இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்

This entry is part 46 of 46 in the series 5 ஜூன் 2011

அன்னா ஹசாரே தொடங்கிய போராட்டம் இந்தியாவில் ஒரு ஆரோக்கியமான போராட்ட அரசியலைத் தொடங்கியுள்ளது. அந்தப் போராட்டத்தில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டதும், தொடர்ந்து நடத்துவதும் இந்தியாவின் பொது மக்கள் ஜன நாயகத்தில் பங்கு பெறுவதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. பொது மக்கள் வாக்களிப்பதை மட்டும் ஜன நாயகக் கடமையாய்க் கொள்ளாமல், தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்ததன் அறிகுறி இது. அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகப் பணியாளர்கள் என்று தம்மை அடையாளம் கண்டுகொண்டவர்கள் அரசியலின் பிரசினைகளை […]

(68) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 45 of 46 in the series 5 ஜூன் 2011

சுமார் ஆறு மாத காலம் இருக்கும். கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் என் வீட்டில் தங்கியிருந்தது. குழந்தைகள் என்னிடம் மிகுந்த பாசத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தன. இப்போது அவர்கள் இல்லை. வீடு வெறிச்சோடிக்கிடந்தது. ஆனால் சுகமோ துக்கமோ இம்மாதிரியான மனச்சலனங்கள் அதிக நாட்கள் நீடிப்பதில்லை   .வீடு காலியானதும் நண்பர்கள் மறுபடியும் வந்து குழுமத் தொடங்கிவிட்டார்கள். தேவசகாயம் கூட தனக்கென ஒரு வீடு அரசு கொடுத்திருந்த போதிலும், “இது தாங்க நம்ம வீடு. அது வெறும் கெஸ்ட் ஹவுஸ் தான். அப்பப்ப யார் […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38

This entry is part 44 of 46 in the series 5 ஜூன் 2011

   சென்ற வாரம்  तृतीया विभक्तिः(tṛtīyā vibhaktiḥ ) அதாவது Instrumental Case  பற்றி விரிவாகப் படித்தோமல்லவா? இந்த வாரம் மேலும் சில பயிற்சிகளைச் செய்வோமா? பயிற்சிகளைச் செய்வதற்கு முன் तृतीया विभक्तिः(tṛtīyā vibhaktiḥ ) அட்டவணையை நினைவுபடுத்திக் கொள்ளவும்.   अ.  अधः साधनानां राशिः अस्ति। तेषां साहाय्येन अधस्तनप्रश्नानाम् उत्तराणि लिखन्तु। adhaḥ sādhanānāṁ rāśiḥ asti | teṣāṁ sāhāyyena adhastanapraśnānām uttarāṇi likhantu | கீழே உபகரணங்களின் குவியல் இருக்கிறது. […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3

This entry is part 43 of 46 in the series 5 ஜூன் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நியாய யுத்தம் என்று ஒன்று இருக்கிறதா ?  ஆயுதங்களும் குண்டுகளும் சாமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலவச் செய்யுமா ?  மரணத் தொழிற்சாலைகள் மூலமே மனித வாழ்வு செழிக்க வேண்டுமா ?  நான் யுத்தத்தின் மீது போர் தொடுக்கிறேன்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வறுமையைப் பற்றி எழும் அச்சமே உன்னை ஆட்கொள்ள அனுமதிக்கிறாய்.  அதனால் கிடைக்கும் வெகுமதி உன்னால் உண்ண முடியுமே […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)

This entry is part 42 of 46 in the series 5 ஜூன் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ”ஆலயங்களுக்கும் மற்ற புனிதத் தளங்களுக்கும் நான் தொழச் செல்கையில் அங்கேயும் திருவாளர் பிதற்றுவாயன் கரத்தில் ஒளிவீசும் செங்கோல் ஏந்திச் சிரத்தில் கிரீடத்துடன் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருப்பான் !  என் இல்லத்துக்கு நான் மீளும்போது அங்கும் காணப் படுவான் கூரையிலிருந்து தொங்கும் பாம்புபோல் !  சுருங்கக் கூறின் திருவாளர் பிதற்றுவாயன் எல்லா இடங்களிலும் நடமாடி வருகிறான்.”   கலில் கிப்ரான். (Mister Gabber)   […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)

This entry is part 41 of 46 in the series 5 ஜூன் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா         “எங்கு நீ இனிதாக வசிப்பாய் ?” என்று நான் வினவினேன். “அரண்மனை வசிப்பே சிறந்தது” என்று நீ அளித்தாய் பதில். “அங்கென்ன அதிசயம் கண்டாய் ?” “பல்வேறு விந்தைகள் பார்த்தேன்,” என்றாய் ! “பிறகு ஏன் நீ வருத்த மோடு தனித்துள்ளாய் ?” “ஏனெனில் இந்தப் பகட்டு வாழ்க்கை காணாமல் போகும் கணப் பொழுதில் !”   […]

தரிசனம்

This entry is part 40 of 46 in the series 5 ஜூன் 2011

  மலைக்கு இந்த வருஷம் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று மணி சொன்னதும் சேஷு ஒப்புக் கொண்டு விட்டார்.   கடந்த நாலைந்து வருஷமாகவே மணி சேஷுவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ஒழியவில்லை. இந்தத் தடவை  மணி மலைக்குப் போவது இருபத்தி ஐந்தாவது வருஷமாம் . ஆபிஸில் அவரை ஏற்கனவே வெள்ளி விழா மணி என்று   கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.மணி சேஷுவின் அலுவலகத்தில் மற்றொரு  பிரிவில் இருந்தார். சேஷு அங்கே சேர்ந்து  பதினைந்து வருஷ மாகப் போகிறது, இந்த டிசம்பர் வந்தால். மணி […]

விக்கிப்பீடியா – 2

This entry is part 39 of 46 in the series 5 ஜூன் 2011

சித்ரா சிவகுமார், ஹாங்காங் “என்ன ராணி.. மும்முரமாக அகராதியும் கையுமாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?” “எனக்கு ஒரு ஆங்கில ஆவணத்தை மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது. சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாமல் அகராதியில் தேடிக் கண்டுபிடித்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்.” “ஏன் கணினியைப் பயன்படுத்தவில்லையா?” “இல்லை கோபி.. நான் இது வரை கணினி அகராதியைப் பயன்படுத்தியவதில்லை.” “ராணி.. கணினியைப் பயன்படுத்தினால் பக்கங்களைத் திருப்ப வேண்டியிருக்காது.  நேரமும் மிச்சமாகும்” “கோபி.. எனக்கு எப்படிச் செய்வதென்று சொல்லிக் கொடு” “விக்சனரி […]

பிஞ்சுத் தூரிகை!

This entry is part 38 of 46 in the series 5 ஜூன் 2011

  அடுத்த வாரமாவது சுவருக்குச் சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி.   வட்டங்களும் கோடுகளுமாய் மனிதர்கள் சதுரங்களும் செவ்வகங்களுமாய் கொடிகள் ஏனல் கோணலாய் ஊர்வலம்   இரண்டு சக்கர போலீஸ் காரும் காரைவிட பெருத்த விளக்குகளும்   விதவிதமான பந்துகளும் விரட்டும் ஜந்துக்களும் ஆங்கில எழுத்துகளும் அதன் தலைகளில் கொடிகளும்   டி ஃபார் டாக்கும் எஃப் ஃபார் ஃபிஷ்ஷும் குச்சிக் குச்சி கைகளோடு குத்தி நிற்கும் சடைகளோடு வகுப்புத் தோழிகளும்   உடலைவிடப் பெருத்த தும்பிக்கையோடு […]

திட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1

This entry is part 37 of 46 in the series 5 ஜூன் 2011

(A discourse on strategy and organization) – Part 1 (கட்டுரை தொடங்குமுன் ஒரு முன்னுரை:  இந்த இருபது வருடங்களில் இந்தியாவில் உள்ள பெரு நகரங்கள் சென்னை உட்பட கண்ட மக்கள்தொகை மற்றும் தொழில் வளர்ச்சி அபரிதமானது. இங்கு எழும்பி நிற்க்கும் சில கட்டிடங்களும், தொழில் நிறுவனங்களும் உலகதரம் வாய்ந்தவை. ஆனால், இந்த நகரங்களில் உள்ள சாலை, குடி நீர், மற்றும் பொது வளங்களோ (கல்வி சாலைகள் உட்பட) வெறும் குப்பை கழிவுகள் என்று சொன்னால் […]