காட்சி ஒன்று .. மறுத்து பேசும் பிள்ளைகளிடம் மன்றாடி மனு போட்டு, மாறுவேடம் தரித்து பயமுறுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு காட்சி இரண்டு .. உம்மென்றால் உம்மனாமூஞ்சிகளாகி, ஏனென்றால் எரிமலையாய் எழும் வயதான வீட்டு…
அகதிக் காகம் - பத்மநாபபுரம் அரவிந்தன் - நீண்டதோர் கடற் பயணத்தின் மூன்றாம் நாள் அதிகாலை கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் .. சில நூறு மைல்கள் கரையே இல்லாப் பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ, கண்டம் கடக்கும் பறவைகள் பலவும் ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்.. காகங்கள் பொதுவாக இத்தனை தூரம் பார்ப்பதே இல்லை.. இக்காகம் வழி தவறிப் பெருங் காற்றில் அடித்துவரப் பட்டிருக்கலாம்.. தொலை பயணக் கப்பல்கள் ஓவ்வொன்றாய் அமர்ந்தமர்ந்து வந்திருக்கலாம்.. எம்பிப் பறக்க எத்தனித்து பெருங் காற்றின் வேக வீச்சில் தடுமாறித் தத்தளித்து மீண்டுமது கப்பல் தளத்தினில் வந்தமரும்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா யாரிந்த மாறுதல் செய்பவர் ? எவரிந்த மாறுதலைப் புரிபவர் ? இடது பக்கம் எய்த அம்பு வலது பக்கம் விழுந்தது…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "சகோதரர்களே ! ஒருவருக் கொருவர் போதனை கூறிக் கொள்வீர். அதுவே உமக்கு பிழைகளைத் திருத்தவும், வீணான மன நோவைத் தவிர்க்கவும்…
குமரி எஸ். நீலகண்டன் பரந்த பசும் வெளியில் பாய்ந்து சென்றது ஒரு குதிரை தன்னந்தனியாய். ஆடுகள் மாடுகள் ஆங்காங்கு மேய்ந்திருக்க இறுமாப்புடன் வானம் நோக்கியது. வட்ட நிலாவைக் கண்டு அழகிய…
சிற்சில சொல்லாடல்கள் பிரித்து அறியப்படாமலே வாதங்கள் என மேல்போர்வை கொண்டு ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன .. மீட்சி என்னும் சொல்லறியா அவை தனக்குள் முடங்கி "தான் " விடுத்து.. தர்க்கத்தில் கலந்து பிணைந்து பின்னர் தானாய்…
கால்வலி கண்டதுதான் மிச்சம்- கொக்குக்கு.. ஓடையில் வரவில்லை ஒரு மீனும்.. வரும் மீனையெல்லாம் வலைபோட்டுத் தடுத்துவிட்டான் குத்தகைதாரன்.. கண்மாய் மீன்களுக்குக் கரைகாணா சந்தேஷம்- இரை கிடைக்கிறதாம் இலவசமாக.. மொத்தமாய் இரையாகப் போவது இப்போது…
சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது - தாயின் தியாகம் ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் - ஒன்றே முடிச்சு மணந்தால் மறப்பதும் மணக்காவிடில்…
தண்ணி யடிசசு வந்தா தடாவாமே அண்ணாச்சி பாக்கிவச்சார் ஆகாரம் மண்ணாச்சு போய்யா அதுகிடக்கு பாயா கவிச்சிதுண்ண நாயுடு மெஸ்படி ஏறு.. வாசல் எருமைங்க வால்தூக்கு தேவிலகு ஏசாதே நீமெர்சல் ஆவாதே…
