ஆர் கோபால் பர்மிய அரசுக்கும் ரோஹிஞ்யா முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையேயான போர் 1947இலிருந்து நடந்துவருகிறது. ரோஹிஞ்யா மக்களில் சிலர் ரோஹிஞ்யா மக்கள் அந்த பிராந்தியத்தின் புராதன குடிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் பல வரலாற்றாய்வாளர்கள் பிரிட்டிஷ் அரசு பர்மாவை ஆண்டுகொண்டிருந்தபோது, வங்காளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட முஸ்லீம்கள் என்றும், பின்னால் பங்களாதேஷ் சுதந்திரமடைந்தபோதும் வந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள். முதல் பர்மிய-பிரிட்டிஷ் போர் 1826இல் நடந்தது. அந்த போரில் பிரிட்டிஷ் அரக்கான் மாநிலத்தை கைப்பற்றியது. 1869இல் சுமார் 5 சதவீதமே முஸ்லீம்கள் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மாலை ஆகிவிட்டது. மைதிலி சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். ஏமாற்றம் அவளை சூறாவளியாய் சூழ்ந்து கொண்டுவிட்டது. மைதிலி படியேறி வரும்போதே ராஜம்மா எதிரே வந்தாள். “இத்தனை நேரம் எங்கே போயிருந்தீங்க அம்மா? அய்யா உங்களுக்காக ரொம்ப நேரம் காத்திருந்தார்” என்று செய்தியைச் சொன்னாள். மைதிலி ஒரு நிமிடம் நின்று அதைக் கேட்டுக் கொண்டாள். அந்த நிமிடம் அவளுக்கு இந்த உலகத்தில் எதுவும் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. எதைப் […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி ரகுபதி வெலவெலத்துப் போய்விட்டார். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டோம். இப்போது வாயை ஊதச் சொல்லப் போகிறார்கள். அவசரமாக PASS PASS பாக்கெட்டை அவர் கையில் திணித்தான் பட்டாபி. “சார் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள்” என்றான் ரகசியமாக. ரகுபதியும் அதுபோல் செய்தார். ஆனால் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் விதமாக அந்த சார்ஜெண்ட் ஒரு ப்ரீத் அனலைசரை (Breath Analyser) கொண்டு வந்தார். நிச்சயமாக மாட்டிக் கொண்டு விட்டோம் என்று ரகுபதிக்கு புரிந்தது. […]
டாக்டர் ஜி. ஜான்சன் விடுதி திரும்பிய நான் புதுத் தெம்புடன் பாடங்களில் கவனம் செலுத்தினேன். முதல் ஆண்டு முழுதும் நான் இரசித்தது ஆங்கில வகுப்புதான். ஆனால் அங்குதான் அனைவருமே நன்றாகத் தூங்குவார்கள். நான் பெரும்பாலும் அங்கு தூங்குவதில்லை. எனக்கு அந்த நாவல் பிடித்திருந்தது. மனைவி சூசனையும் மகள் எலிசபெத் ஜேனையும் குடி போதையில் , முன்பின் தெரியாத மாலுமியிடம் விற்றுவிட்ட ஹென்சார்ட் அவர்களைத் தேடுவதில் தோல்வி அடைந்தவனாக கேஸ்ட்டர்பிரிட்ஜ் நகருக்குச் செல்கிறான். அதன் பின்பு கதை பதினெட்டு […]
