இரண்டாவது புன்னகை

This entry is part 11 of 14 in the series 20 மார்ச் 2016

    புத்த பிட்சுவின் அடியொட்டி நடந்தான் சாம்ராட் அசோகன்   கால்கள் இழந்த குதிரையின் காயங்களைக் குதறிக் கொண்டிருந்தன கழுகுகள்   வீரன் ஒருவனின் குழந்தை தாயின் மடியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்   மௌரிய சாம்ராஜ்ஜியமென்ன இனி எந்த நாட்டிலும் போரென்பதே இருக்காது நிம்மதிப் பெருமூச்சே இறுதியாய் முடிந்தான் அவளின் தந்தை   மந்திரிகள் கலைஞர்கள் ஜெய கோஷத்துடன் அணி வகுத்தனர் அசோகன் பின்னே   புத்தன் இரண்டாம் முறை புன்னகைத்தான்

நீங்காப் பழி!

This entry is part 12 of 14 in the series 20 மார்ச் 2016

  முனைவர். இராம. இராமமூர்த்தி உலக மாந்தரனைவரும் புகழொடு வாழவே விரும்புவர். அப்புகழினைப் பெறல் எவ்வாறு? சிலர் ஈகையினால் புகழ்பெறுவர் கடையெழு வள்ளல்களைப் போல. சிலர் தாம்செய்யும் நற்செயல்களாற் புகழீட்டுவர். சிலர் செயற்கருஞ்செய்து புகழ்பெறுவர். அங்ஙனம் வாய்மையைப் போற்றியும் இன்னாசெய்யாமையை மேற்கொண்டும் புகழ்பெற்றவர் இந்தியத் தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள். இங்ஙனம் இசைபட வாழ்தலையே நன்மக்கள் விரும்புவர். பண்டை நாளைய மன்னர்களும் இத்தகு நல்லொழுக்க, நற்செயல்களாலேயே தம்புகழ் நிறுவினர். எனினும், மக்களைக் காக்கும் மன்னர்களுள்ளும் அடாதுசெய்து பெரும்பழி எய்திய […]

முற்பகல் செய்யின்……

This entry is part 1 of 14 in the series 20 மார்ச் 2016

  ’ரிஷி’ முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைவெளி முப்பது நொடிகள் மட்டுமே….. ஏன் மறந்துபோனாய் பெண்ணே! விபத்தா யொரு பிரிவில் பிறந்துவிட்டதற்காய் எம்மை யெத்தனையெத்தனை முட்களால்  குத்திக் கிழித்தாய். இலக்கியவெளியில் இருக்கவே யாம் லாயக்கற்றவர்கள் என்று எப்படியெப்படியெல்லாம் எத்தித்தள்ளினாய். (அத்தனை ஆங்காரமாய் நீ மிதித்துக்கொண்டேயிருந்ததில் உன் கால்கள் சேதமடைந்துவிடுமோ என்றுகூட சமயங்களில் கவலையாக இருந்தது எனக்கு.) என்னவெல்லாம் கூர்கற்களைத் தேடித் திரட்டிக் குறிபார்த்து எம் மேல் வீசியெறிந்துக் கெக்கலித்தாய். அன்னாடங்காய்ச்சிகளாயிருந்தாலும் எம்மை ஆதிக்க ஆண்டைப் பன்னாடைகளாக்கி எப்படியெல்லாம் துன்புறுத்தினாய். […]

கூடு – இலக்கியத்திற்கான இணைய இதழ்

This entry is part 13 of 14 in the series 20 மார்ச் 2016

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கியத்திற்கான மாத இணைய இதழான கூடு, சில மாதங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் புத்துணர்வோடு பதிவேற்றப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் கூடு இணைய இதழ் பதிவேற்றம் செய்யப்படும். படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm இந்த இதழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள் – விக்ரமாதித்தன் நம்பி காலத்தை வென்று நிற்கும் காவிய கானங்கள் – 1 – பி.ஜி.எஸ்.மணியன் லுக்கோமியா டோமியா – – வா.மு.கோமு இருளின் முடிவில் – தா. ஜீவலட்சுமி சாகாள்… – அகரமுதல்வன் தனிமை […]