தனிமையின் இன்பம்

This entry is part 6 of 7 in the series 9 ஜூன் 2024

சசிகலா விஸ்வநாதன் பத்மநாபன் நன்றாய் தூங்கி கண்விழிக்கும்போதுதான் நினவில் வந்தது;சங்கேஸ்வரி, சிறு மனஸ்தாபத்தில், பிறந்தகம் போயிருப்பது. ஆஹா! இன்று விடுமுறை நாள் என்று நினைப்பே வெறுப்பாய் இருந்தது.             வாயில் கதவைத் திறந்து செய்தி தாளை எடுப்பதற்குள், வெள்ளை பூனை ஒன்று உள்ளே வந்து மிக உரிமையாக சாப்பாட்டு மேசை மேல் தாவி உட்கார்ந்தது.           காபி அருந்தும் வேளையில் பூனைக்கும் ஒரு தட்டில் […]

கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரின் நூல் வெளியீடு

This entry is part 5 of 7 in the series 9 ஜூன் 2024

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 02-06-2024 அன்று கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரால் அமரர் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் தாய்வீடு பத்திரிகையில் எழுதிய ‘இலக்கிய உறவுகள்’ என்ற கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு ஆவண நூலாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்விற்கு கனடா – குரும்பசிட்டி நலன்புரி சபையின் தலைவர் ஐயாத்துரை ஜெகதீஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். முதலில் அமரர் கந்தவனம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி இடம் பெற்றது. குடும்பத்தினர், மற்றும் வருகை தந்தோரின் மலரஞ்சலியைத் […]

காலாதீதன் காகபூஶுண்டி

This entry is part 4 of 7 in the series 9 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணசாமிஇது ஏற்கனவே நடந்திருக்கிறது.முன்னமே உங்களை அறிந்திருக்கிறேன்.ஏதோவோர் மதுரை ஞாபகம் போல்எங்கேயோ பார்த்துப் பழகின பேசிய ஞாபகம்!எல்லாமே அனுபவித்ததாய்த்தான் தெரிகிறது. புதிதாக ஒன்றும் இல்லை. காலம் இவ்வுலகை பட்சணமாய்த் திண்கிறது.ஓட்டைக் குடத்தில் ஒழுகும் நீர்போல்நொடிகள் போய்க்கொண்டிருக்கின்றன.காலம் உண்ணும் இவ்வாழ்க்கையைக்காலாதீதன் நான் கூறுகிறேன்!கோடி பிரம்மாக்களை உண்டுவிட்டேன்.எத்தனை தடவை இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் நடந்தாயிற்று! பார்த்தாயிற்று!எத்தனை தடவை கிருஷ்ணன் அர்ஜுனனுக்குகீதோபதேஶம் செய்தாயிற்று! எத்தனையெத்தனை தேவதைகள் அஸுரர்கள் மானுடர்கள் தாவர-ஜங்கமங்களனைத்தையும்,எவ்வளவோ பேரைப் பார்த்துவிட்டேன்.எத்தனையெத்தனை மஹாப் பிரளயங்கள்,எத்தனையெத்தனை மஹா ஸ்ருஷ்டிகள்,எத்தனையெத்தனை மஹா ஸ்திதிகள்!காலம் வாழ்க்கையை […]

பசியாறலாமா?

This entry is part 3 of 7 in the series 9 ஜூன் 2024

அமீதாம்மாள் இட்லி வேணுமா?தோசை வேணுமா?தயாரா இருக்குமாக்கி நூடுல்ஸ்கேவூர் கூழ்உடனே தரலாம்நேத்து வாங்கியசப்பாத்தி, பரோட்டாஉப்புமா, இடியப்பம்எல்லாம் திடீர் வகைகள்வேணுமா?அட! மறந்துட்டேன்பழசு புடிக்குமேதண்ணிவிட்ட சோறுதயிர், கருவாடு தரவா?சொல்லுங்கஎன்ன வேணும்?யோசித்துக்கொண்டேதொலைக்காட்சியைப்பார்க்கிறேன்ரொட்டிஎதிர்பார்த்து……ஒட்டிய வயிறோடு…..ஆயிரமாயிரம்அகதிகள்அமீதாம்மாள்

படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி !

This entry is part 2 of 7 in the series 9 ஜூன் 2024

முருகபூபதி Preview attachment வ. ந. கிரிதரனின் கதைத் தொகுப்பு.jpg Preview attachment வ.ந. கிரிதரன்.jpg வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.சரியாக ஓராண்டுக்கு […]

`கிழக்கினை எதிர்கொண்டு’ – கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

This entry is part 1 of 7 in the series 9 ஜூன் 2024

கே.எஸ்.சுதாகர் அற்புதமான புத்தகத்தின் தலைப்பு. இலங்கையின் தமிழ் மொழிபெயர்ப்புகள்கிழக்கினை எதிர்கொண்டு காத்திருக்கும் வேளையில், சமீபத்தில் சில புதியமுயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவற்றில் ஒரு ஒளிக்கீற்றாககெகிறாவ ஸுலைஹாவின் இந்தப் புத்தகம் விளங்குகின்றது.ஜீவநதி வெளியீடாக, 2020 இல் வெளிவந்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16சிறுகதைகள் இருக்கின்றன. கெகிறாவ ஸுலைஹா அவர்கள் தான் வாசித்தபடைப்புகளில் சிறப்பானது எனத் தெரிவு செய்து மொழிபெயர்த்திருக்கும் இந்தப் படைப்புகள் ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் வெளியானவை.பின் இணைப்பாக தொகுப்பில் வந்த கதைகளின் எழுத்தாளர்கள் பற்றியதகவல்களையும் ஆசிரியர் இணைத்திருப்பதன் […]

யார்?

This entry is part 7 of 7 in the series 9 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணசாமி தபாலில் அனுப்பியுள்ளது விசித்திர விதைகளை சீனா அமெரிக்காவிற்கு. கண்டித்துள்ளார் அமெரிக்க உளவுத்துறையை கவனக்குறைவிற்காக அமெரிக்க ஜனாதிபதி. சுமந்து வந்தோமிங்கு விசித்திர வாதனா விதைகளை கவனக் குறைவினால். இங்கிருந்து மீண்டும் சுமந்து செல்வோம் இவ்விசித்திர வாதனா விதைகளை இதே கவனக் குறைவினால். உள்ளிருக்கும் உள்ளானை ஓயாது உள்கிறோமா, இல்லையா, என்று உளவு சொல்பவரும் உறங்குகிறார் இவ்வும்பரரங்கில். முரசுக் கட்டிலிலுறங்கும் இம்மோசிகீரனாரைக் கண்டிக்காமல் கவனமாகக் கவரி வீசும் தகடூர் எறிந்த இச்சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை யார்?