சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் பெரும்பாலான பட்டியல் இனத்தவர்கள் நிலமற்ற விவசாயிகளாகவே இருக்கிறார்கள்.

This entry is part 3 of 10 in the series 11 மார்ச் 2018

ஹாரி ஸ்டீவன்ஸ் (இந்துஸ்தான் டைம்ஸ்) பெரும்பாலான இந்திய விவசாயிகள் தங்கள் நிலங்களை தாங்களே உழுது பயிர் செய்தாலும், தலித் என்னும் பட்டியல் இனத்தவர்கள் பெரும்பாலும் நிலமற்றவிவசாயிகளாக மற்றவர்களுக்கு கூலி வேலை செய்பவர்களாக, விவசாய கூலிகளாகவே இருக்கிறார்கள் என்று சென்ற வாரம் வெளியிடப்பட்ட இந்திய சென்ஸஸ் தெரிவிக்கிறது. இந்த சென்ஸஸ் விவசாயிகளை இரண்டாக பிரிக்கிறது. முதலாவது நிலமுள்ள விவசாயிகள். அடுத்தது நிலமற்ற விவசாய கூலிகள் பட்டியல் இனத்து விவசாயிகள் மற்றவர்களைவிட விவசாயக் கூலிகளாகவே இருக்கிறார்கள். ஆனால், இது எல்லா […]

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 4 of 10 in the series 11 மார்ச் 2018

ஊருக்கு உபதேசம் நாவடக்கம் வேண்டும் நம்மெல்லோருக்கும்.  ஆபத்தானவர்கள் அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி அக்கிரமக் கருத்துரைத்து அமைதியிழக்கும் ஊருக்காகவும் அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும் கவனமாய் ’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள்.  புதிர்விளையாட்டு. காயம்பட்ட ஒருவரை ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கும் பாடையில் தூக்கி சுடுகாட்டிற்குக் கொண்டுசெல்வதற்கும் இடையே குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களாவது உண்டுதானே.  முகமூடி அதிவேகத்தில் விரையும் ரயிலின் அருகில் நின்று ஸெல்ஃபி எடுத்துக்கொண்டால் ஆபத்து. அன்பே உருவாயொரு களங்கமில்லாக் குழந்தையாய் என்றேனும் சிரிக்கக் […]

மனச்சோர்வு( Depression )

This entry is part 7 of 10 in the series 11 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பல்வேறு மனநோய்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவற்றில் ஒன்று அனைவருக்கும் தெரிந்த ” டிப்ரஷன் “.என்பது. இது இன்று சர்வ சாதாரணமாக பலரிடையே காணப்படுகின்றது. ” டிப்ரஷன் ” என்பது மனச்சோர்வு. இதன் முக்கிய வெளிப்பாடு கவலை. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கவலைகள் வருவது இயல்பு. கவலை இல்லாத மனிதன் கிடையாது. பல்வேறு காரணங்களால் நாம் கவலை கொள்கிறோம். ஆனால் சிறிது நேரத்தில் அல்லது சில நாட்களில் […]

பிரபஞ்சத்தில்  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது   என்பது பற்றிப் புதிய யூகிப்பு

This entry is part 6 of 10 in the series 11 மார்ச் 2018

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ ஒவ்வொரு பிரபஞ்சத் தோற்ற கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு. கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ஒற்றைத்திரட்டு / ஒற்றைத்திணிவு  [Singularity] என்பதிலிருந்து வேதாளங்கள் [Dragons] பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும். மேல்நிலைப் பரிமாண விண்மீன் சிதைவில் [Collapsing Higher-Dimensional Star] எழும் பெரு வெடிப்புக் கோட்பாடு  ஒரு புனைவு [Mirage] யூகிப்பே. […]

மீனாம்பாள் சிவராஜ்

This entry is part 5 of 10 in the series 11 மார்ச் 2018

தேமொழி தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று 21.04.1938 அன்று அன்றைய சென்னை மாகாண முதன்மை அமைச்சர் ராஜாஜி ஆணையைப் பிறப்பித்தபொழுது அதை எதிர்த்து முதலில் குரல் எழுப்பியவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ். முதல் இந்தி எதிர்ப்புப் பேரணியில் சிறப்புரையாற்றினார். “பெண்களின் விடுதலையே ஆண்களின் விடுதலை” என்று முழக்கமிட்ட முன்னணி பெண்ணியத் தலைவர், ஈ.வெ.ரா. அவர்களை நாம் “பெரியார்” என அழைக்கக் காரணமானவர், அண்ணல் அம்பேத்கர் இயக்கத்திலும் பங்கேற்று அகில இந்திய அரசியலிலும் முத்திரை பதித்து […]

