தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 18 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

இருள் குவியும் நிழல் முற்றம்

சல்மா முதல்முறை அமெரிக்கா வந்திருந்த பொழுது. கோபால் ராஜாராம் வீட்டில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. பேச்சு சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் பற்றித் திரும்பியது. அதற்கு ரவிக்குமார் எழுதிய முன்னுரையைப் படித்துவிட்டு நாவலைப்…

திண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்

சிங்களர்களே என்றாலே காடையர்கள் என்பதாக ஒரு பிம்பம் கடந்த் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களில் பதிந்து விட்ட ஒன்று. தமிழ் ஈழப் போராட்டத்தில் நியாய உணர்வு கொண்ட சிங்களவர்களும் இணைந்து பணி புரிய முடியாதபடிக்கு…

என்னைக் கைது செய்யப் போகிறார்கள்

தற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப் போகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் நான் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளி. தண்டனையாக, ஐந்து லட்ச இலங்கை ரூபாய்களை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். தவறினால்…

அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்

தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ் கூட்டிய கூட்டத்தை போலீசார் நட்ட நடு நிசியில் வலுக்கட்டாயமாகக் கலைத்தது பற்றிய எனது கட்டுரையில் உண்மையான மக்களாட்சி எவ்வாறு இருக்கும் என்ற எனது கருத்தை…

மகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக

சுமார் நான்கு வயதுக் குழந்தையாக இருக்கையில் என் மடி மீது உட்கார்ந்து கொஞ்சி விளையாடியவள் கனிமொழி. நானும் உனக்கு அப்பா மாதிரிதான் என்று சொன்னபோது கன்னங் குழியச் சிரித்து எனது சொல்லை அங்கீகரித்தவள் குழந்தை…

இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்

பி.கே.சிவகுமாரின் 'அறிவா உள்ளுணர்வா ' கட்டுரையில் எழுப்பப் பட்டிருக்கும் விஷயம் ---இறந்து போன எழுத்தாளனைப் "போட்டுப்" பார்க்கும் தமிழ்க் குணாதிசயம் ---- சில சிந்தனைகளை எழுப்புகிறது. கனிமொழியின் கைது விவகாரத்தில் பெருந்தன்மையுடன் எழுதும் அதே…

(71) – நினைவுகளின் சுவட்டில்

சீனுவாசன் மாத்திரமில்லை.எனக்கு ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து கிடப்பதைக் காட்டியவர்கள். மற்றவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன். சீனுவாசன் என் அறையில் வசித்த காலத்தில். வெளியூரில் வேலை பார்த்திருந்த காலத்திலும் அவர் அவ்வப்போது வந்து…

கதையல்ல வரலாறு (தொடர்) 1

"வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை" லூயி பிலாங், -பிரெஞ்சு வரலாற்றாசிரியர் வரலாறென்பது இறந்தகால முக்கிய நிகழ்வு. ஓர் இனத்தின் அல்லது நாட்டின் நிர்வாகம், சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் தலைவிதியைத் தீர்மானிப்பதாக அந்நிகழ்வு அமைந்திருக்கவேண்டும். வரலாறு…

அறிவியல் தொழில்நுட்பம்

21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5

(கட்டுரை -5) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessory Evil) என்று…

இலக்கியக்கட்டுரைகள்

பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..

பெண்களின் உலகில் அவர்கள் தன் முனைப்புடன் செயல்படுவது, முன்னேற்றத்தின் தனி பாதையை தேர்ந்தெடுத்து குடும்பச்சூழலிலும், வியாபாரத் தளத்திலும்  அவர்கள் முன்னேறுவவதைப்பற்றி வனஜா டேவிட்டின் “ சிலையைச் செதுக்கிய உளிகள்” , “ மாறுபட்ட மங்கை…

“அறுபத்து நான்காவது நாயன்மார்“

பெரியபுராணம் அறுபத்து மூன்று சிவனடியார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றது. இத்தகைய அடியார்கள் சிவனருள் பெற்று மானிட குலத்தைச் சிறப்பித்து ஈடேற்றியவர்களாவர். இச்சிவனடியார்களுள் ஒருவராக வைத்து போற்றத்தக்கவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஆவார். அவர் சிறந்த…

விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்

ஆர்ப்பாட்டமான இசையுடன் தொடங்குகிறது திரைப்படம்.'எவளாவது இந்த மீசை விஷயத்த வெளிய சொன்னீங்க அப்பறம் இருக்கு சேதி' என்று ஜமீன் கூறுவதுடன்.ஒட்டு மீசையை மறைப்பது போல் அவருக்குள் மறைந்து கிடக்கும் பல விஷயங்களுடன் நகர்கிறது அவன்-இவன்…

ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி

நாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் - நகரும் கதைகள். ஒரு மரம்…

எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)

'எடிட்டிங்' என்கிற 'பிரதியைச் செப்பனிடுதல்' பத்திரிகை ஆசிரியரின் தலையாய உரிமை ஆகும். அது தேவையானதும் ஆகும். மேலை நாடுகளில் பதிப்பாளர்கள் அதில் அதிகமும் கவனம் காட்டுகிறார்கள். இதற்கென்றே ஒவ்வொரு பதிப்பகமும் தனித்திறமை மிக்க எடிட்டர்களை…

சனி மூலையில் தான் நானும்

சனி மூலை என்று தன் கன்னி எழுத்து முயற்சியை அடையாளப் படுத்துவார்களா? பொதுவாக நம் தமிழர்களுக்கு இதைக் கேலி செய்யத் தோன்றலாம். ஆனால் அப்படி ஒருவர் கிடைத் திருப்பதும், சனி மூலை ஒரு புத்தகமாக…

ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்

ஜே. ஜே. எனும் தமிழ் படத்தில் நாயகன் நாயகி கைகளில் தவழும் ஒரு நாவல், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் அதிகம் பேசப்பட்ட நாவல், காலச்சுவட்டின் கிளாசிக் வரிசையில் வருகிற நாவல் என்பது தாண்டி…

முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்

முத்துக்கள் பத்து என்கிற தலைப்பில் வண்ணநிலவன் அவர்களின் சிறந்த பத்து கதைகளை எழுத்தாளர் திலகவதி தொகுத்துள்ளார். இது ஒரு அம்ருதா பதிப்பக வெளியீடு. இதே போல் தமிழின் பிற சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த பத்து…

கடிதங்கள் அறிவிப்புகள்

பாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா

செய்தி : புதுவை எழில் பாரீசிலும் சரி பாரில் வேறு எங்கும் சரி, விழாவைக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை. இதற்கு விலக்காக நடை பெற்ற விழா,…

கதைகள்

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மாந்தர் தாமிருக்கும் நிலைக்குக் காலச் சூழ்நிலையே காரணம் என்று எப்போதும் புகார் செய்வார். எனக்குச் சூழ்நிலை மீது…

அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்

திலகபாமா அன்புள்ள நிஷாந்த் நீ நலமாயில்லை அல்லது நலமாயிருப்பதாய் நம்புவதாய் எழுதிய கடிதத்திலிருந்து எனது பதில் துவங்குகின்றது. உன் எழுத்துக்கள் நடுங்குவதைக் கண்ணுற்ற நான் அதைத் தவிர்க்கவே இக்கடித்தை எழுதுகின்றேன். எல்லாரும் குழந்தைகளை யசோதைக்கு…

புழுக்கம்

உடம்பு பூராவும் ரத்தத்துக்குப் பதிலாக அந்த விஷச் சொற்கள் ஓடுவது போல ரத்னாவுக்குத் தோன்றியது. என்ன ஒரு கேடு கெட்ட நிலைமை. அவளுக்கு அருவருப்பாக இருந்தது. மனம் குன்றுவது போலிருந்தது. இந்த உணர்ச்சிகள் எல்லாம்…

கலைகள். சமையல்

பழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு

இசையரங்குகளில்  அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் இசைக் கருவிகளுள் ஒன்று   மோர்சிங் ஆகும்.  தாள இசைக்கருவியான இது  முகர்சிங் என்றும் அழைக்கப்படும்.  கையடக்கமான இக்கருவியை வாயினால் கவ்விக்கொண்டு தாளச் சொற்கட்டுகளை (ததிகிடதோம் – தகதோம் )…

கவிதைகள்

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

இரவு வானம் சூரியன்- பகலில் மத்தாப்பெரிக்கிறான். நெருப்பு பொறியில் துளைகளாகி போகிறது இரவு வானம் . களவாணி இதமான மௌனத்தை பெயர்த்து களவாடத் தூண்டும் இரவு வானில் சிதறி கிடக்கம் நட்சத்திரங்கள் மனசுக்காக ...…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எழுகிறது ஒரு குரல் சுருண்டு சோம்பிக் கிடக்கும் என் அறையி லிருந்து ! உன்னோடு இன்னும் நான் வசிக்க முடியும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "வாழ்க்கை வீணையை எவரது விரல்களும் மீட்ட முடியாது என்னுடைய கரம் தொட்டு அவை ஆசீர்வதிக்கப் படா விட்டால், அவரது கண்கள்…

இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்

இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும் வாப்பும்மா சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர் எனக்கில்லையினி. மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில் அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும். வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார் கபுறடியில்…

ஊதா நிற யானை

சுத்தமாய் வெள்ளைத்தாள் சிதறிய கிரெயோன் கலர்கள் இரண்டு கோடுகள் ஒரு கோணல் வட்டம் நம்பிக்கையோடு யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று குழந்தைக்கோ கர்வம் ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று. யானைக்கு ஊதாநிறமா? அதிருப்தியோடு கேட்டார்…

வாழ்தலை மறந்த கதை

அவளிடம் சொன்னேன் அடுப்படி தாண்டு .பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக விஷயங்கள் இருக்கின்றன வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும் வித்தை சொல்லித் தருகிறேன் அவள் வந்தாள். சுமக்க முடியாத சங்கிலிகளையும்…

கவிஞனின் மனைவி

அபூர்வமான சொற்களைப் பின்னும் பொன்னிற சிலந்தி அவன் ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய் நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில் அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப் பார்த்தவாறே உறங்கிப்போவாள்.…

மேலதிகாரிகள்

உறங்கத் தாமதமாகும் ஒவ்வொரு இரவும் சுமந்து வருகிறது உழைப்பின் களைப்பை அலுவலகம் உறிஞ்சிச் சுவைத்த நேரத்தை பார்களில் அமர்ந்து பீராக உறிஞ்சியபடி அதிக வேலை பற்றியும் அதிகப்படியாயோ குறைந்தோ கிடைத்த போனஸ் பற்றியும் கடுகடுத்த…

காகித முரண்

ஒரு மரம் விடவில்லை ஒரு சுவர் விடவில்லை ஊரெல்லாம் விழா பற்றி ”காகித” போஸ்டர்ஸ் முதல்வர் கலந்து கொள்கிறாராம் ஊரே விழாக்கோலம் பூண்டது சிறுவன் படித்துக்கொண்டிருந்தான் காகிதம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது விழாவின் பெயர் ஏதோ…

சின்னப்பயல் கவிதைகள்

ஆள்காட்டி மழை ஜன்னல் கம்பிகளில் தொற்றிக்கொண்டிருந்த மழை நீரை ஆள்காட்டி விரல் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அழுத்தி வடித்து விட்டேன். மறு நாள் மழை வரவில்லை. ஆள்காட்டி விரல் காரணமாயிருக்குமோ ?…

காட்சியும் தரிசனமும்

பூகோள வரைபடங்கள் இல்லாமல் திசையை அவதானித்து தேசங்களைக் கடப்பதாய் பறந்தும் மிதந்தும் மின்னல் வேக இறக்கத்தில் ஒரு மீனைக் கொத்திச் செல்வதாய் வளாகங்களின் சாளர மேற்புறத்து வெயில் மறைப்புகளில் ஒடுங்கிப் பெருகுவதாய் மலரினுள் நுழைந்து…

ப.மதியழகன் கவிதைகள்

மணல் வீடு   வானக்கூரையை தொட்டுக் கொண்டு நிற்கும் கலங்கரை விளக்கம் படகுகளைத் தாலாட்டும் கடலலைகள் கடலில் நீந்தும் மீன்கள் வலையில் அகப்பட்டால் பாத்திரத்தில் பதார்த்தமாய் கிடக்கும் கடலின் ஆழத்தில் பனித்துளி முத்தாக உருமாறும்…

காலம் – பொன்

பொன்னை துரத்தும் பந்தயம் காலம்-நான்-பொன் ஒருவர் பின் ஒருவர் துரத்தியபடி . ஓடினால் அள்ள முடியாதென குதிரை மேல் சவாரி . ஏறியதும் தெரிந்தது - இது பொன் இடும் குதிரை மட்டுமல்ல பொன்…

பிறந்த மண்

மணல் குன்றில் விளையாடுகின்றன குழந்தைகள். மலை ஏற்ற வீரர்களைப்போல் அதன் உச்சியில் ஏற நெகிழ்ந்து மண் சரிய சிரிக்கின்றன . மணலில் மலை செய்து அதில் குகைகளைக்குடைந்து கூழாங்கற்களை வாசலுக்குப்பதிக்கின்றன மணலில் சித்திரங்களை,பெயர்களை வரைந்து…

வினா ….

