இடிபாடுகளிடையில்…..

This entry is part 1 of 14 in the series 6 நவம்பர் 2016

அருணா சுப்ரமணியன் பேரிடியோ பெருவெடியோ தேவையாயிருக்கவில்லை… எனக்குள் எழும்பியிருந்த அந்தக் கட்டிடத்தை தகர்க்க….. உன்னை சொல்லி குற்றமில்லை.. பதப்படுத்த தேவையான கால அவகாசம் கொள்ளாது அவசரமாய் கட்டிவிட்டேன் அடுக்கு மாடி கட்டிடமாய் உன் மீது என் ஆசைகளை…. சிற்றின்ப செங்கல் என்று நினைத்திருந்தாயோ உன் மேல் கொண்ட பேரன்பை! சிதைத்துவிட்டு சிரிக்கிறாய் சிறுபிள்ளை விளையாட்டுபோல்… இனி நான் எவ்வாறு மீட்டெடுப்பேன் இடிபாடுகளிடையில் மாட்டிக்கொண்ட என் இதயத்தை!

ஸ்ரீராம் கவிதைகள்

This entry is part 2 of 14 in the series 6 நவம்பர் 2016

அஸ்திவாரம் அத்தனை பெரிய கோயிலுக்கு எப்படி அஸ்திவாரமிட்டிருப்பார்கள் என்று யோசனையாகவே இருந்தது… கடவுளிடம் நான் செய்த தவற்றை ரகசியமாக ஒப்புக்கொண்டபோது அந்த நந்தி ஒட்டுக்கேட்டது போலிருந்தது… கோயிலை விட்டு வெளியேறும்வரை அந்த நந்தியை திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தேன்… ஒருமுறை கூட அது என்னை திரும்பி பார்க்கவில்லை என்பதில் இருந்த‌ இனம் புரியாத அந்த ஏதோவோர் உணர்வில்தான் கோயிலின் அஸ்திவாரம் தெளிவாக தெரிந்தது… – ஸ்ரீராம் *********************************** குதிரை சவாரி அந்த குதிரை வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது… எங்கள் […]

மலையின் உயரம்

This entry is part 3 of 14 in the series 6 நவம்பர் 2016

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள், மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள் மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி மலை மாபாதகம் செய்துவிட்டதாக மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்; காலமெல்லாம் கையில் கற்களோடு சுற்றிக்கொண்டிருப்பவர்கள் பாவனைக் கண்ணீர் பெருக்கிக் கருணைக்கடலாகிவிடுகிறார்கள். கனியிருப்பக் காய் கவரலாமோ என்ற குறட்பாவை மேற்கோள் காட்டி கையோடு தனித்துவமான தமது வசைபாடலை ஒலிக்கச்செய்கிறார் கோரஸ்களோடு. ‘கலி முத்திப் போச்சு’ என்பதாய் கவனமாய் நவீன தமிழில் கருத்துரைத்து […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விரைவாகச் சுற்றிய பூர்வப் பூமியின் வேகம் எப்படிக் குறைந்தது ?  

This entry is part 4 of 14 in the series 6 நவம்பர் 2016

சி. ஜெயபாரதன்     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h3kB0Z4HdSo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ye8bROSSq2g http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hahpE8b6fDI http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WGTBJHFNywI http://www.space.com/14908-moon-evolved-video-guided-tour.html http://www.space.com/14442-grail-mission-snaps-side-moon.html ********************* பொங்கி வரும் பெருநிலவைப் புகழாத கலைஞர் இலர் ! மங்கிப் போன கரி முகத்தில் கால் வைத்தார் ! முழு நிலவுக்குத் தங்க முலாம் பூசுவது வெங்கதிர்ப் பரிதி  ! கடல் அலைகள் எழுப்பும் நிலவு ! அச்சின்றி நகர்வது ! அங்கிங் கெனாதபடி எங்கும் முகப் பருக்கள் !  பெருங்குழிகள் ! […]

சிறந்த பழைய திரைப் பாடல்கள்

This entry is part 5 of 14 in the series 6 நவம்பர் 2016

என் செல்வராஜ் தமிழில் முதல் திரைப்படம் ” கீசக வதம் ” 1917 ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தை எடுத்தவர் நடராஜ முதலியார். இது தான் தமிழில் வந்த முதல் மௌனப்படம். தமிழில் வந்த முதல் பேசும் படம் காளிதாஸ் 21.10.1931 ல் வெளிவந்தது. இந்த படத்தை இயக்கியவர் எச்.எம்.ரெட்டி. ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட படங்கள் மிக அதிகமான பாடல்களைக் கொண்டிருந்தன. பாடல்களைப் பாடக்கூடிய நடிகர்களே கதாநாயகர்களாகவும் நடித்தனர். எம்.கே.டி. பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், பி யூ […]

