் கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. அதுவும் அவன் ஆங்கிலத்தில் […]

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11

This entry is part 9 of 23 in the series 21 ஜூன் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி சாத்தனூர் அணை செல்லும் சாலை! சொர்ப்பனந்தல் என்ற அழகான ஊரின் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் எதிர்சாரியில் அமைந்திருந்தது. அந்த அறக்கட்டளை கிராமத்திலேயே உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. அங்கு சிறுவர்களுக்கு இலவசக் கல்வியும், அனைத்து மதப் புத்தகங்களும் போதிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கல்வியும், தொழிலும் வழங்கப்பட்டது. அங்கு ஐ.ஏ.எஸ் அகாடமியும் இருந்தது யாழினியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு கிராமத்தில் தன்நிறைவு பெற்ற நிறுவனமா என்று வியந்துபோனாள். அதன் நிறுவனரான மிஸ்.சோஃபியா சராசரிக்கும் சற்று உயரமானவளாய் இருந்தார். […]

சீப்பு

This entry is part 10 of 23 in the series 21 ஜூன் 2015

  ‘நானா மூனா கடையில் நயமாக நாலைந்து சீப்பு வாங்கிவா’ என்றார் அத்தா வாங்கி வந்தேன்   சீவிப் பார்த்து வரண்டும் சீப்பைத் தள்ளிவிட்டு வருடும் சீப்பை வைத்துக் கொண்டார் புதுப்புளி நிறத்தில் புலிவரிச் சீப்பு அது   பின் சீப்பு வாங்கும்போதெல்லாம் சீவீப்பார்க்காமல் வாங்கியதில்லை எத்தனையோ சீப்புகள் வாங்கிவிட்டேன்   சிங்கப்பூர்ச் சச்சா தந்த பேனாச் சீப்பொன்று என் பேனாவோடு வெகுகாலம் பேசிக்கொண்டிருந்தது வாங்கிப் பார்த்தவர்களெல்லாம் வாங்கிக் கேட்டார்கள்   இந்தோனேஷிய நெருக்குப்பல் மரச்சீப்பு இரண்டிருந்தது […]