இருளை உள்ளடக்கியே பரவிக்கொண்டிருக்கின்றன வெளிச்சக் கீற்றுக்கள் எங்கும் துளை போட இயலாமல் காற்றுவெளியில் இறுகி கோளங்களாய் உருண்டு வீசப்படாத எரிபந்துகளாய் அந்தக் கோள்கள்... வழி எனும் விடை தெரிந்தோ தெரியாமலோ திசை எங்கிலும் விரவிக்…

நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.

தலையால் நடந்து கொண்டிருக்கும் ஒரு வினோத பட்சியின் பின்னே துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன் கைகால் முளைத்த மரங்கள் ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை பூமியில் வரைந்து செல்கிறது எனக்கென தென்பட்ட திசையெங்கும் வருடிப் புணர்ந்த…

புறமுகம்.

என்றுமே தோன்றிடாத பல புன்னகையை இன்று இக்கணம் சுமக்கிறேன் . இது எவ்வளவு மிகைமை உடையவையாக இருந்தும் இன்னுமும் சிரிக்கப்படுகிறது. மீண்டுமொரு தடவை இந்த நிகழ்வு வராமல் போகவும் கூடும் அதன் பொருட்டே ஏற்று…

சமன் விதி

பிடிகள் தேடி கைகளும் ஆதாரங்கள் தேடி கால்களும் அலையும். உயிர்வளிக்காய் பிதற்றும் நுரையீரல்கள்... வெள்ளி மறைந்து நாளை குறித்த ஐயங்கள் முளைக்கையில் எங்கோ தூரத்தில் ஓர் ஊர் குருவி தனக்கான கூட்டை கட்டி முடித்திருக்கும்.…

ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..

வானெங்கும் கருந்திரள்கள் நிறைத்திடும் இரவொன்றின் நேர்க்கோட்டில் அசையும் வளைவுகளென நெளிகின்றன இதயத்துடிப்புகள்.. நெற்றி வகிடின் இறுக்கத்தினில் செவ்வானம் ஒன்றை எழுதிடச் சொல்லி நிற்கையிலே அறைமுழுதும் வெளிர்மஞ்சள் ஒளியில் சிறகு விரிக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள் சில.. வானவில்லின்…

காற்றும் நானும்

ஆழ்ந்த உறக்கத்தினிடையே அடித்த காற்றில் வெளியே பறந்த தெருத்தூசுகளோடு அடித்து கொண்டிருந்த சன்னல் கதவின் அகண்ட வெளிகளோடு தொலைந்து போயிற்று தூக்கமும். விழிகளை அடைத்து இருண்ட வெளியில் புரண்டு புரண்டு காற்றோடு மிதந்து போன…

நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….

திரிபு வார்த்தைகளும் தத்துவார்த்த பிழைகளும் தின்மச் சொற்களும் தந்த ரணங்களை சுமந்து இடர் சூழ்ந்த இவ்வுலகில் பொருள் தேடி அலைகிறேன்.... துயரம் சொல்லொணாத் தவிப்புடன் உடல் நிறைக்க இறுகிப்போன சக்கையாய் மனம்.... நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்…

நிழல் வேர்கள்

வரும் மனிதருக்கு வழி சொல்ல சிதற விட்டுச் செல்லும் நம்பிக்கை கற்களில் மூதாதையரின் பல்வேறு முகங்கள். பிரமாண்ட பிரமிட்டின் முனை சிதைந்து காலமா யுருண்டு தரைக்கு வரும் கல். அதை உற்று நோக்கும் ஆய்வின்…

சலனப் பாசியின் பசலை.

. * மரண மீன் செதிலசைத்து நீந்துகிறது நாளங்களில் மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில் உடைந்து வாலசைக்கிறது இதயம் நோக்கி மௌன நீர்மையில் வேர்ப் பிடித்து முளைக்கும் சலனப் பாசி நெளிந்து நெளிந்து கலக்கும்…