சொர்க்கம்

This entry is part 6 of 14 in the series 6 நவம்பர் 2016

சேலம் எஸ். சிவகுமார் அழகாய் ஒரு வீடு மெத்தெனப் புல் பாதை இனிதாய் மலர்த்தோட்டம் பூத்த சிறுமலர் சேர்த்த நறுமணம் நீர்மேகம் இல்லாத நீலத் தொடுவானம் தனியாய் இசைப் பாட்டு சுவையாய் ஓர் அடிசல் பாடும் பறவை ஓடும் அணில் காலைத் தென்றல் கையேடு கை சுடுபானம் நான் நீ .

பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு

This entry is part 7 of 14 in the series 6 நவம்பர் 2016

தாரமங்கலம் வளவன் கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம். “ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும் போது, கிரானைட் கற்களை தூக்கும் கிரேன் அறுந்து விழுந்து, அதனடியில் சிக்கி இறந்து போய் விட்டான். சம்பூர்ணத்திற்கு வயிற்றில் ஒரு குழந்தை. கையில் ஒரு குழந்தை. என் பக்தை கதறி அழுகிறாள் சுவாமி…” “ நான் என்ன செய்ய வேண்டும் தேவி.. […]

இது பறவைகளின் காலம்

This entry is part 8 of 14 in the series 6 நவம்பர் 2016

சிவகுமாரி அரவிந்தன் மரத்தில் அமர்ந்திருக்கும் பறவைக்குத் தெரியாது தன் மூதாதையரின் எச்சத்தில் வளர்ந்த விருட்சம் தான் இதுவென்று.. மீன் கொத்தியின் மூக்கு அழகென்று சொல்லித் திரிகின்றன மீன்கள் கொத்தப் படுமுன் பலதும் அழகாகத்தான் தெரிகின்றன பலருக்கும்… அலகின் கூர்மையை பரிசோதிப்பதற்காக கொத்திக் கிழிப்பதில்லை எவ்வுயிரையும் கழுகுகள்… செல்பேசிகளின் கதிரலையில் கருகிப் போய்விட்டது சிட்டுக் குருவிகளின் சிறகுகள் ….. குயில்களுக்கு மட்டும் தெரிவதே இல்லை எவை தம் குஞ்சுகளென்று .. தவளைகள் கிடைக்காமல் தவித்தபடி அலறுகின்றன இரவுகளில் ஆந்தைகள் […]

தொடுவானம் 143. முறுக்கு மீசை

This entry is part 9 of 14 in the series 6 நவம்பர் 2016

டாக்டர் ஜி. ஜான்சன் 143. முறுக்கு மீசை கல்லூரி பேருந்து எங்கள் விடுதியில் நின்றபோது நான் இறங்கவில்லை. வகுப்பு மாணவிகள் ஏன் என்று கேட்டனர். அங்கு யாரைப் பார்க்க வருகிறாய் என்று கேலி வேறு செய்தனர். நான் பதில் கூறவில்லை. புன்னகை மட்டும் செய்தேன். பெண்கள் விடுதிவரை அமர்ந்திருந்தேன். கல்லூரி முதல்வரின் அலுவலகம் பெண்கள் விடுதி அருகேதான் இருந்தது. பெண்கள் அனைவரும் இறங்கியபின் நான் கடைசியாக வெளியேறினேன். அவர்கள் விடுதிக்குள் நுழையும்வரை நான் காத்திருந்தேன்.பின்பு கல்லூரி முதல்வர் […]

சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும்

This entry is part 10 of 14 in the series 6 நவம்பர் 2016

கே.எஸ்.சுதாகர் பென்டிக்கோ (விக்டோரியா, அவுஸ்திரேலியா) நோக்கிய ஒரு பயணம் – கட்டுரை சமீப காலங்களாக எனது சீனநண்பர் ஒருவரை சிலர் ‘பென்டிக்கொ பென்டிக்கோ’ என்று பரிகாசம் செய்வதைக் கண்டிருக்கின்றேன். அவரை அணுகி விபரத்தைக் கேட்டறிந்தேன். “எனது மகள் primary school இல் இருந்து secondary school இற்கு படிக்கப் போக இருக்கின்றார். மெல்பேர்ண் நகரத்தில் உள்ள பிரபலமான பெண்கள் கல்லூரியான Mac.Robertson Girls’ High School இற்குப் போவதற்காக அவர் முயற்சி எடுத்து வருகின்றார். BENDIGO இல் […]