திருப்பூர் சக்தி விருதுகள்

This entry is part 8 of 9 in the series 2 ஜூன் 2019

பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல “  பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல.. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப்படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது . அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடும், வீட்டுக்காரியங்க்ளோடு சேர்ந்து  எழுதுவதையும் செய்து வருகிறோம். பெண்கள் பல துறைகளில் முன்னேறி வளர்கிறோம் “ என்றார் சக்தி விருது 2019 பெற்ற கவிஞர் உமாமகேஸ்வரி அவருக்கும் . மற்றும் 21 பேர்களுக்கு இலக்கியம், கல்வித்துறை,ஓவியம் , .சமூகப்பணி சார்ந்த பெண்களுக்கு சக்தி விருதுகள் ஞாயிறில் […]

என்னவளே

This entry is part 6 of 9 in the series 2 ஜூன் 2019

கௌசல்யா  ரங்கநாதன்      -1- “ஹாப்பி, இன்று முதல் ஹாப்பி”, என்று மெதுவாய்  ஹம் செய்தவாறு நான் வெளியில் கிளம்பிய அந்த மாலை 5 மணிக்கு  என் மனைவி ஜானகி  வந்து என்னிடம்  ஒரு செல்போனை கொடுத்தாள். நான் அவளை நிமிர்ந்து பார்த்த போது “உங்களுக்கு,  ஸா¡¢ நமக்கு வயசாயிருச்சில்லையா ? ¡¢டயராயிடீங்க வேற..  வெளியில, போகச்சொல்ல கையில இந்த செல்போன்  இருந்தாவசதியாயிருக்குமேனுதான் ” என்று இழுத்து, இழுத்து அவள் பேசிய போது  எனக்கு சி¡¢ப்புதான் […]

நமக்கான எதுவும் நம்மிடம் இல்லை

This entry is part 7 of 9 in the series 2 ஜூன் 2019

மஞ்சுளா முற்றிலும் இழந்து விட்ட நேரங்களால் நிரம்பியுள்ளது இவ்வுலகம் மூடப்பட்ட இவ்வுலகத்திலிருந்தே திறக்கின்றன நமக்கான கதவுகள் திறக்கப்படும் ஒலியை அறியும் செவிகள் நுட்பமானவை நுட்பத்திலும் வெகு நுட்பமான திறனுடன் அறியப்பட்ட வெவ்வேறு வடிவங்களில் நிரப்பப்பட்ட கலன்களில் ஊறிக்கொண்டிருக்கின்றன நம் சுவைகள் சுவையூரிகளிடமிருந்து பிடுங்கப்பட்ட வாழ்க்கை நவீன உத்திகள் பொதிந்த விளம்பரங்களால் வளர்ந்து கொண்டே போகின்றன சிதைவுகளின் கோர உருவத்தை மறைத்து விளம்பரங்களையே நுகரும் மக்களால் வாழும் இவ்வுலகத்தில் உற்பத்தி செய்யப்படலாம் எதுவும் முற்றிலும் இழந்து விட்ட நமக்கான நேரங்களைத் தவிர.                 மஞ்சுளா             […]

கசடு

This entry is part 3 of 9 in the series 2 ஜூன் 2019

கசடு      வளவ. துரையன் மறைந்தவர்களின் மாசுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவது மரியாதையன்று மரபுமன்று ரணம் இன்னும் ஆறாவிடினும் ஈக்களை மட்டும் ஓட்டுதலே தற்காலிகப் பணி வேல் கொண்டு பாய்ச்சினால் குருதிக்கறையே காலத்தின் கோலம் புகழுரைகளும் பூமாலைகளும் அமிர்தமே ஆனாலும் அளவுக்கு அதிமானால்…? உச்சி மரக்குளையில் உட்கார்ந்திருக்கும் குரங்கு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. கட்டிப்போட்டிருக்கும் எருமையும் கணக்கு தீர்க்கக் காலம் பார்க்கிறது. அழுக்குகளை அழித்துக்கொண்டு ஓடும் என எண்ணும்ஆறு ஆலயங்களையும்தான் ஆடும்வரை ஆடிப்பார்த்து இப்போது கீழிறங்கி வந்துக் காசு கேட்கும் […]

ஆழமும் தெளிவும் உள்ளவை [வ. ஸ்ரீநிவாசனின் எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது” தொகுப்பை முன்வைத்து]

This entry is part 2 of 9 in the series 2 ஜூன் 2019

வ.ஸ்ரீநிவாசன் மதிநுட்பம் நூலோடு வல்லார் ஆவார். முன்னமே நாஞ்சில்நாடன் அவரைப் பற்றி என்னிடம் வியந்தோதி உள்ளார். அவரை ஒரே ஒரு முறை கோவையில் அவரில்லத்திற்குச்சென்று சந்தித்திருக்கிறேன். நெடுநாள் பழகியவர் போல் அளவளாவியது இன்னமும் நினைவிலிருக்கிறது. அவரெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அண்மையில் வெளியாகி உள்ள “எதைப்பற்றியும் [அ] இதுமாதிரியும் இருக்கிறது”. கட்டுரைத்தொகுப்பு எனச் சொன்னாலும் இதில் உள்ளவை ஒரே கட்டுரையில் அடக்கப்பட்ட பல்வகைப்பட்ட சிறு பகுதிகள் என்று சொல்லலாம். அதாவது பத்தி எழுத்து வகையில் அமைந்தவை. படிக்கச் சலிப்பூட்டாதவை. […]

பூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.

