விருந்து

This entry is part 7 of 37 in the series 23 அக்டோபர் 2011

ஒரு நன்கொடைத் திரட்டுக்காக அந்த இரவு விருந்தாம் பத்துப் பேர் மேசைக்கு இரண்டாயிரம் வெள்ளி பொரித்த முழு குருவா மீன் எராலுடன் கனவாய் தந்தூரிக் கோழியுடன் முந்திரி வருவல் வறுத்த சேமியா பொரித்த சோறுடன் புரோகோலி சூப் விருந்து நிறைந்தது வீட்டுக்கு வந்ததும் பசியைக் கிளப்பியது விருந்து பொன்னி அரிசிச் சோற்றில் பூண்டு ரசம் விட்டு ஒரு பிடி பிடித்த பின்தான் வயிறு நிறைந்தது அமீதாம்மாள்

ஒரு படைப்பாளியின்வலியை தன்வலியாய் உணர்ந்து எழுதிய எழுத்து

This entry is part 6 of 37 in the series 23 அக்டோபர் 2011

ஹெச்.ஜி.ரசூல் காலச்சுவடு செப்டம்பர் 2011 இதழில் ‘தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு’ என்னும் தலைப்பிலான களந்தை பீர்முகம்மதுவின் எழுத்துப் பதிவு மிகவும் நியாய பூர்வமாக அமைந்திருந்தது. ஒரு படைப்பாளியின் வலியைத் தனது வலியாக உணர்ந்து எழுதியதாக உணர்கிறேன். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் அதிகாரத்தின் வன்மத்தை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த காலச்சுவடுக்குப் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையிலிருந்து உள்ளபடியே நன்றி கூறிக்கொள்கிறேன். இப்பிரச்சினை குறித்து இன்னும் சில கூடுதலான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பத்மநாபபுரம் உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்புக்குப் […]

மிம்பர்படியில் தோழர்

This entry is part 5 of 37 in the series 23 அக்டோபர் 2011

ஹெச்.ஜி.ரசூல் கட்சித்தலைவர்களும் தொண்டர்களும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக் கூட்ட அரங்கில் ஸப்புகளில் வரிசையாய் அணிவகுக்க இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஹாமீம் ஆலிம்சா இமாமாக நின்று நேற்றைய தொழுகையை நடத்திக் கொண்டிருந்தார் அலைமோதிய மனம் பதைப்புக் கொள்ளத் துவங்கியபோது ஜும்மாமசூதியின் கடைசிவரிசையில் நானிருந்தேன் மிம்பர்படியில் கையிலொரு வாளோடு நூற்றுக்கணக்கில் குழுமியிருந்த தொழுகையாளிகளிடம் தோழர் நல்லக்கண்ணு மார்க்ஸிய வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்

கூடங்குளம் மின்சக்தி ஆலையம்

This entry is part 4 of 37 in the series 23 அக்டோபர் 2011

சி. ஜெயபாரதன், கனடா கூடங்குள அணுமின் உலை கூவத்து நதியில் கட்டப் பட்ட குப்பை மாளிகை அல்ல ! இந்தியர் உப்பைத் தின்று வளரும் ஒப்பிலா விஞ்ஞானிகள் உன்னத பொறித் துறை மன்னர்கள் வடித்த மின்சாரப் பிரமிட்கள் ! ஊரே தீப்பற்றி எரிய வீணை வாசித்த நீரோ மன்னன் எழுப்பிய கோர உலைகள் அல்ல ! இவை மூடிக் கிடந்தால் பூனை தூங்கும் பொங்கிய அடுப்பில் ! கணினிகள் மிளகாய்ப் பெட்டிகளாய் கண்ணீர் சிந்தும் ! மின்சார மின்றி […]

Murugan Temple Maryland Upcoming Events

This entry is part 3 of 37 in the series 23 அக்டோபர் 2011

Murugan Temple Upcoming Events Saturday, October 22……………………… Murugan Temple Annual Fund Raising Event with Dance Performance Thu, Oct 27th through Sat, Nov 5th…. Skanda Shasti —————————————————————–   ———————— For the latest updated news on whats happening at the temple, please subscribe to the temple newsletter. And visit us daily at the temple blog. http://www.MuruganTemple.org/ http://murugantemple.wordpress.com/ ————————-

வரவேற்போம் தீபாவளியை!

This entry is part 2 of 37 in the series 23 அக்டோபர் 2011

தீய எண்ணங்களை தொலைத்துவிட… நல்லெண்ணங்களை நம் நினைவில் நிறுத்த… வரவேற்போம் தீபாவளியை! உணர்வுகளைத் தொலைத்துவிட்ட தீவுகளாகிப் போன நம் வாழ்வில் வசந்தம் வீச… வரவேற்போம் தீபாவளியை! மின்னஞ்சல் அனுப்பி அனுப்பியே உறுதியான நட்பில் தற்காலிகமாய் மறந்துபோன முகங்களை தேடும் முயற்சியாய்… வரவேற்போம் தீபாவளியை! நேற்றுவரை காதலர்களாய்… இன்றுமுதல் கணவன் மனைவியாய்… இல்லற பந்தத்தில் இணைத்த பூரிப்பில் வரவேற்போம் தீபாவளியை! உண்மையான அன்பு நம் குடும்பத்தினரிடம் மட்டுமே கிடைக்கும் என்று உணரவைக்கும் திருவிழா ஆதலால் வரவேற்போம் தீபாவளியை! புத்தாடை […]

மந்திரப்பூனை. நூல் பார்வை.

This entry is part 1 of 37 in the series 23 அக்டோபர் 2011

பூமியில் உள்ள ஒவ்வொரு துண்டு நிலத்திலும் வரலாறு நிறைந்து கிடப்பது போல ஒவ்வொரு எழுத்தாளரிலும் ஒவ்வொரு வாழ்க்கைக்கான வரலாறு புதைந்து கிடக்கிறது. அதை எவ்வாறு எந்த அளவு சிறப்போடும் ஈர்ப்போடும் எளிமையோடும் பகிர்கிறாரோ அந்த அளவு அது காப்பியமாக ஆகிறது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட வைக்கம் முகம்மது பஷீரின் மந்திரப் பூனை நாவல் படித்தேன். தமிழில் மொழிபெயர்த்தவர் சுரா. பலமுறை படித்தும் சுவாரசியம் அடங்கவில்லை. மொழிபெயர்ப்பே இவ்வளவு சுவாரசியம் என்றால் மூலம் எப்படி இருக்கும். […]