கொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை

This entry is part [part not set] of 8 in the series 17 மே 2020

 :  ” பழைய வாஸ்துதா இது. ஆனால் பாலோ பண்ணறது  நல்லது ” குவிந்து கிடந்த செய்தித் தாள்களை பார்த்து நண்பர் சொன்னார்:  “ இதிலே இருக்கற கொலை, கொள்ளை , கற்பழிப்பு , மோசமானச் செய்திகள் வீட்லே  தங்கறது நல்லா இல்லே.இதுகளெத் தூக்கிப் போட்டிருங்க. இதிலெ இருக்கற நெகட்டிவ் விசயங்கள் நெகட்டிவ் வைப்பரேசன் தரும். நமக்குச் சிரமமாகும். இதுவும் கழிவுதான்.   மனக்குப்பையாகும் ” தினசரிகளை, செய்தித்தாள்களை குப்பையாகப் பார்க்க மனசு சற்றே யோசிக்கும். தினசரி […]

மாமனிதன்

This entry is part 7 of 8 in the series 17 மே 2020

  ப.ஜீவகாருண்யன்                                       வற்றாத ஜீவநதி கங்கையின் தென் கரையில் பத்து மைல் நீளம், ஒன்றே முக்கால் மைல் அகலம் கொண்டதாக சுற்றிலும் அறுநூறு அடிகள் அகலம், நான்கரை அடி ஆழ அகழியுடன், நூற்று ஐம்பத்து நான்கு கோபுரங்கள், அறுபத்து நான்கு வாசல்களுடன் கோட்டைக் கொத்தளங்கள் மற்றும் வீடுகள் தோறும் பாடலி மரங்களுடன் பார்க்கும் கண்களுக்குப் பரவசமூட்டுவதாக மிகப் பிரம்மாண்டமாக இருந்தது பாடலிபுத்திரம். பாடலிபுத்திரத்தின் பழைய நகரில் கிழக்குப் புறத்தில் புத்த பிட்சுக்கள் வசிக்க அமைந்திருந்த ‘குக்கிராமா’ என்னும் சேவல் […]

மதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்?

This entry is part 6 of 8 in the series 17 மே 2020

      கொரோனா கிருமியால் விளைந்துள்ள நோய்த்தொல்லையின் விளைவாய்க் கடந்த சில நாள்களாக மதுக்கடைகள் மூடப்பட்டுவந்துள்ளன. இதையே வாய்ப்பான ஒரு தருணமாய்ப் பயன்படுத்தி நாடு முழுவதிலும் மதுவிலக்கை அமலுக்கு எல்லா மாநில அரசுகளும் கொண்டுவரும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருந்த பெண்களின் தலைகளில் இப்போது இடிவிழுந்துள்ளது. இந்த அளவுக்கு நம்பிக்கை கொள்ள முடியாதுதானென்றாலும், அப்படிச் செய்தால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணம் பெண்களின் மனங்களில் ஓடிக்கொண்டிருந்த தென்னவோ உண்மை.       கோரோனாவை எதிர்கொள்ள நேர்ந்த எதிர்பாராத நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் […]

இன்னும் வெறுமையாகத்தான்…

This entry is part 5 of 8 in the series 17 மே 2020

  நான் சொல்லி நீ கேட்க வேண்டிய வயது உனக்கும் எனக்கும் உன் இடதுபுறம் போய்க் கொண்டிருக்கும் அந்த நிர்வாணிகளின் பக்கம் திரும்பாதே உன் வலதுபுறம் சர்வ அலங்காரங்களோடு போய்க் கொண்டிருக்கும் உன் சகாக்களைப் பார் வெறுக்கையை வெகுநேரம் மூடிக்கொண்டிருப்பதால் உள்ளே ஒன்றும் முளைத்துவிடாது உன் முதல் வேலை முயற்சியென அறிந்துகொள் நிர்வாணம் குழந்தைமையோடுதான் பொருந்தும் உன்னோடல்ல உன் பாதப் பதிவுக்கென உரிய இடம் இன்னும் வெறுமையாகத்தான் இருக்கிறது             ————–