This entry is part 4 of 9 in the series 2 ஜூன் 2019

FEATURED Posted on June 1, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது !பேய் மழைக் கருமுகில் சூழுது !நீரை, நிலத்தை, வளத்தை,பயிரை, உயிரை, வயிறைவிரைவில் சிதைக்கப் போகுது !கடல் மட்டம், வெப்பம் ஏறிகரைப் பகுதிகள் மூழ்குது !மெல்ல  நோய்கள் பரவி, நம்மைக்கொல்லப் போகுது !நிற்காது மூன்றாம் உலகப் போர் ! ++++++++++++++++ […]

உள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதி

This entry is part 5 of 9 in the series 2 ஜூன் 2019

_ ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) Matt இல்லை Gloss என்பதாலோ என்னவோ முகப்பு அட்டையிலுள்ள அவருடைய முகத்தில் அறிவு தகதகத்துக்கொண்டிருக்கிறது _ அவராலேயே ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு. வெறுப்பின் இருள் எப்போதும் மண்டியிருக்கும்  அவருடைய விழிகளில்தான் எத்தனை பரிவும் நேயமும் Photoshop finishing என்பது இதுதானோ…? படித்துமுடித்துவிட்டேன் என்கிறார் பக்கத்திலிருந்தவர். பிடித்திருக்கிறதா? என்று கேட்காமலிருக்கமுடியவில்லை. ’பிரமாதம்! எத்தனை கண்ணியமாக வாதங்களை  முன்வைத்திருக்கிறார்’ என்கிறார். ’எத்தனை கவனமாக அவருடைய சொற்பொழிவுகளின் இழிசொற்கள், வன்மச்சொற்கள் வக்கிரச்சொற்கள் விலக்கப்பட்டிருக்கின்றன’  என்று சுட்டுகிறேன். சட்டென்று […]

குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்

This entry is part 1 of 9 in the series 2 ஜூன் 2019

‘ரிஷி ’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை குரலற்றவர்களின் குரலாக இருப்பதான பாவனையில் அவர்கள் நம் குரலாகிறார்கள்; ஊமையாக நாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள் அவர்கள் நம்மை வாயடைத்துப்போகச் செய்கிறார்கள் அவ்விதமாய் நம்மை அவர்களின் ஊதுகுழல்களாகிவிடுகிறார்கள். அவர்கள் வா என்கிறார்கள்; நாம் வருகிறோம்; போ என்கிறார்கள். போகிறோம் ‘ஆமாம்’ என்கிறார்கள் அவர்களுக்கு ‘கோரஸ்’ பாடுகிறோம். ’இல்லை’ என்கிறார்கள் அவர்கள் சொல்லை எதிரொலிக்கிறோம். அவர்கள் ‘குறைவு’ என்கிறார்கள் ‘அதிகம்’ என்ற பொருளில்; மூன்று என்கிறார்கள் நான்குக்கு. நாம் அவர்களை நம்புகிறோம் என்றும் போலவே.. […]

நேர்மைத் திறமின்றி வஞ்சனை சொல்வாரடீ…….

This entry is part 9 of 9 in the series 2 ஜூன் 2019

எழுத்தாளர் அசோகமித்திரனின் கதையொன்றில் ஒரு இளைஞன் கடையொன்றில் நுழைந்து அங்குள்ள அரும்பொருட்களைப் பார்த்துக்கொண்டே போவான். ஒன்றிரண்டு பொருட்களின் விலையைக் கேட்பான். ‘நீ வாங்கிக் கிழிக்கப்போகிறாய்’ என்ற எகத்தாளச் சிரிப்போடு கடை சிப்பந்தி அலட்சியமாக பதிலளிப்பான். ’இந்த மாதிரி இளக்காரச் சிரிப்புகளையெல்லம் ‘சப்’பென்று அறைந்து நீக்கினாலே போதும் – உலகின் பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்’ என்று எண்ணிக்கொண்டே அந்த இளைஞன் வெளியேறுவான். இது மிகவும் உண்மை என்பதை உறுதிசெய்யவே சில பேரறிவுசாலிகள் நம்மிடையே இருக்கிறார்கள். அதே இகழ்ச்சிச் சிரிப்போடு […]