என் வீட்டுத் தோட்டத்தில்

This entry is part 8 of 10 in the series 11 மார்ச் 2018

மீனாட்சி சுந்தரமூர்த்தி என் வீட்டுத் தோட்டத்தில் மணம் தரும் மலர்கள் மிகவுண்டு ஆனாலும் பூ விற்கும் அம்மாவிற்காகக் காத்திருப்பதில் சுகம் எனக்கு. நெற்றியில் நாமமிருக்கும் நாவினில் நாராயணன் இருப்பான். வயதோ எழுபதுக்கு மேலிருக்கும் நடையோ இருபது போலிருக்கும் வெற்றிலை மெல்லும் வாய், சுண்ணாம்பின் கறை விரலில் கருணையில் ஊறிய கண்கள் கையிருப்பு. கனிவான பேச்சு செலவழிப்பு. அன்றொரு நாள் விடியலில் காய்ச்சலில் தள்ளாடி வாசல் தெளிக்கக் கண்டவள் கோபித்து வாளிநீரை வாங்கி, தெளித்து, கூட்டிப் பெருக்கி மாக்கோலமிட்டாள். […]

தொடுவானம் 212. ஆலய சுற்றுலா

This entry is part 9 of 10 in the series 11 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 212. ஆலய சுற்றுலா நண்பன் என்னுடன் தங்கியிருந்த மூன்று நாட்களும் நான் விடுப்பு எடுத்துக்கொண்டேன். அவனை மீண்டும் எப்போது பார்ப்பேன் என்பது தெரியாது. அவன் சிங்கப்பூர் திரும்பிவிட்டால் அவ்வளவுதான். கடிதமும் எழுதிக்கொள்ளமாட்டோம். மீண்டும் சந்திக்க பல வருடங்கள் ஆகலாம். அவன் தங்கும் சில நாட்கள் அவனுடன் கழிக்கலாம். இந்தப் பகுதியிலுள்ள சில இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். திருப்பத்தூருக்கு மிகவும் அருகில் இருப்பது குன்றக்குடி முருகன் கோவிலும் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலும்தான். பின்பு காரைக்குடியும் […]

மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்

This entry is part 10 of 10 in the series 11 மார்ச் 2018

மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * மார்ச் மாதக்கூட்டம் .4 /3/18 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்., * மலேசியா எழுத்தாளர்கள் விமலா ரெட்டி, சந்திரா குப்பன், செல்வம் ஆகியோர் கல்ந்து கொண்டு மலேசியா தமிழர்கள் வாழ்வும் பல்வேறு இலக்கியப்பணிகளும் பற்றிப் பேசினர் * 3 நூல்கள் வெளியீடு : *. சுப்ரபாரதிமணியனின் ” […]

நீடிக்காத காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 2 of 10 in the series 11 மார்ச் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ உனது நாள் ஓடுது , உன் மனது வாடுது, நீ தேவை இல்லை என்பதால் ! வஞ்சியின் கனிவு மொழிகள் எனது நெஞ்சினில் ஊன்றிப் போனது ! காலை எழும் மங்கை கழிப்பது தன் பொழுதை ! வாழ்வு விரைவது அறியாமல் போனது . தேவை யில்லை நீ யெனத் தெரிய வில்லை அவள் விழிகளில் ! காதல் அடையாளம் எதுவும் காண வில்லை நானும் ! கண்ணீர்த் […]

தமிழ்

This entry is part 1 of 10 in the series 11 மார்ச் 2018

தமிழின் தலைமையில் தமிழ்மொழி விழா ‘என் புகழ் காக்க என்னென்ன செய்தீர்’ கேட்டது தமிழ் ‘வானவில்லை நிமிர்த்தி நட்சத்திரம் பறிப்போம் கடல் சேர்ந்த நதிகளை மலைகளுக்கு ஓட்டுவோம்’ சொன்னார் மாணவர் ‘நான் தாய்மை பாடினால் இரத்தம் பாலாகும்’ சொன்னார் கவிஞர் ‘செயலியாய் ஒரு சாவி செய்தேன் எந்த மொழியையும் அது தமிழில் திறக்கும்’ சொன்னார் கணியர் ‘நான் அன்னம் தமிழ்ப் பாலில் கலந்துவிட்ட அந்நிய நீரைப் பிரிப்பேன்’ சொன்னார் சொல்வேந்தர் ‘நான் ஆயுத எழுத்து என் மூன்று […]