பூனை மகாத்மியம்

This entry is part 3 of 33 in the series 11 நவம்பர் 2012

ஒரு மழை நாள் ராத்திரில , என்னோட கம்ப்யூட்டர் ரூமுக்குப்பின்னாலருந்த பால்கனிலருந்து பழைய பாத்திரங்கள்லாம் போட்டு வெக்கிறதுக்காக சும்மா கிடந்த அலமாரில ஏதோ விழற மாதிரி சத்தம் கேட்டது .ராத்திரி மழைல மேல் வீட்லருந்து எதாவது பூந்தொட்டி ,இல்ல செடி கிடி விழுந்துருக்கும்னு நினைச்சு சும்மா இருந்துட்டேன் எழுந்து பாக்காம. காலைல எழுந்து பாத்தா ஒரு பெரிய பூனை கொஞ்சம் வயிறு உப்பலா , கதவத்திறந்த என்னையே கொஞ்சம் பாவமா பாத்துது.சரி ஏதோ மழைக்கி ஒதுங்கிருக்கும் இருந்துட்டுப்போகட்டும்னு […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்

This entry is part 2 of 33 in the series 11 நவம்பர் 2012

  மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். […]

அக்னிப்பிரவேசம் -9

This entry is part 33 of 33 in the series 11 நவம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “அம்மா! யாரோ வந்திருக்காங்க.” சொன்னான் சிம்மாசலம். படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தாள் நிர்மலா. நேரம் இரவு ஒன்பது மணி அடிக்கவிருந்தது. “இப்பொழுதா? அய்யா இல்லை என்று சொல்லு.” “சொன்னேன் அம்மா. உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார்” என்றான். நிர்மலா சலிப்புடன் எழுந்து வெளியே வந்தாள். சோபாவில் உட்கார்ந்திருந்த அவனை எங்கேயோ பார்த்த நினைவு. “நான்தான் பரமஹம்சா. என்னைத் தெயரியவில்லையா?” கேட்டான் அவன் […]