-ஏகதந்தன் அனார்க்கிஸம் (Anarchism)- ‘இந்த ஆங்கில எழுத்தைத் தமிழில் எந்த வார்த்தையைக் கொண்டு குறிப்பிடுகிறார்கள்’, என்று எனக்கு ஓர் ஆவல்! நௌம் சௌம்ஸ்கி (Noam Chomsky) என்ற மொழியியல் பேராசிரியர், அமெரிக்க அரசியலினால் உலக மக்களும், ஏன் அமெரிக்கர்களும் படும் துன்பத்தையும், அதற்கான தீர்வாகச் சரித்திரத்திலிந்து இந்தத் தத்துவத்தைக் கூறி, செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் முன் மொழிகிறார்; இதைப் படிக்கும்பொழுது பிறந்ததுதான் இந்த ஆவல். பல இணையதளங்கள் அனார்க்கிஸத்தை வன்முறை என்றும், கலகமென்றும், ஒழங்கீனமென்றும் குறிப்பிட்டிருந்தது; […]
1956ல் அடித்த புயல் தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களை தலைகீழாய்த் புரட்டிப்போட்டது. விமானங்கள் தாழப் பறந்து அரிசி மூட்டைகளைத் தள்ளிவிட்டுப் பறந்தன. அப்போதுதான் முதன்முதலாக பலர் விமானத்தையே பார்த்தார்கள். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் அறந்தாங்கியும் ஒன்று. ஆவிடையார் கோவில் ரோட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 300 பேர் வீடுகளை இழநது தங்கதுரையின் வீட்டில் அடைக்கலம் புகுந்தார்கள். செம்பராங்கற்களைக் கூட்டி அடுப்பு வைத்து பெரிய பெரிய அண்டாக்களில் கஞ்சி காய்ச்சி பருப்புத் துவையலுடன் பரிமாறப்பட்டதும் தங்கதுரையின் வீட்டில்தான். தங்கதுரையும் மனைவி […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்வது குண்டலகேசியாகும். காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த காப்பியமாக குண்டலகேசி திகழ்கின்றது. இக்காப்பியம் முழுமையும் கிடைக்கவில்லை. தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை, சிஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் உரை, நீலகேசி இவற்றிலிருந்து தற்போது கிடைத்துள்ள பாடல்கள் பத்தொன்பது மட்டுமே ஆகும். விருத்தப்பாவால் அமைந்துள்ள இக்காப்பியத்தை குண்டலகேசி விருத்தம் என்றும் கூறுவர். புத்தமதக் கதையைக் கூறும் தேரி […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wYjLHviMJ9Q https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rKpFFTGbaDc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=s8johKNthUI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rKB43HFhVDA ++++++++++ தீவிரக் காந்த ஆற்றல் கொண்டது நியூட்ரான் விண்மீன் ! பூதப் புயல் உண்டாகி நிறை மிகுந்து பொசுங்கும் விண்மீன்கள் ! பூமிக்கருகில் நெருங்கினால் மாந்தரின் உடற் மூலக்கூறுகளை முறித்து முடமாக்கி விடும் ! உயிரினத்துக்குச் சிதைவை உண்டாக்கு பவை நியூட்ரான் விண்மீன்கள் ! வாயு எரிசக்தி வற்றி ஆயுள் முறியும் விண்மீன்கள் ! எரிசக்தி தீர்ந்து வற்றிய பிறகு வறிய […]
காயடிக்கப்பட்டுபின்னர்தான் காளைமாடுகளுக்கு கொம்பில் குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறார்கள். பார வண்டி இழுக்கும் வாயில்லா ஜீவனுக்கு ருசியாக மணிலா பிண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் பச்சரிசி தவிடும் தின்பதற்கு வைத்து, கருப்புக்குக்கயிறோடு வெண்சங்கும் அதன் கொம்பில் கொலுவிருக்கிறது என்றால் ஒன்றும் சும்மா இல்லை. அரசாங்க ஊழியர்கள் பெறும் சலுகைகள் கூட இந்த வகைதானோ என்னவோ. எத்தனையோ சலுகைகள். விடுப்பில் பயணம் என்பதும் ஒரு சலுகை.கேள்விப்பட்டுதான் இருப்பீர்கள்.நான்காண்டுகளுக்கு ஒரு தடவை இந்தியாவில் எந்த மூலைக்காவது சென்று திரும்பலாம். எந்த ஊர் […]
பெண்களின் வெளி உலகம் இன்று விரிவடைந்திருக்கிறது. முகநூலின் பங்கு அதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் முகநூலில் இடம்பெற இண்டர்நெட் தேவைப்படுகிறது அத்துடன்,முகநூலைப் பயன்படுத்தும் பெண்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். . கணினி வசதிகள் எதுவும் இல்லாத இடத்திலும் இன்று கைபேசிகள் வந்துவிட்டன. அதிலும் கைபேசிகள் வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் பெண்களிடம் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதற்கு இன்றுவரை நம்மிடம் கள ஆய்வுகள் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட […]