என்ன யோசிச்சுட்டு இருக்க?

This entry is part 4 of 4 in the series 24 மார்ச் 2024

சோம. அழகு             Rocket Scienceஐ காட்டிலும் கடினமான கேள்வி இது. உண்மையில் நமது எண்ணவோட்டங்களின் சங்கிலித் தொடரை விவரிக்கவே இயலாது. அந்தக் கட்டற்ற காட்டாற்றின் வழிப் பாதைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டிருப்பினும் அந்த இடையிணைப்பிற்குச் சமயத்தில் பெரிய பொருளோ காரணமோ இருக்காது. அதுதான் பிரச்சனையே. அதுதான் அதன் அழகும் கூட! உச்சகட்டமாக ஒன்றுமே யோசிக்காமல் வெறுமனே எதையோ பார்த்துக் கொண்டே கூட இருந்திருப்பேன் சில சமயம். இது புரியாமல் இக்கேள்வியை அடிக்கடி கேட்பதில் என்னதான் […]

முக்காடு போட்ட நிலா

This entry is part 3 of 4 in the series 24 மார்ச் 2024

                                                                        மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                வானவீதியில் முழுநிலா வெள்ளை நிறமெனச் சொல்ல முடியாது பழுப்பு நிறத்தில்  வெண்ணையைத் தட்டி மெழுகியது போல் நகர்ந்து கொண்டிருந்தது. . அழகு நங்கை ஒருத்தி தன் சேலைத் தலைப்பால்  முகத்தை மூடிக்கொண்டது போல் அன்னத்தின் மெல்லிய தூவி மேகம் ஒன்று அதை மறைத்தது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமில்லை, பெரிய கடை வீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேனீர்க்  கடைகள் திறந்திருந்தன. காய்கறி, பழங்கள் ஏற்றி வந்தவர்களும், மயக்கம் தெளிந்து எழுந்த குடிமகன்களும், […]

ஜானி

This entry is part 2 of 4 in the series 24 மார்ச் 2024

‘மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் வேலையாம். திருமணத்துக்குப்பின் மீராவும் அமெரிக்கா போய்விடுவாளாம்.’ என்று மற்றவர்கள் பேசும்போதும் சரி, தன் நெருங்கிய தோழிகள் ‘நீ கொடுத்துவச்சவடீ’ என்று சொல்லும்போதும் சரி, முன்னைவிட, தன் முகம் மிக அழகாக இருப்பதுபோல் உணர்ந்தாள் மீரா. ‘முகம் மட்டுமா இனி முகவரியும் அழகாக இருக்கலாம். மாப்பிள்ளை குரு என்கிற குருராஜ், கணினி மென்பொருள் பொறியாளர். இரண்டு ஆண்டுகளாக அவன் இருப்பது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில். தனி வீடு. தனியாகவே இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவன். இப்போது மீராவோடு […]

இலக்கிய முத்துகள்

This entry is part 1 of 4 in the series 24 மார்ச் 2024

                                    பாச்சுடர் வளவ. துரையன் [திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி” இலக்கிய நோக்கில் எளிய உரை”-நூலாசிரியர் முனைவர் ஏ.வி. ரங்காச்சரியார்—வெளியீடு:அருள்மாரி அருளிச்செயல்  ஆய்வகம், ஸ்ரீ வேங்கடார்ய குருகுலம், 151, மேல வீதி, சிதம்பரம், ஸ்ரீமந் நாதமுனிகள் 1200 அவதார ஆண்டு திருநக்ஷத்திர வைபவ வெளியீடு—பக்-409—விலை குறிப்பிடப்படவில்லை]  இந்நூலின் தோரண வாயிலில் திருமங்கையாழ்வார் பாடியுள்ள பல்வகை இலக்கணத்துறைகளை முனைவர் ஏ.வி. ரங்காச்சாரியார் அவர்கள் விரிவாக எடுத்து வியந்தோதி இருக்கிறார். மாலை, பிள்ளைத் தமிழ், ஊடல், சாழல். அந்தாதி, […]