ரசிப்பு எஸ். பழனிச்சாமி கொஞ்ச நாள் கழித்து ஒருநாள், பட்டாபி ரகுபதியின் ரூமிற்குள் வேகமாக நுழைந்து, “சார், இந்த வாசுவின் கிண்டல் ரொம்பத்தான் அதிகமாகி விட்டது” என்றான். “என்ன நடந்தது” என்று திகிலுடன் கேட்டார். வாசு வேறு ஏதாவது புதுப் பிரச்சினையை ஆரம்பித்து விட்டானோ என்று மனதில் நினைத்துக் கொண்டே. “அந்த மெஷின் இருக்கில்லையா சார்” என்று ஆரம்பித்தான் பட்டாபி. “எந்த மெஷின்” என்று கேட்டார் ரகுபதி புரியாமல். “அதான் சார், நீங்கள் தப்பான அளவு கொடுத்து…” […]
ஆர்லாண்டோ க்ரோக்ரோஃப்ட் (ஐபி டைம்ஸ்) சவுதிகள் ஷியா மதகுருவை விடுவித்தாலும், பதட்டம் தொடர்கிறது. பிரபலமான ஷியா மதகுருவை கைது செய்ததால், சவுதி அரேபியாவில் உருவான எதிர்ப்பு போராட்டங்களும், வெள்ளிக்கிழமையில் “ஆத்திரநாள்” என்று போராட்டம் துவக்கப்பட்டதும், சவுதி அரேபிய அரசாங்கம், அவரை மார்ச் 2011 இல் விடுதலை செய்தது. ஷேக் டாஃபிக் அல் அமெர் என்ற இந்த மதகுரு பெயரளவுக்கான மன்னராட்சியாக இன்றைய எதேச்சதிகார மன்னராட்சி மாறவேண்டும் என்றும், மக்களிடம் அதிகாரத்தை ஒப்புவிக்க வேண்டும் என்றும் கோரியதற்காக சென்ற […]
பூமிக்கு வந்த கடவுள் கணப்பொழுதேனும் தங்கி இளைப்பாற கடுகளவு இடம் தேடினான் மனித மனங்களில். வயோதிகன் கண்டான். பகை பழி குற்றம் கவலை முதியவன் மனதை அப்போதும் நிறைத்திருந்தன முள்மரங்கள். உட்புக முடியாது திகைத்தான் கடவுள். வாலிபன் தெரிந்தான். காமம் புதிர் குழப்பம் கலகம் அதீத உணர்ச்சிகள்… உலகைப் புரட்டும் லட்சியங்கள்… சதா ஆட்டுவிக்கும் அவன் மனதை. அங்கும் நுழைய முடியவில்லை கடவுளால். உலகை வெல்லும் வித்தை யாவும் தேர்ந்து […]
[ஆர்க்டிக் கிரீன்லாந்து வட்டாரப் பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] ++++++++++++++++++++ சூட்டு யுகம் பூதமாய்ப் புவிக்கு வேட்டு வைத்து மீளுது ! நாட்டு ஊர்கள், வீட்டு மக்கள் நாச மாக்கிப் போகுது ! புயலை எழுப்ப மூளுது ! பேய் மழை பெய்து அழிக்குது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை இயற்கை சிதைக்க விரையுது ! கடல் வெப்பம், நீர் மட்டம் […]
முன்னுரை மணல் வெளியில் மான்கள் வசிப்பதில்லை. ஆனால் குரூர சக்திகள் துரத்தி வரும்போது அவை மணல் வெளிகளைக் கடக்க முயலும். சில சமயம் வெல்லும்; சில சமயம் மடியும். மனிதகுலமேதான் இன்றைய மணல்வெளி மான்கள். துரத்துவது வன்முறை. தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு மனிதர்களைத் தவிர வேறு எவருமில்லை. எதிர்த்துத்தாக்கு! தீயைத் தீயால் அணை! முள்ளை முள்ளால் எடு! இதுதான் காட்டுமிராண்டி வாழ்வின் ஆதி அம்சம். மனிதனின் அந்த விலங்குத் தன்மையை மாற்றி மாற்றி எழுந்த மகான்களின் குரல்கள் மறு […]
வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள் புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பனம். 9.5.2015 எழுத்தாளனை அதிகம் நேசித்தவன் நீ வே.ம.அருச்சுணன் – மலேசியா பாலா, எங்களையெல்லாம் விட்டு திடீரென பிரிந்துவிட்டீரே…..! இதுவென்ன கொடுமை…..? நாங்கள் என்ன குறை செய்தோம்……? பிறந்த நாள் நிகழ்வை குடும்பத்தோடு இரண்டு நாட்களுக்கு முன்புதானே கொண்டாடினீர்………? நேற்று இருந்தோர் இன்றில்லை என்ற கதையாகிப்போனதே……….! கிள்ளான் வாசகர் எழுத்தாளர் இயக்கம் இந்நாட்டு இலக்கியவாதிகளின் அரவணைப்பு இல்லம் அவ்வில்லத்தின் வரவேற்பு […]
(தேவதச்சன்) ஆனந்த் [ 1951 ] மனநல ஆலோசகர் ; மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர். கவிதை , சிறுகதை , குறுநாவல் , கட்டுரை ஆகிய வடிவங்களைக் கையாண்டுள்ளார். மற்றும் நாவல் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இனி ஆனந்த் கவிதைகள் சிலவற்றைப் பார்ப்போம். ” நாளை வருமென ” …. நாளை வருமெனச் சொல்கிறார் வெறும் இன்றுகள்தான் வருகின்றன. இடையறாது எங்கிருந்து வருகுதிந்த இன்றுகள் காணாது கண்டு கண்டதாகிறது நாளை நேற்றெனச் சொல்கிறார் இன்றிலென்றும் இல்லை […]
சங்கர் கணேஷ் கருப்பையா என்னடா மோகன், தக்காளிய உள்ளூர் கடைகள்லயே விக்கிறயா? ஆமா சித்தப்பா. எவ்வளவுக்குப் போடுற. கிலோ எட்ரூவா சித்தப்பா. ஏன்டா சிவகாசி மார்க்கெட்ல பன்னன்ட்ருவா போகுது. அங்க கொண்டு போக வேண்டியதுதான. நீயென்ன சித்தப்பா கத்தரிக்கா கொண்டு போற பிரச்சினையில்ல ரோடு இருக்க இருப்புல தக்காளிய சிவகாசி கொண்டு போறதுக்குள்ள நெறையா அடிபட்டுப்புப் போகுது. கூட்டிக் கழிச்சப் பார்த்தா எல்லாக் கணக்கும் சரியாத்தான் வருது. அலைச்சலாவது மிச்சமாகும்னு பேசாம உள்ளூர்லயே போட்டாச்சு. […]
சேயோன் யாழ்வேந்தன் பழத்தில் ஊதுபத்தி மணத்துப் புகைகிறது வாழையிலையில் கோழிக்குழம்பு மணத்துக் கிடக்கிறது பந்தலில் முறுக்கும் பிஸ்கட்டும் முறுக்கிக்கொண்டு ஆடுகின்றன இவற்றில் ஒன்று கிடைத்திருந்தாலும் செத்திருக்கமாட்டான். ——————————— seyonyazhvaendhan@gmail.com
கோவையில் த.மு.எ.சங்க இலக்கியச் சந்திப்பு 158 ம் கூட்டத்தில்.: 3/5/15 தலைமையுரை : நாவலாசிரியர் சி.ஆர். இரவீந்திரன் வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் […]