(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 15. கிஷன் தாஸ், பிரகாஷ் ஆகியோரின் அறைகளில் உள்ள சுவர்க் கடிகாரங்கள் சில நொடிகளின் இடைவெளியோடு நள்ளிரவு தாண்டிய 1:30 மணி என்பதைக் குறிக்க ஒரு முறை அடிக்கின்றன. திடுக்கிட்டுத் தூக்கம் கலைந்த நிலையில் கிஷன் தாஸ் எழுந்து உட்காருகிறார். அவர் கண்கள் மூடி இருக்கின்றன. அவர் தம்மிரு கைகளாலும் முகத்தைப் பொத்திக்கொள்ளுகிறார். சில கணங்கள் போல் மவுனமாக அப்படி உட்கார்ந்திருந்ததன் பிறகு எதனாலோ அஞ்சி நடுங்குபவர் போல் அவர் இரைந்து கூச்சலிடுகிறார். […]