மகளின் அறையை முற்றாக அலசிப் பார்த்த பிறகும் அவளது விந்தையான நடத்தைக்கான எந்தத் தடயமும் கிடைக்காததால், பத்மஜாவையே சந்தித்து என்ன விஷயம், என்ன பிரச்சினை என்பதை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டால் என்ன என்று அவருக்குத் தோன்றிற்று. எனினும் அப்படிச் செய்வது அநாகரிகச் செயலாக இருக்கும் என்பதால் மட்டுமல்லாது, தம் மகளைத் தாமே வேவு பார்ப்பதை அவள் தோழிக்கு அது காட்டிக்கொடுத்துவிடும் என்பதாலும், அந்த எண்ணம் தோன்றிய கணத்திலேயே அதை அவர் ஒதுக்கினார். கல்லூரி விட்டதும் நேராக […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 13. சாதனைகள் படைத்த ஏழை மூன்று,,,மூன்று,,,மூன்று,,, அட என்னங்க,,,மூனு மூனுன்னு சொல்லிக்கிட்டே வர்றீங்க,, ஆமா நீங்கதான் மூன்று எழுத்துல முடியும்னு சொன்னீங்க. நானும் என்னென்னமோ பேருகளச் சொல்லிப் பாத்துட்டேன் நீங்க எதுவுமே இல்லைங்குறீங்க..அதுதான் நான் மூனுமூனுன்னு சொல்லிக்கிட்டே வர்ரேன்..அப்பவாவது எனக்கு ஞாபகத்திற்கு வருதான்னு பாப்போம்..ம்.ம்.ம்.ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே… நீங்கதான் விவரமாச் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கதிரலைக் கருவிக்கு மட்டும் புலப்படும் ! காலவெளிக் கருங்கடலில் பாலம் கட்டுவது, ஓவியக் கோலம் வரைவது மாயக் கருந்துளையே ! காமாக் கதிர்கள் வீசுபவை ! பிரபஞ்சக் குயவனின் களிமண் துளைக்குகை அவை ! கருந் துளைக்குள் புதையலாய் ஒளிந்திருக்கும் புதிய பிரபஞ்சம் ! ஒளி உறிஞ்சும் உடும்பு ! பாழ்பட்ட விண்மீன் விழுங்கி ! காலாக்ஸி பின்னலாம் ! […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. என்னருகில் படகோட்டி உள்ள போது அவனருகில் நான் செல்வ தில்லை ! விருட்டென அவன் நீங்கிய காற்றின் வேகத்தை கடந்து சென்ற போது உணர முடிந்தது என்னால் ! படகோட்டி கரைத்தட மிதப்பில் நடந்த போது குறிப்பாய் என் விழிகள் அவனைப் பார்க்க வில்லை ! நீரோட்டம் எதிர்த்துச் செல்லும் படகு நகர்ச்சியின் தூரத்து அரவம் மட்டும் […]
– சூர்யநிலா.எழுதப்படும் கவிதைகள் மிகையாகவும் படிக்கப்படும் கவிதைகள் குறைவாகமிருக்கும் காலச் சூழல் இது. எப்படியாவது படித்துவிட வேண்டுமென்ற கட்டாயத்தில் சில தொகுப்புகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவா;களின் ‘உரிய நேரம்’ படித்துவிட கட்டாயப்படுத்தும் தொகுப்புதான். 1971-ஆம் ஆண்டிலிருந்து கவிதைத் தளத்தில் இயங்கி வரும் இவா;-தமது 66-ஆம் வயதினில் ‘உரிய நேரம்’ தொகுப்பினைத் தந்துள்ளார். தனது முதல் தொகுதியான ‘கவசம்’ நூலிலிருந்த கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பதால் சற்றொப்ப, இவரின் ஒட்டுமொத்தக் கவிதைத் தொகுப்பாகவும் இதைக் […]
“புத்தரே. ஒரு பிட்சு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவில்லை தேவதத்தன்” “ஆனந்தா. .. தீட்சை பெற்று பிட்சுவாவதும், பௌத்த சங்கத்தில் இணைவது ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்கு. அவர்களை பின் பற்றி மக்கள் தம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் நிச்சயமாக பிட்சுக்களின் நடத்தை சரியில்லாத பட்சத்தில் தாங்களே அவர்களைக் கண்டிப்பதுடன் சங்கத்தில் புகாரும் செய்வார்கள்” “அது வரை?” “அது வரை பொறுமை காக்க வேண்டும் ஆனந்தா” “எந்த பிட்சுவும் மன்னர்களைத் […]
[ 1 ] சிலருக்கு பெயர் சிலருக்கு செயல், சிலருக்கு உவமை சிலருக்கு கயமை; சிலருக்கு குறியீடு சிலருக்கு குறைபாடு, சிலருக்கு பக்தி சிலருக்கு கத்தி; சிலருக்கு பொறுப்பு சிலருக்கு வெறுப்பு, சிலருக்கு புனிதம் சிலருக்கு கணிதம்; சிலருக்கு அறவியல் சிலருக்கு அரசியல், சிலருக்கு வாலிவதம் சிலருக்கு ஞானரதம்; சிலருக்கு சுற்றுச்சூழல், சிலருக்கு கடல்வாணிபம் காதலின் இலக்கணம், கேடுகெட்ட ஆணாதிக்கம் உறவில் துறவு, துறவில் உறவு அனர்த்தம், அண்டசராசரம் இன்னும் _ ஒரு சொல் ஒரு […]
11 மலேசியக் கார் ‘வாடிய பயிர் சூரியனைக் கண்டது போல்’ பசி வயிரைக் கிள்ளிய நேரத்தில் படைக்கப் பட்ட உணவை உண்ண கேட்கவும் வேண்டுமா? அதிலும்,அம்மா தயாரித்த தேநீர் என்றால் பார்த்திபனுக்கு மிகுந்த விருப்பம்.இரண்டு மூன்று கிளாஸ் தேநீரை உருசித்துக் குடிப்பான்.அம்மாவின் கைப்பதம் அவனைக் கிறுகிறுக்கச் செய்துவிட்டிருந்தது! இதை நன்கு தெரிந்து வைத்திருந்ததால் முன்னெச்சரிக்கையாக அம்மா, பெரிய ஜக்கில் தேநீரைக் கலக்கி கொண்டு வந்திருந்தார். அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து தான் பிரட்டிய மீகூனை சுவைத்து […]
நாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விசியங்களை ஆதாரத்துடன் ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாதத் தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா? சிறிய சமூகத்திற்கு இத்தனைப் பிரச்சனைகளா? என்று வியக்காதவர்கள் யார்? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் லாக்காப்பில் இந்திய இளைஞர்களின் தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் […]
சித்ரா சிவகுமார் ஆங்காங் ஆங்கிலேயர்களின் 100 ஆண்டுகளுக்கு மேலான ஆட்சிக்குப் பிறகு 1997இல், ஆங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 1996லிருந்து இங்கு வாழ்ந்து அதன் வளர்ச்சியைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. பற்பல வளர்ச்சிப் பணிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அதில் மிகவும் பிரம்மாண்டமான திட்டம் தான் சீனாவின் மூன்று முக்கிய நகரங்களுக்கு உறவுப்பாலம் அமைப்பது. பேச்சு வார்த்தைகளால் அல்ல. கடல் வழி பாலம் அமைத்து, அவற்றை இணைப்பது. ஆம்.. ஆங்காங், மக்காவ், ஜூஹாய் ஆகிய மூன்று […]