நன்றி. வணக்கம்.

This entry is part 5 of 45 in the series 4 மார்ச் 2012

மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகள் களை கட்டத் தொடங்கின. இந்தத் தடவை பேச்சுப்போட்டிக்குரிய விடயதானத்தை மாணவர்களும் பெற்றோரும் தெரிவு செய்யலாம் என்று நிர்வாகத்தினர் சொல்லியிருந்தார்கள். இந்த மாற்றம் மோகனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒவ்வொரு தடவையும் பாரதியார், திருவள்ளுவர், நாவலர் என்று நிர்வாகம் எழுதிக் கொடுத்ததை – மாணவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எழுதி ஒப்புவிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டாவது அல்லது மூன்றாவதாக வரும் மகனை இந்தத்தடவை முதல் ஸ்தானத்திற்கு உயர்த்தி விடலாம். புரட்சிகரமான வசனங்களாக எழுதி புழுதி கிழப்பிவிட வேண்டும். […]

நன்றி கூறுவேன்…

This entry is part 4 of 45 in the series 4 மார்ச் 2012

வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன் எதுவும் இல்லாமல் போனது… இன்னொன்றை மண்ணுள் புதைத்துப் பார்த்தேன் மரமாக வந்து கதை பேசியது… இலைகளையும் பூக்களையும் உனக்குள் எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்.. மண்ணைப் போட்டு மூடினாலும் உன்னை மீறி வரும் சக்தி எங்கே என்றேன்… மறுபடியும் வித்தொன்றை சிதைத்தொருக்கால் பார்த்தேன்… மாய வரம் ஏதேனும் அங்குள்ளதுவா தேடினேன் – “வித்திலைகள்” மட்டும் தான் எனைப் பார்த்து முறைத்தன…., மற்றதெல்லாம் எனை விட்டு என் கண்ணை மறைத்தன… பூவின் நிறமேதும் அங்கு இல்லை.., […]

மகளிர் தினமும் காமட்டிபுரமும்

This entry is part 3 of 45 in the series 4 மார்ச் 2012

இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் தொழில் செய்ய ஆரம்பிக்கிறார்கள், அவர்களில் 3 பேர் நிர்பந்தம் காரணமாக இத்தொழில் செய்ய வந்தவர்கள் .அதிலும் 35.47% பெண்கள் 18 வயது கூட நிரம்பாதவர்கள் என்பதை இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக அமைச்சர் ரேணுகா சவுத்ரி ஒத்துக்கொள்கிறார். அடிமைத்தனத்தையும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதிப்பதையும் எதிர்த்து சட்டங்கள் பல எழுத்தில் இருக்கின்றன. இப்பெண்களின் புனர் வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், சட்டங்கள், ஆய்வுகள், […]

காற்றின் கவிதை

This entry is part 2 of 45 in the series 4 மார்ச் 2012

எழுதாமல் பல பக்கங்கள் காலியாகவே இருக்கின்றன. எழுதுவதற்காக இருந்தவன் எழுதாமல் போனதால் பலன் பெற்றனவோ அந்தப் பக்கங்கள். எழுதுபவன் எழுதாததால் வெள்ளை உள்ளத்துடன் வெற்றிடம் காட்டி விரைந்து அழைக்கிறதோ அந்தக் காகிதப் பக்கங்கள். காகிதத்தின் மொழி அறியாமல் காகிதத்தில் எழுத முயல்கையில் எங்கோ இருந்து வந்தக் காற்று காகிதத்தை அடித்துப் போயிற்று. காற்று அந்தக் காகிதத்தில் தன் கவிதையைக் கொட்டி கொட்டி உரக்கப் பாடியது. நிச்சயமாக அந்தக் காகிதம் காற்றின் கவிதையில் காலம் முழுவதும் நிறைந்திருக்கும். குமரி […]

“தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”

This entry is part 1 of 45 in the series 4 மார்ச் 2012

பீஹார் எங்கிருக்கிறது என்று ஆரம்பித்து ஆரம்ப வகுப்பு எடுக்கவில்லை. எங்கு இருக்கிறதோ அவ்விடத்து வாழ்க்கை முறை, கலாச்சாரம், தமிழகம் எங்கிருக்கிறதோ அவ்விடத்து வாழ்க்கை முறை, கலாச்சாரத்தோடு அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. ஆனால் பீஹாரிகள் தோல் நிறமும் தமிழர்களில் நிறமும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதைக் காணலாம். இதை அனுபவத்தில் காண்பது சிறப்பு: பட்னாவில் நடந்து போகும் தமிழன் ஒருவனை அங்கிருப்பவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இதே வண்ணம் இங்கு ஒரு பீஹாரி நடந்து சொல்லின் தமிழர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இருப்பினும் பிரச்சினை […]