இரு கவிதைகள்

This entry is part 1 of 8 in the series 24 ஜூன் 2018

ஸிந்துஜா   1. நிழல்கள்   இருளின் பிரம்மாண்டம்  இருளில் இருக்கிறது. ஒளிக் கத்தி   எதிர்பாரா வலிமையுடன் கூராகப் பாய்ந்து   பிளக்க வருகிறது இருளை.   ரத்தமின்றி  ரணகளம் அடைந்து  சாய்கிறது இருள். சாய்வு மட்டும்தான். சாவு அல்ல.   வெட்டுப்பட்டுத் தடுமாறி அலைக்கழியும்  தருணம்  ஒளியின் கீழ்ப் படரும்  இருளின் குழந்தைகள்.   ஒளி அவற்றை  விரட்டிப் பிடிக்க  ஓடி வரும் பொழுதில்  சிக்காமல்  முன்னேயும்  பின்னேயுமாய்  நகர்ந்து ஆர்ப்பரிக்கின்றன  மழலைக்  கூட்டம் . ————————————— 2. […]

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ

This entry is part 3 of 8 in the series 24 ஜூன் 2018

அழகர்சாமி சக்திவேல் பொதுவாய், இலக்கியங்களை திரைப்படமாக எடுப்பது என்பது, மிகுந்த சிரமமான ஒன்றாகும். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண இலக்கியங்கள், வெற்றிகரமான திரைப்படம் ஆக எடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம், அந்த இலக்கியக்கதைகள், வழிவழியாக சொல்லப்பட்ட வாய்மொழிக்கதைகள் என்பதாலேயே. ஆனால், சாண்டில்யன் போன்றோர் எழுதிய வரலாற்று இலக்கியங்களைச் சுருக்கி, ஒரு திரைப்பட வடிவம் கொடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நான் இதுவரை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்தது இல்லை. சமீபத்தில், பொன்னியின் செல்வன் கதையை, […]

கோனோரியா ( மேகவெட்டை நோய் )

This entry is part 4 of 8 in the series 24 ஜூன் 2018

          கொனோரியா ஒரு பாலியல் நோய். இதை மேகவெட்டை நோய் என்று அழைப்பார்கள். இது தகாத உடல் உறவு மூலம் பரவும் தொற்று நோய். இது கோனோகக்காஸ் எனும் கிருமியால் உண்டாகிறது.இது பாலியல் நோயாதலால் உலகளாவிய நிலையில் காணப்படுகிறது.தொழில் மயமான நாடுகளில் இது அதிகமாகவே காணப்படுகிறது.பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளால் இந்த நோய் எளிதில் பரவிவருகிறது. 15முதல் 19 வயதுடைய பெண்களுக்கும், 20 முதல் 25 வயதுடைய ஆண்களுக்கும் அதிகமாகவே பரவி வருகிறது.விலை […]

தொடுவானம் 227. ஆலய அர்ப்பணிப்பு

This entry is part 2 of 8 in the series 24 ஜூன் 2018

          முதல் சபைச் சங்கக் கூட்டம். ஒன்பது உறுப்பினர்களும் ஆலயத்தில் ஒரு மாலையில் கூடினோம். சபைகுருவின்  ஜெபத்துடன் கூட்டம்  தொடங்கியது.           தேர்ந்தெடுக்கப்பட ஒன்பது புதிய உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஜெயராஜ் வயதில் மூத்தவர். அவர் முன்பிருந்த சபைத் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வாட்டில் நிவாகப் பொறுப்பில் உள்ளவர். அவ்வளவு சுறுசுறுப்பு இல்லாதவர்.இருந்தாலும் பரவாயில்லை. அவரை செயலராக வைத்துக்கொண்டு நானே செயல்படலாம். […]

இப்போது எல்லாம் கலந்தாச்சு !

This entry is part 5 of 8 in the series 24 ஜூன் 2018

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   ++++++++++++++++++   ஒன்று, இரண்டு, மூன்று ! இன்னும் எண்ணிக் கொள்ளவா ? நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ! நான் உம்மை நேசிக்கிறேன் ! அகரம், இகரம், உகரம், எகரம் ! தோழ னுக்கு இளநீர் தர்மம் ! நகரம், தகரம், மகரம், வகரம் ! நான் உம்மை நேசிக்கிறேன் !   நாம் யாம், நாம் தாம் எல்லாம் ! கடல் கடந்து […]

வீதியுலா

This entry is part 6 of 8 in the series 24 ஜூன் 2018

  தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது. அது மண ஊர்வலமா பிண ஊர்வலமா – தெரிவதில்லை. சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது. பலசமயங்களில் இல்லை. இப்பொழுதெல்லாம் மணவிழா மண்டபங்களில் ’வாராயென் தோழி வாராயோ’வை அடுத்து வந்துவிடுகிறது ’போனால் போகட்டும் போடா’…… ஊர்வலம் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது; நான் ஊர்வலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். வருவதும் போவதும் சந்திக்கும் புள்ளியில் உருவாகும் கருந்துளை வெற்றிடமோ? அணுத்திறமோ…..? அதோ, அந்த ஊர்வலத்தில் நானும் போய்க்கொண்டிருக்கிறேன் _ மௌனமாய் _ மகிழ்ந்து […]

வழிச்செலவு

This entry is part 7 of 8 in the series 24 ஜூன் 2018

  ஒருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில் எனக்கேயெனக்கான நிழலை குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில் இன்று நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர். சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி; சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின் திருப்பெயர்களைச் செதுக்கியபடி; சிலர் எக்கியெக்கி குதித்துக் கனிபறித்து ருசித்தபடி; சிலர் தலவிருட்சமாய் பிரதட்சணம் செய்து நெடுஞ்சான்கிடையாய் விழுந்து கும்பிட்டபடி. சிலர் சலசலத்திருக்கும் பறவைகளைப் பலகோணங்களில் படமெடுத்தபடி….. உணவிடுவார்களோ உரமிடுவார்களோ, தெரியவில்லை. மரத்தின் பச்சையம் மாற்றுக்குறையாமலிருக்கிறதா? அறியேன். வனாந்திரம் மரத்தின் விருப்பா? அன்றி விபத்தாயமைந்த இருப்பா? […]

ஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.

This entry is part 8 of 8 in the series 24 ஜூன் 2018

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ அகிலவெளி அரங்கிலே முகில் வாயுவில் மிதக்கும் காலாக்ஸி இரண்டு மோதினால் கைச்சண்டை புரியாமல் கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் ! கடலிரண்டு கலப்பது போல் உடலோடு உடல் ஒட்டிக் கொள்ளும் ! வாயு மூட்டம் கட்டித் தழுவிக் கொள்ளும் ! கர்ப்பம் உண்டாகி காலாக்ஸிக்கு குட்டி விண்மீன்கள் பிறக்கும் ! இட்ட எச்சத்திலே புதிய கோள்கள் உண்டாகும் ! ஈர்ப்புச் சக்தியால் விண்மீனைச் சுழல வைக்கும் காலாக்ஸி ! […]