முன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்

This entry is part 48 of 48 in the series 15 மே 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் எட்வர்ட் திரிஃபீல்ட் இரவில் தான் எழுதுவார். ரோசிக்கு ஆகவே ராத்திரியில் சோலி கீலி எதுவுங் கிடையாது. ராத்திரியானால் அவள் யாராவது சிநேகிதர்களுடன் ஹாயாக வெளியே கிளம்ப சௌகர்யமாய் இருந்தது. வசதியாய் வாழ அவளுக்கு இஷ்டம். குவன்டின் ஃபோர்டின் கையில் துட்டுச் சக்கரம் தாராளமாய்ப் புழங்கியது. அவன் வாடகைக்காரை வரவழைத்து, இராத்திரி விருந்துக்கு என்று கேட்னருக்கோ சவாய்க்கோ அவளை அழைத்துப் போவான். அவளும் இருந்ததில் படாடோபமான உடையை அணிந்து அவனுடன் கிளம்பினாள். அந்த ஹாரி […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)

This entry is part 46 of 48 in the series 15 மே 2011

“கடைவீதிப் பக்கம் நான் செல்லும் போது திருவாளர் பிதற்றுவாய் ஒவ்வொரு கடை வாசலிலும் நின்று போவோர் வருவோரைப் பற்றி வக்கணை அடிப்பார். பிதற்றுவாயன் அவரைப் பின்பற்றிச் செல்வதையும் நான் அவரது மௌன முகத்திலே கண்டிருக்கிறேன். பொது மக்களுக்கு ஆட்டிப் படைக்கும் அவன் இருக்கை தெரிவதில்லை.”   கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++++++ காரணம் (Reasoning) +++++++++++++++ உன்னை நீயே கண்காணித்துக் கொள்வாய் ஓர் எதிரியாய் உன்னைப் பாவித்து ! பிறரை நீ ஆள முடியாது ! […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)

This entry is part 46 of 48 in the series 15 மே 2011

    கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)    

விழி மூடித் திறக்கையில்

This entry is part 33 of 48 in the series 15 மே 2011

  விழி மூடித் திறக்கையில்  வெகு தூரம் சென்று வந்த வித்தியாச உணர்வெனக்கு… தூரத்தில் நடந்தவை துல்லியமாய் நினைவிருக்க நேற்றென்னை நலம் கேட்ட நபர் யாரும் நினைவில்லை… புது வித அன்னியம் அகப்பட்டு அழக் கூட தோன்றாமல் வெகு தூர வெளிகளையே வெறித்திருக்கிறது கரு விழிகள்! நிகழாத நிகழ்காலம் இறந்தது போல் இருப்பதனால் இறந்தகாலம் என்றதற்கு அர்த்தப்பெயர் வைத்துவிட்டேன்! கனவெல்லாம் கருகியதா அல்லது கனவென்னை கருக்கியதா? இதை சொல்லும் தெளிவின்று துளி கூட எனிலில்லை! விழி மூடித் […]

கூடடையும் பறவை

This entry is part 30 of 48 in the series 15 மே 2011

  ஒவ்வொரு அந்தியிலும்  பறந்து களைத்த பறவை கூடடைவதைப் போல தனிமை வந்தமர்கிறது என் கிளைகளில் மொழிகள் மறுதலித்த அடர் மௌன வனத்தின் ஒற்றை மரமாய் கிளைகள் பரப்பி நான். சில்வண்டுகளின் ரீங்காரமோ காற்றின் சிலும்பலோ இலைகளின் நடனமோ ஏதுமற்ற பேரமைதியில் வனம். -வருணன்

“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்

This entry is part 14 of 48 in the series 15 மே 2011

 “யூ ஆர் அப்பாயிண்டட் “என்கிற புத்தகம் சமீபத்தில் வாசித்தேன். இதனை எழுதிய திரு. பாண்டியராஜன் மாபா என்கிற மனித வள நிறுவனத்தின் தலைவர். தனது 25 ஆண்டு அனுபவத்தையும் வைத்து இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகம் என்பது குறித்த இந்த புத்தகம், பயன் தரக்கூடிய பல தகவல்களை கொண்டுள்ளது. மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகம் ப்ளஸ் டூ முடித்து அடுத்து என்னை படிப்பில் சேரலாம் என்று யோசிக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் […]

என்ன வாசிப்பது

This entry is part 13 of 48 in the series 15 மே 2011

  கண்களின் வழியோ  கண்ணாடி வழியோ பிரதிபலிக்கிறது நீ வாசிப்பது…. எழுத்துக்களோ., கோப்புக்களோ., அங்கங்களோ., ஆராய்ச்சியோ.. காக்கைக்கால் கோடுகள் உற்சாகம் கிளப்பும் ஒன்றையும்., நெற்றிச் சுருக்கங்கள் பொருளாதார வரைபடங்களையும் கன்னக் குழிவுகள் ஒரு கிளர்த்தும் காமத்தையும் இதழின் இறுக்கங்கள் உள்பூக்கும் பிடிவாதத்தையும்… என்னவென்று அறியாத இன்பமாய் இருக்கிறது. எதிர்வினைகள் ஏதும் அற்று எதிரே அமர்ந்து என்ன வாசிக்கிறாய் என்பதறியாமல் உன்னை வாசிப்பது..

யாளி

This entry is part 12 of 48 in the series 15 மே 2011

 தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றும் போதுதோன்றும் வட்டம் மெதுவாகச் சுழற்றும் போது காணாமல் போகும் முதல் சுவாசம் இழுக்கும் சிசு தாயின் அரவணைப்பில் சுகம் காணும் நகராமல் அமர்ந்திருந்தாலும் பூமியின் பயணத்தில் நாமும் ஒரு பிரயாணியே நாள்தோறும் சந்திரனின் தோற்றம் வளர்வதையும், குறைவதையும் கண்டு வியக்கும் குழந்தைகள் சிறிய அலைகள் முத்தமிட்டுச் செல்லும் பெரிய அலைகள் மணல் வீட்டை இடித்து சுவடில்லாமல் செய்துவிட்டுத் திரும்பும் இரவு, பகல்களாய் ஆனது வாழ்க்கை கனவுகள் மட்டும் இளைப்பாறுதல் தரவில்லை என்றால் கைதிகளாகிப்போவோம் புவியெனும் […]

ஒரு பூவும் சில பூக்களும்

This entry is part 11 of 48 in the series 15 மே 2011

  நிழல்  மதி தொலையும் அதிகாலையில் இரவி தொலையும் அந்திமாலையில் நிழல் தொலைத்திருக்கும்… இவ்வுலகம்!   ஒரு பூவும் சில பூக்களும் காதலின் காதோரத்தில் கவிதை பாடிக்கொண்டிருந்தது ஒற்றை ரோஜா! கட்டிலின் கால்களில் மிதிபட்டு கிடந்ததோ மல்லிகை பூக்கள்!! – இலெ.அ. விஜயபாரதி

இனிவரும் வசந்தத்தின் பெயர்

This entry is part 10 of 48 in the series 15 மே 2011

  வெளிறிய கோடை இலைகளே..  வறண்டு போன நடை பாதைகளே.. நீருடை பூணும் கானல்களே.. ரத்தமற்று சுருங்கிப் போன நதி தமநிகளே.. கருகி விழுந்த பூவிதழ்களே.. எனதிந்த வெற்றுக் காகிதங்களிடம் இனிவரும் வசந்தத்தின் பெயரை மட்டும் சொல்லுங்கள்.. * ***