காப்பியக் காட்சிகள் 3.சிந்தாமணியில் சமய நம்பிக்​கைகளும் சமய உரி​மைகளும்

This entry is part 1 of 10 in the series 8 மே 2016

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,               மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com   மனித​னையும் அவனது வாழ்​வையும் வழி நடத்துப​வைகளாக  நம்பிக்​கைகள் விளங்குகின்றன. சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் மக்களிடம் காணப்பட்ட பலவ​கையான சமய நம்பிக்​கைகள் எடுத்து​ரைக்கப்பட்டுள்ளன. நல்வி​னை, தீவி​னை, ​சொர்க்கம் நரகம், ​தேவ வாழ்க்​கை, மந்திரங்கள், கடவுளுக்கு ​பொருள்க​ளைக் ​கொடுத்தல், ​தெய்வம் மனித உருவில் வருதல் உள்ளிட்ட பல சமய நம்பிக்​கைகள் திருத்தக்க​தேவரால் ​​தெளிவுறுத்தப்பட்டுள்ளன. இருவி​னை, நரகம் மனிதன் ​செய்கின்ற நல்வி​னை தீவி​னைகளுக்​கேற்ப அவனுக்குப் […]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலய ஓவியங்கள் – 4

This entry is part 2 of 10 in the series 8 மே 2016

(Paintings in The Great Abu Simbel Temples of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ஓ! உறங்குகிறாய் நீயோ! உறக்கம் என்ப தென்ன ? இறப்பின் எதிர்ப் பிம்பம் அது! சிறப்பாக உன்னதப் படைப்புகள் பிறக்கட்டும், மறைந்த பிறகு நின் பிம்பம் இறவாத ஓர் நிரந்தரம் நிலை பெறுவதற்கு! ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி ‘உன் மண்டை ஓட்டை எடு; எலும்புகளை சேகரி; மற்ற உடற் கூறுகளையும் சேர்த்து ஒட்டியுள்ள மண்ணை […]

‘ சொற்கள் – எதிர்ச்சொற்கள் ‘ — நூல் அறிமுகம் !

This entry is part 3 of 10 in the series 8 மே 2016

    மேற்கண்ட கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் அதங்கோடு அனிஷ்குமார் . குமரி மாவட்டம் அதங்கோட்டில் பிறந்த இவர் தற்போது பெரம்பலூர்க் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘ ஆசைக்கு வறுமை இல்லை ‘  ,  ‘ நிறங்களின் பேராசைக்காரர்கள் ‘ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். எழுத்துக் களம் , இலக்கிய விருது வழங்கி இவரைச் சிறப்பித்துள்ளது. கவிதைகளுக்கும் பரிசுகள் பெற்றுள்ளார். ‘ சொற்கள் […]

உரிமையில் ஒன்றானோம்

This entry is part 4 of 10 in the series 8 மே 2016

    சொற்பக் கூலிக்கு பல கோடி மதிப்புப் பொதிகளை இடம் மாற்றும் கூலிக்கு கடனே நிரந்தரம் பணி அல்ல இந்தத் தேர்தலுக்குப் பின்னும்   அவரது சயன அறை மற்றும் ஒரே தோழனான கட்டை வண்டியை விட அதிகம் ஒன்றும் பெரிதல்ல குடும்ப இருப்பிடம்   எனக்கிணையான உரிமை அவருக்கும் உண்டு வாக்களிக்க   இவர்களுக்கான என் சொற்கள் அனல் பறக்கும் என்பதைத் தவிர இவரது வாழ்க்கையுடன் எனக்குத் தொடர்பேதுமில்லை இன்னும் கூர்மையாய் என் எழுத்தைத் […]

இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

This entry is part 5 of 10 in the series 8 மே 2016

என் செல்வராஜ்   இலக்கிய சிந்தனை அமைப்பு ஆண்டு தோறும் வார, மாத மற்றும் தீபாவளி மலர்களில் வரும் சிறுகதைகளில் இருந்து பன்னிரண்டு சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை  ஒரு எழுத்தாளரிடம்  தந்து அவரது தேர்வில் முதல் இடத்தை பிடிக்கும் சிறுகதையின் தலைப்பில் வானதி பதிப்பகம் மூலம்   சிறுகதை தொகுப்பாக வெளியிட்டு வருகிறது.  அந்த தொகுப்பை ஏப்ரல் 14 அன்று வெளியிட்டு சிறந்த கதைகளின் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி வருகிறது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட […]

அடியில் உறங்கும் அறச்சீற்றம் [சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவலை முன்வைத்து]

