இரா. ஜெயானந்தன் அவள் அவனின் இருட்டை சுமந்து சென்றாள் பண்ணிரண்டு வயதில் . சொல்ல முடியா வலி இதயம் முழுதும் ஊர்ந்து செல்ல நான்கு கால்கள் மிருகத்தை விட கேவலமாக பார்க்கப்பட்டாள் சமூகப்பார்வையில். இருட்டில் மறைந்த ஆணை பார்க்க மீண்டும் அவள் முயலவில்லை. ஏனோ எல்லா ஆண்களின் முகங்களிலும் காம விலாசம் பார்த்து பயந்தாள் சிறுமி. இருட்டைக்கண்டு அலறினாள் அலறினாள். மசூதிக்கு சென்றார்கள். மாரியம்மன் கோயில் பேச்சி அம்மனிடம் வேண்டினார்கள் பெண்ணை பெற்றவர்கள். சிறுமியின் கண்கள் இருட்டைக்கண்டால் […]
சோம. அழகு தமிழ் வகுப்புகள் செம்மையாக நடந்து கொண்டிருந்தன. என் வகுப்பைச் சற்று சுவாரஸ்யமாக்கும் பொருட்டு பாடதிட்டத்தைத் தாண்டி சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தொடங்கினேன். தமிழின் தொன்மையைப் பற்றி, அத்தொன்மையைப் பறைசாற்றும் விதமாகக் கிடைத்திருக்கும் கீழடி, ஆதிச்சநல்லூர் சான்றுகள் பற்றி, பழமையானதாகக் கருதப்படும் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் மற்றும் கொரியன், ஆங்கிலம் போன்ற இன்ன பிற மொழிகளிலும் காணப்படும் தமிழ்ச்சொற்கள் பற்றி, பாவாணரின் சொல்லாராய்ச்சி மற்றும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி, தமிழர் நாகரிகம் […]
வசந்ததீபன் (1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல்____________________________________________ வழிபாடுகள் இடர்பாடுகள்தொடருது துயர் பாடுகள்ஆறு கடந்து போகிறதுகாற்று கடந்து போகிறதுகாலமும் கடந்து போகிறதுவாடிய மலர்கள் இயற்கைக்கு சொந்தம்வாடாத மலர்கள் மனிதனுக்கு சொந்தம்வாடியும் வாடாமலும் பூத்தபடி மலர்கள்பாதைகள் நிறைய போகின்றனஊருக்குள் போகும் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லைபாதைகளுக்கு முன்னால் நின்றிருக்கிறேன்நெருப்பை தொட்டுப் பார்த்தான்நெருப்பாயிருந்ததுநெருப்பு நெருப்பாய் இல்லாமல் வேறு எதுவாக இருக்கும்இருக்கும்பெருங்கதையாடல்பெருந்திணைப்பாடல்பெருஞ்சூறையாய் வீசுகிறதுஇழப்பதற்கு எதுவுமில்லைபெறுவதற்கு ஏராளம் உள்ளதுஅடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிவோம்.மழை பொழியட்டும்மனங்களெங்கும்மானுடம் செழிக்கட்டும்விண்மீன்களை பார்க்கிறேன்தேவதைகள் கண்கள் சிமிட்டுகிறார்கள்சாமரம் வீசுகிறது காற்றுமவுனங்களுக்கும்வார்த்தைகளுக்கும்இடையே தீராத உரையாடல்கள். (2) இணக்கமற்ற […]
(1) வீட்டின் வாசலில்- வெளி உள் நுழைகிறதா? அல்லது வீடு வெளியேறுகிறதா? அல்லது ஒரே சமயத்தில் வெளி உள் நுழைந்தும் வீடு வெளியேறவும் செய்கிறதா? அல்லது வாசலில் வீடும் வெளியும் கைகுலுக்குகின்றனவா? அல்லது வாசலில் வெளியை சுவாசிக்கிறதா வீடு? (2) பிறகு கட்டினேனா வீட்டை முன்னமேயே வெளி வீடு வடிவில் தன்னைத் தகவமைத்து உள்ளொளித்து வைத்து பிறகு அனுமதிக்க? ஓர் ஐயம் எனக்கு (3) சன்னல்- சுவருக்கல்ல- வீட்டுக்கு. வீட்டுக்கு மட்டுமல்ல- வீட்டுக்குள் வசிக்க வெளிக்கு. வெளிக்கு […]
ரவி அல்லது சொட்டுச் சொட்டாக நிறைகிறது நம்பிக்கை பாத்திரத்தில் துருப்பிடித்திருந்தாலும். யாரோ விதைத்த வினைக்கு அறுவடைகள் செய்யும் எமக்கு வாய்க்கிறது மண் கவலமாக மகசூல்கள். வெந்து தணிந்ததில் வெறுப்புகள் கொண்டு உயராத நீர் மண்டத்திற்கு ஒரு மரக் கன்று நடலாம்தான் எம் கண்ணீரில் அது துளிர்த்தால். கருப்பின தேசத்தில் காகிதத்தைக் காட்டியே கனிம வளங்களை களவாடிச் செல்லுங்கள் கேப் டவுன்களை கிரீடமாக தருவித்து. நீங்கள் வீணாக்கும் தண்ணீர்த் துளிகளின் விலைகள் அறியாதபொழுதில் நாங்கள் விண் நோக்கிக் கையேந்துகிறோம் […]
ஆர் வத்ஸலா கவிதைப் பட்டறையில் கலந்து கொள்ள தலையை, மன்னிக்கவும், பெயர் கொடுத்து விட்டேன், பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததாலும் அதில் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் எனத் தோன்றியதாலும் அச்சத்துடன் போலி வீரப் புன்னகையுடன் மெய்நிகர் கூட்டத்தில் நுழைந்தேன் பிரபல கவிஞர்களின் கவிதைகளை வாசித்தார் பட்டறை நடத்துபவர் அவர் முகம் ஒரு கோணத்தில் சதா பிரம்புடன் நிற்கும் (அதை அவர் அதிகம் பயன்படுத்தாவிட்டாலும்) எனது இரண்டாம் வகுப்பாசிரியர் கிட்டு […]