சிறகு இரவிச்சந்திரன் சின்ன வயதில் படிப்பு எல்லாம் கிராமத்தில் தான். பச்சை பசேலென்று வயல்களும், இடையில் ஓடும் வாய்க்கால்களும் தான் அவரது மனதில் கலையான நினைவுகளாக இருந்தன. அவர் பெயர் சங்கமேஸ்வரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். வேலைக் காரணமாக இந்தியாவின் பல மூலைகளுக்கு அவரது காலடிகள் பட்டிருக்கின்றன. அங்கிருந்தெல்லாம் அவர் ஆசையாக கொண்டு வருவது தன் மனைவி கோமளவல்லிக்கான பரிசுப் பொருட்கள் இல்லை. எப்போதும் விதவிதமான வண்ண மலர்களை கொண்ட தொட்டிச் செடிகளை வாங்கி வருவார். […]
சிறகு இரவிச்சந்திரன். இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான சமாச்சாரம் ஒன்று, காலக்கண்ணாடியின் முன் நின்றோ அல்லது, கொஞ்சம் நாகரீக உலகைச் சேர்ந்தவராக இருந்தால் டைம் மெஷினின் உள்ளே சென்றோ, ஒரு ஐம்பது அல்லது அறுபது வருடங் கள் பின்னோக்கி செல்லவேண்டும். உடனே ஏதோ இது மாயாஜாலக் கதையென்றோ, அல்லது நவீனச் சிறுகதை என்றோ கற்பனை பண்ணி விடாதீர்கள். இது சராசரி சமுகக் கதை. ஆனால் இதில் உள்ள பாத்திரங்களை, நீங்கள் […]
சாயாசுந்தரம் 1.எதுவோ ஒன்று…. —————————— போதும் எல்லாம் கடந்துவிட வேண்டும் எப்படியாவது மெல்ல ஆவி கசியும் தேநீர் கோப்பையின் வெம்மை ஊடுருவும் சூனியத்துக்குள் புதையும் முன் எடுத்து உறிஞ்ச ஆரம்பிக்கலாம் நான் அதையோ அது என்னையோ….. —————————————————————————————————————————————————- 2. இந்த நொடிகளில்…. நழுவிப்போன நேற்றையப் பொழுதுகளின் மரணம் குறித்த கவலையோ….. எதிர்வரும் நாளைய ஜனனம் குறித்த எதிர்பார்ப்போ…. அர்த்தமற்றதாகிப் போகிறது கரையும் நொடிகளைக் காப்பாற்றுவது எப்படி என்ற கவலையில்… ————————————————————————————————————- 3.அப்பா என் வண்ணத்துப் பூச்சி… ———————————————— […]
கயல்விழி நீள அகல நிற அளவீடுகள் நூல்பிடிக்கின்றன என் ஒழுக்கத்தை! எழுந்து நின்று வெளிப்படுத்தும், வார்த்தைகள் பேசா உணர்வுகள் சிலதை! உயிரற்று உணவில் விழும் ஒரு சுருளில் தீர்மானிக்கப் படுகிறது நம் உறவின் வலிமை! மதிக்காத மயிரிழைகளில்தான் நடக்கின்றன நிர்ணயங்கள் பல!
– சேயோன் யாழ்வேந்தன் இலக்கியமும் கவிதையும் இன்னும் பலவும் காலம் கடந்து நாம் பேசிக்கொண்டிருந்ததில் கணவன் சந்தேகிப்பான் என்பதையோ மனைவி சபித்துக்கொண்டே சமைத்துக்கொண்டிருப்பாள் என்பதையோ மறந்தேபோனோம் வீடு திரும்ப மனமில்லாதது போல் ரயில் வாராத நடைமேடையில் அமர்ந்திருந்தோம் இன்னும் பேசவேண்டியது மிச்சமுள்ளது போல். சட்டென எழுந்து நின்றோம் விடைபெறும் வேளையில் மனதில் வினா எழுந்தது மறுபடி எப்போது சந்திப்போம் என்று. எதுவும் பேசாமல் எதிரெதிர் திசை பிரிந்தோம். என்ன செய்ய, அன்பில்லாதவர்களுக்கு எளிதாக இருக்கும் விஷயங்கள் அன்பு […]
==ருத்ரா மழை நீர் பருக ஆறுகள் எனும் பாம்புகளே இங்கு வாய்கள். அதன் வாலில் உப்புக்கரித்த வேர்வை கடல் ஆனது. சூரியனால் மீண்டும் மீண்டும் கடையப்படுவதால் தான் கடல் ஆனதோ? அமுதமே மீண்டும் இங்கு ஆறு. ஆற்று மங்கைகள் மணல் எனும் துகில் உடுத்தி மணம் சேர்க்கிறார்கள். வளம் தருகிறார்கள். மனிதனின் வீடு ஆசை நியாயமானது தான். ஆனால் ஒரே மனிதன் கட்டும் ஒரே வீட்டில் நூறு பேர் ஆசைகள் அல்லவா “அஸ்திவாரம்” ஆகின்றன? ஒருவன் நூறுபேரை […]