வாங்க ஸார்… டீ சாப்பிடலாம்

This entry is part 4 of 8 in the series 17 மே 2020

கோ. மன்றவாணன்       உடல் தூய்மை, உள்ளத் தூய்மை பற்றிக் காலம் காலமாகவே பலரும் சொல்லி வந்துள்ளார்கள். சொல்லியும் வருகிறார்கள். இனியும் சொல்வார்கள். இதிலிருந்து பெரும்பாலோர் தூய்மையைக் கடைப்பிடிப்பது இல்லை என்று தெரிகிறது.       தூய்மையைப் பேணுவது என்பது கடினமான ஒன்றா என்றால்… இல்லை என்பதுதான் உரிய பதில்.       தோழர்களுடன் சென்று தேநீர் அருந்துவது சமூக கவுரவங்களில் ஒன்றாகிப் போனது. அந்தக் கடைகளில் தூய்மை என்பது “சுத்தமாக” இருப்பதில்லை. ஓர் அகலப் பாத்திரத்தில் இருக்கும் கொஞ்சம் […]

கொரோனாவும் ஊடகப் பார்வையும்

This entry is part 3 of 8 in the series 17 மே 2020

ஊரிலிருந்து என் சகோதரி தொலைபேசியில் பேசினார். கொரோனாவைப் பற்றி யாரிடமும் பேசக் கூடாது என நினைத்தாலும் அதை தவிர்க்க இயலவில்லை. ஆனாலும் கொரோனா செய்யும் நன்மைகளையும் நாம் பகிர்ந்துதானே ஆக வேண்டும். அவள் இருப்பது இந்தியாவின் தென்முனையில் இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு கிராமத்தில். ஊரடங்கு நாட்களில் ஊர் அமைதியாகவே இருக்கிறதாம். ஊரடங்கு விதிகளை அங்கிருக்கும் மக்கள் நன்றாகவே கடை பிடிக்கிறார்களாம். ஊரடங்குக்கு பின் அந்தத் தெருவில் மிகச் சிறிய வீட்டில் வசிக்கிற கூலி வேலை செய்து […]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை

This entry is part 2 of 8 in the series 17 மே 2020

க்ருஷ்ணார்ப்பணம் கண்டவர் விண்டிலர் தேடித்தேடி இளைக்கச்செய்து அவளை ஹரி மோசம் செய்துவிட்டதாக கரும்புள்ளி செம்புள்ளி குத்த காலந்தோறும் பரபரத்துக்கொண்டிருப்போருக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யொரு பேதை; காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்; கண்ணீர்பெருக அவனை நினைத்துப் பாடல்கள் எழுதியெழுதி இளைத்தவள்; இன்(ல்)வாழ்க்கையைத் தொலைத்தவள்….. நாச்சியார் திருமொழி பாய்ச்சும் அன்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதாய் இறுதித்தீர்ப்பு எழுதி கழுமேடைக்கு ஹரியெனும் காற்றை கரகரவென்று இழுத்துச்செல்லப் பார்ப்பவர்களின் விசாரணை வளையத்திற்கு அப்பாலானது காற்றைக் காதலனாக அடைந்தே தீருவது என்ற அவளின் அசாதாரண ஊற்றனைய போதமும் […]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 1 of 8 in the series 17 மே 2020

                                                       ஓலக் கடல்நெருப்பில் உலகேழும் உருகும்                   காலக் கடையினும் கொடிய கட்கடைகளே.             [81 [ஓலம்=ஒலி முழக்கம்; நெருப்பு=ஊழித் தீ; காலக்கடை=இறுதிநாளில்; கட்கடி=கடைக்கண்; ஏழு உலகங்கள்=பூலோகம், புவலோகம், சுவலோகம், மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்]     அலைகள் பெரு முழக்கமிடும் கடலில் தோன்றிய ஊழித்தீயை விடக் கொடியனவாம் அத் தேவமாதர்களின் கடைக்கண் பார்வை; ====================================================================================                    புங்கப் படைவிழிக் கடையிலன்று இவர்புரூஉப்                   பங்கத்து அகிலமும் படுகொலைப் படுவதே. [புங்கம்=அம்பு; விழிக்கடை=கடைக்கண் பார்வை; புரூஉ=புருவம்; பங்கம்=துன்பம்; அகிலம்=ஆடவர் […]