This entry is part 6 of 10 in the series 8 மே 2016

”மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்பது ஒரு சான்றோர் பாடியது. ஆனால் காலம் காலமாக மாதர்தம் நிலயை எண்ணிப் பார்த்தால், அதாவது ஆண்கள் அவர்களை இச்சமுதாயத்தில் நடத்தும் விதத்தைப் பார்த்தால், [சமுதாயத்தில் மட்டுமன்று வீட்டில் கூடத்தான்] அஃதொன்றும் மாதவம் செய்து பிறக்க வேண்டிய பிறப்பு என்று சொல்ல முடியவில்லை. சகோதரர் மனைவியைத் துகிலுரிந்த கதை, மனைவியின் மேல் சந்தேகப்பட்டுத் தீக்குளிக்க வைத்த கதை, காட்டிலே குழந்தைகளுடன் தவிக்க விட்டுச் சென்ற கதை எல்லாம்தான் நமக்கு […]

உன்னை நினைவூட்டல்

This entry is part 7 of 10 in the series 8 மே 2016

  சேயோன் யாழ்வேந்தன்   உன்னை நினைவூட்டும் எதுவும் இனி இல்லை என்றாய் செல்லும் வழியிலெல்லாம் இன்னமும் செடிகள் பூக்கத்தான் செய்கின்றன!   உன்னை நினைவூட்ட இனி ஒன்றும் இல்லை என்றாய். செல்லும் வழியெல்லாம் வண்ணத்துப்பூச்சிகள் இன்னமும் பறந்தவண்ணமே இருக்கின்றன!   உன்னை நினைவூட்ட ஒன்றும் மிச்சமில்லை என்றாய். செல்லும் வழியெங்கும் இன்றும் குழந்தைகள் புன்னகைக்கத்தான் செய்கிறார்கள்!  

தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..

This entry is part 8 of 10 in the series 8 மே 2016

  சிங்கப்பூரை முதன்முதலாகக் கண்டுபிடித்து பெயர் சூட்டியவர் ஸ்ரீ விஜயத்தின் இந்திய இளவரசர் பரமேஸ்வரன். இவர் அரசு விருந்தினராக சீன தேசம் வரை சென்று வந்துள்ளார். சீனாவுடன் கடல் மார்க்கமாக வர்த்தகமும் செய்துள்ளார். அவருக்குப்பின் அவருடைய மகன் இஸ்கந்தர் ஷா 1389 ஆம் வருடத்தில் சிங்கப்பூரின் மகாராஜாவானார். அவர் அந்தப் பாரசீகப் பெயரைச சூடிக்கொன்டாலும் அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவவில்லை.இவர் ஸ்ரீ ரண விக்ரமா  என்றும் பெயர் கொண்டவர். 1398 ஆம் வருடத்தில் ஜாவா தீவிலிருந்து மஜாபாகித் […]

”வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்”

This entry is part 9 of 10 in the series 8 மே 2016

  ப.கண்ணன்சேகர் ஆளுக்கொரு தலைவரென அரசியலில் காணலாம் ஆனாலும் முதல்வரென ஒருவரே ஆகலாம் நாளுமொரு கட்சியென நாட்டினிலே உதிக்குது நடப்பதென்ன வணிகமா நல்லமனம் பதைக்குது மூளுகின்ற பிரச்சாரம்  மூட்டுவது கலகமே முறையாக பேசினால் முரண்படாது உலகமே வாளும்கையும் போலவே வார்த்தைகளை வீசினர் வாக்குறுதி இலவசங்கள் வகைவகையாய் பேசினர்! நேற்றுவரை எதிரியும் இன்றுமுதல் நண்பனே நெருக்கடியின் கூட்டணியால் நொஞ்சானும் கொம்பனே தூற்றலும் தோழமையும் தொடர்வதா ஆரோக்கியம் தோற்றாலும் வைத்திடு தொலைந்திடாத வைராக்கியம் போற்றலுக்கு உரியது பொன்னான மக்களாட்சி பொதுமக்கள் […]

மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ –

This entry is part 10 of 10 in the series 8 மே 2016

  கதிர்பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும் முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது  முற்றிலும் தளர்வானவை என்றோ ஒருகணமும் தோன்றுவதில்லை. தேவையான அளவில் மட்டுமே இறுக்கத்தையும் தளர்வையும் கொண்டு தன்னளவில் பொருத்தமானதாகவும் வசீகரமானதாகவும் ஒவ்வொரு கவிதையும் அமைந்துவிடுகின்றது. மொழியின் தளத்திலும் உணர்வின் தளத்திலும் இந்த வசீகரம் ஒருபோதும் கூடிவிடாமலும் குறைந்துவிடாமலும் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று இயைந்து ஒளிர்கின்றன. இதுவே கதிர்பாரதியின் கவிதைகளின் தென்படும் முக்கியமான சிறப்பம்சம். மற்ற கவிஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் […]