மறு நாள் அதிகாலையில் கண் விழித்த ராதிகா தன் தோழி ஒருத்தியின் வீட்டுக்குப் போய்விட்டு அங்கிருந்தே கல்லூரிக்குப் போவதாகச் சொல்லிவிட்டு வழக்கத்தை விடவும் ஒரு மணி நேரம் முன்னதாகப் புறப்பட்டுவிட்டாள். தீனதயாளன் ஏற்கெனவே கிளம்பிப் போய்விட்டிருந்தார். அவள் பத்மஜாவின் வீட்டை அடைந்த போது, பத்மஜா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “அடடே. வாடி, வா. காலங்கார்த்தால வந்திருக்கே? ஆச்சரியமா இருக்கே? சாப்பிட்டியாடி?” ”சாப்பிட்டுட்டுத்தாண்டி கெளம்பினேன். உன்னோட உதவி எனக்கு அவசரமாத் தேவை.” ”சொல்லு. என்ன உதவி?” ”உங்கம்மா இல்லையா?” “இருக்காங்களே. […]