வேலி – ஒரு தமிழ் நாடகம்

This entry is part 1 of 23 in the series 4 அக்டோபர் 2015

நாடகம் தொடங்கும்போது ஒரு பெண் மிகவும் பதட்டமாக போனில் தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் பெயர் ஜெயா. தன் மகன் சிறுவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்பதும், அவன் நிலை அவ்வளவு சரியாக இல்லை என்பதும், அந்தப் பெண் தன மகனின் உடல்நிலை பற்றி மடுமல்லாமல், அவனைக் குறித்த வேறு கவலை கொண்டுள்ளாள் என்று அறிகிறோம். அந்தக் குழந்தை உடல் நிலை சரியாக ஆகிவிட்டாலும் மீண்டும் பெற்றோரிடம் வர வாய்ப்பில்லா சூழ் நிலை உருவாகக் கூடும் எனபது […]

இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளது

This entry is part 3 of 23 in the series 4 அக்டோபர் 2015

Posted on October 2, 2015 2015 செப்டம்பர் 28 காலை 10 மணிக்கு சிரிஹரிகோட்டா ஏவு தளத்தி லிருந்து சீர்மையாக ஏவப்பட்ட பிறகு, சுமார் 20 நிமிடத்தில், PSLV ராக்கெட் ஆஸ்டிரோஸாட் [ASTROSAT] விண்ணோக்கி ஆய்வகத்தைத், திட்டமிட்ட சுற்றுவீதியில் இட்டு அது பூமியைச் சுற்ற ஆரம்பித்தது. பி. ஜெயக்குமார் [ஆஸ்டிரோஸாட் திட்ட ஆளுநர்] சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ https://youtu.be/Llv-gTdaoqo https://youtu.be/3mJSnc3hpLI https://youtu.be/OI-VkHWenRs https://youtu.be/VOA_3WkEZNA https://youtu.be/3AA4SwwaWUA https://youtu.be/8qrE11xFUAo ++++++++++++++++ +++++++++++++++ நாசாவின் […]

திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்

This entry is part 18 of 23 in the series 4 அக்டோபர் 2015

  முருகபூபதி – அவுஸ்திரேலியா பத்மபூஷன் – நாட்டியகலாகேசரி வழுவூர் இராமையா பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிருந்து பரதம் பயிற்சியை தொடர்ந்த பாக்கியசாலி. கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரையில் ஆடற்கலையின்  நுட்பங்களின் ஆய்வில்  தேடுதலில் ஈடுபட்ட மூத்த நடன நர்த்தகி  நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் கொழும்பில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற அமைப்பு 1970 களில் இயங்கியது. இதில் எழுத்தாளர்கள் சாந்தன், மாவை நித்தியானந்தன்,  குப்பிழான் சண்முகன், யேசுராசா, இமையவன், நெல்லை க. பேரன் […]

நகுலன் கவிதைகள்

This entry is part 4 of 23 in the series 4 அக்டோபர் 2015

விக்ரமாதித்யன் நம்பி பாஷையைக் கையாள்பவன் எவனும் சங்ககாலத்திலிருந்து இன்று வருகின்ற புதுக்கவிதை வரையில் தொடர்ந்து வரும் மொழியைத் தனது சொத்தாகத்தான் கருதுகிறான். இந்தமாதிரி ரஸôனுபவமாக வந்த இலக்கிய சரித்திர – மொழி ஞானத்தினால் அவன் லாபமடைகிறான். அவனால் இந்த நூற்றாண்டின் அனுபவத்தை வெளியிடக்கூட சங்க கால இலக்கிய மொழி பயன்படலாம்; பயன்படக்கூடாது என்று ஒரு விதியுமில்லை. அது அவன் பக்குவத்தையும் ஈடுபாட்டையும் பயிற்சியையும் பொறுத்தது. மேலும் சங்க இலக்கியத்தில் காணப்படும் விளிச்சொற்கள், ஓசை அமைதி, சொல்முடிவுகள், அர்த்த […]

மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்

This entry is part 5 of 23 in the series 4 அக்டோபர் 2015

  பெய்யெனப் பெய்யும் மழை என்பது போல் சொல்லெனச் சொன்னவுடன் வெடித்து வடிக்க என்னிடம் ஒன்றும் கவிதைக் கற்பு இல்லை. குளிர்ந்து இறங்கும் மேகத்தாரை காற்றுடன் மோகித்துச் சல்லாபிக்கும் ஆனந்தக் கூத்தை ரசிப்பது மட்டுமே மழைத் தருணங்களுக்கு நான் தரும் மரியாதை என்றிருப்பினும் இடியையும் மின்னலையும் போல மழைக் காற்றின் மூர்க்க முயக்கத்தை வியந்து சொல்லும் விந்தையாற்றலும் என்னிடம் இல்லை எனக்குள் எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் சின்னச்சின்ன வார்த்தைகளை மழை முடிந்து அடங்கின பின்தான் கோர்க்க முடிகிறது […]

மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலி

This entry is part 6 of 23 in the series 4 அக்டோபர் 2015

பெண்களுக்கு அடி வயிறு வலித்தால் பல கோணங்களில் அதை ஆராய வேண்டியுள்ளது. முதலில் வலியின்  தன்மைகள் குறித்து அவர்களிடம் கேட்டு அறிய வேண்டும். வலி எத்தனை நாட்களாக உள்ளது, எந்தப் பகுதியில் அதிகம் உள்ளது, எப்போது வருகிறது, என்ன செய்தால் கூடுகிறது, எப்போது குறைகிறது, வயிற்றுப்போக்கு உள்ளதா, வாந்தி உள்ளதா, மலச்சிக்கல் உள்ளதா, மாதவிலக்கு சரியாக வருகிறதா, பசி எடுக்கிறதா,மணமானதா , குழந்தைகள் உள்ளதா, வேறு நோய்கள் உள்ளதா என்பவைபற்றி மருத்துவர் கேட்டு தெரிந்துகொள்வார். பின்பு வயிற்றைப் […]

தினம் என் பயணங்கள் -46

This entry is part 7 of 23 in the series 4 அக்டோபர் 2015

  எத்தனைத் துயரங்களோடு துவங்கி விட்டது இன்றைய தினம். (04.10.2015) ஏதோ முரண்பாடுக்கொண்ட எண்ணங்கள் மனதைக் கொத்தி உணவாக்கிக் கொள்ள முனையும் அத்தகைய எண்ணங்களில் இருந்து விடுபட முயன்றபடி தவழ்கிறது இன்றைய வாழ்வியல் பயணம். சாலை வெறிச்சோடி இருந்தது. சைக்கிள் பயணம் போல் என் ஸ்கூட்டி பயணம் இல்லை. துரிதமாய்க் கடந்து விடுகின்றன காட்சிகள். மனிதர்களும்தான் வேக ஓட்டத்தில் காணாமல் போய் விடுகிறார்கள். அலுவலகத்திற்குள் நுழையும் போதே கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. சேரும் சகதியுமான தெருவையும், […]

ஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்

This entry is part 8 of 23 in the series 4 அக்டோபர் 2015

  ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகம், சிறு கதைத் தொகுப்பு ஒன்று படிக்கக் கிடைத்ததில் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சந்தோஷம் என்று சொன்னது பின்னர் இதைப் பற்றி எழுதிச் செல்லும் போது எனக்கு கொஞ்சம் சிக்கலான காரியமாக ஆகப் போகிறது. ஆனாலும் எழுதியதை அழிக்க விரும்ப வில்லை. சந்தோஷம் என்று சொன்னது உண்மை. சந்தோஷம் திறமையாக எழுதும் ஒரு சிறு கதைக் காரரைக் கண்டு கொண்டதில்.. ஆமாம், கண்டு கொண்டது தான். இது தான் […]

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015

This entry is part 9 of 23 in the series 4 அக்டோபர் 2015

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  15 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா  எதிர்வரும் 14-11-2015 ஆம்   திகதி சனிக்கிழமை   மாலை  4.00  மணிக்கு  விக்ரோரியா  மாநிலத்தில் மெல்பன்   கரம்டவுண்ஸ்  ஸ்ரீ சிவா  விஷ்ணு  ஆலயத்தின்  பீக்கொக் மண்டபத்தில்   நடைபெறும். கலை,   இலக்கிய  கருத்தரங்கு –  நூல் அறிமுக அரங்கு  உட்பட கலை நிகழ்ச்சிகளும்   இடம்பெறும். மேலதிக  விபரங்களுக்கு: திரு. ஜெயராம சர்மா (தலைவர்)         0431 200 870 திரு. ஸ்ரீநந்தகுமார்  (செயலாளர்)        0415 405 361 திரு. […]

செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு

This entry is part 2 of 23 in the series 4 அக்டோபர் 2015

ஒரு மொழிக்குச் செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இதுகாறும் 1) தமிழ் 2) சமற்கிருதம் 3) கன்னடம் 4) தெலுங்கு 5) மலையாளம் அதோடு 6) ஓடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ளன கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக […]