கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல். தொகுப்பில் சிறுகதை என்னும் வடிவம் கைவரப்பெற்ற பல புதிய எழுத்தாளர்களின் கதைகளைக் காணக்கூடியதாக உள்ளது. சிவானி – மிருபா சிவசெல்வசந்திரன், மாலினி அரவிந்தன், காயத்ரி வெங்கடேஸ், திவாணி நாராயணமூர்த்தி போன்றவர்களின் கதைகள் அப்படிச் […]
தங்கப்பா (அணிந்துரை) பாச்சுடர் வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ என்னும் இச்சிறு நூல் அழகிய இயற்கைக் காட்சிகளின் படப்பிடிப்பாகத் திகழ்கின்றது. திருப்பாவை, திருவெம்பாவை எனும் நூல்களை நாம் அறிவோம். அவை சமயஞ் சார்ந்தவை. பிற்காலத்தில் அவற்றை அடியொற்றி இன்னுஞ் சில பாவைப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. பாவலரேறு பெருஞ்சித்திரனார் ‘தமிழ்ப்பாவை’ படைத்துள்ளார். காரை. இறையடியான் ’திருவருட்பாவை’ என்னும் தலைப்பில் 30 நாள் இரமலான் நோன்பை முன்வைத்து எழுதி உள்ளார், இப்பொழுது இயற்கையைப் பாடுபொருளாகக் கொண்டு வளவ. துரையன் […]
ஹரி ராஜா மழை என்றால் சாதாரண மழை இல்லை. பேய் மழை. மதுரை அப்போதிலிருந்தே வெப்ப பூமி தான். கோடையின் மாலைகளில் வரும் மழைக்காக ஏங்கித் தவிப்பார்கள் மதுரைவாசிகள். பெருமழை ஓய்ந்து சிறு தூரலாக மாற்றம் கொண்டிருந்த மாலை நேரம். அன்றைய மாலை குளியலை நதியில் கொள்ளலாம் என்று முடியு செய்தான் சத்திய விரதன். வழக்கத்துக்கு மாறாக தன் பரிவாரங்களைத் தவிர்த்துவிட்டு உரை வாளின் துணையுடன் மாறு வேடத்தில் கிளம்பினான் பாண்டியன். மின்னல் வேகத்தில் நதியின் […]
சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் முகப்பு காலனித்துவக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட 1909 ஆம் வருடத்தில் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர். நுழை வாயிலினுள் நுழைந்ததும் வலது பக்கத்தில் மருந்தகம் இருந்தது. அங்கு சுருள் சுருளான கேசத்துடன் மாநிறம் கொண்ட ஒருவர் என்னைப் பார்த்து, ” கூட மார்னிக் டாக்டர். ” என்றார். அவரிடம் சென்று கை குலுக்கி என்னை அறிமுகம் செய்துகொண்டு அவருடைய பயரைக் […]
கோ. மன்றவாணன் “ஏய் முத்துலட்சுமி… இந்தச் சாக்கடை எத்தன நாளா அடைச்சிக்கிட்டு இருக்கு. சொன்னாத்தான் செய்வீயா?” “பாக்கலம்மா…” “என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா… நீ பாக்கமாட்டீயா?” “இல்லம்மா…” “என்ன இல்லம்மா நொள்ளம்மா. சாக்கடையை ஒழுங்காக் கிளீன்பண்ணு” “ஒடம்பு முடியலம்மா நாளக்கிச் செய்றேம்மா” “அதுவரிக்கும் நாத்தம் குடலத்தின்னனுமா. கொசு வேற முட்டப்போட்டு டெங்கு சிக்கன்குனியான்னு நோய் வருதுங்கறாங். இப்பவே செய்யு” என்று கடும்உத்தரவு பிறப்பித்துவிட்டுக் கூடத்துக்குள் போனாள் திலகா. அந்த வீட்டில் முத்துலட்சுமி இரண்டு […]