பழக்கப்பட்ட உடல்களைப் போலிருந்தன அவை செய்கையும் செய்நேர்த்தியும் எத்தனை சிற்பியோ.. விரிந்தும் குறுகியும் அகண்டும் பருத்தும் ஆதிமூர்க்கங்களின் விலாசங்கள் அறிகுறிகளின் கையெழுத்தோடு. நிராசையோ., நிரந்தரச் சுவையோ., நேர் நேர் தேமாவென ஒற்றைச் சாளரம் வழி…
மிக உன்னதமான ஒன்றைப் போன்ற பாவனைகளுடன் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வார்த்தைகளும் மிக எளிமையான ஒன்றைப் பற்றி. புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் அயற்சி ஏற்படுத்தும் ஒவ்வொரு நிமிடங்களும்’ அதன் மதிப்பை அதிகப்படுத்துகின்றன. அயர வைப்பதுபோல்…
அகம் சார்ந்த வாழ்வை பழித்து விடப்பட்டிருக்கிறது ஆதலால் முன்னோர்களின் வழியின் திறவுக்கோல் வைத்து சரிப்பார்த்துக்கொள்ள முடிகிறது நான் எதிர் கொள்ளும் அனைத்தின் விளைவுகளும் . இதில் திறவுக்கோல் அளவுகள் பரிசோதிக்க அவசியம் இருக்கவில்லை அனைத்துக்குமான…
பேச வேண்டுமென நினைக்கும் வார்த்தைகள்.. உள் மடங்கி குறைப்பிரசவமாய்! ஜீரணிக்க முடியா நிகழ்தலில்.. காதலுக்கான குறியீடுகள்! கவிதையின் உப்பில் உள்ளளவும் நன்றி மறவா கண்ணீர் படிமங்கள்!!! -மணவை அமீன்.
ஊரைவிட்டு விலக்கி வைத்தனர் என்னை நீரைவிட்டு நிலத்தி லிட்டனர் மீனை ஊரினம் யாவரும் ஓரின மாயினர் எனக் கெதிராய் காரண மாயிரம் தோரண மாயின சீர்திருத்தம் சொன்னவரை பெரியார் என்றனர்…
மழைக்கால இரவு கொசுக்களின் படையெடுப்பில் உடலிலிருந்து அரை அவுன்ஸ் இரத்தம் குறைந்தது வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்தின் உள்ளே இரண்டு சடலங்கள் பயங்கரத்தை ஞாபகப்படுத்தும் மேகத்தின் கறுமை நிறம் காற்றின் வேகத்தால் மரங்கள் பேயாட்டம் போடும்…
___ ரமணி நானறிந்த நிகரற்ற நட்சத்திரங்களின் ஞாபகத்தோடு வானின் தொலைதூரத்திலெரியும் சூரியனை என் ஒளியிழந்த கண்கொண்டு பார்க்க விழைகிறேன். நீண்ட வெளியின் மையத்தையும் முடிவையும் காணத்துடிக்கும் மனதின் வீண்முயற்சியின் அடித்தளத்தில் தகிக்கும் அடையாளமற்ற வெற்றுப்பார்வையில்…
__ ரமணி இரவின் மிச்சம் இன்னும் ஜன்னல் கண்ணாடிகளுக்குப்பின் மயங்கிக் கொண்டிருக்கிறது. எது எரிந்து இப்படி சாம்பலாய்ப் பூத்துக்கொண்டிருக்கிறது? கண்களுக்குள் இன்னும் கனவு முட்டைகள் உடையாதிருக்கின்றன. முட்டைகள்! துராக்ருத முட்டைகள்! ஒரு கோப்பை காப்பித்திரவத்தால்…
தொழுகைத் தொப்பி புனிதநூல் பிரதி பேரரசன் உடுப்பிற்கும் உணவிற்கும் நெய்தபடி இருந்தார். மலை எலிகளை விரிந்த நாகங்களை விக்கிரங்களை உடைத்து பள்ளிகளை எழுப்பினார். டாரா ஷிக்கோ புறச்சமயியானான், அவனோடு ஷூஜா, முராட், சர்மட்டை சிதைத்தார்…
ஒரு முறை தோல்வியின் வலி உயிரின் வேரை பிடுங்கிவிட்டு திரும்பும் போது தோல்வியோடு வலியும் மனப்பாடமாகி போவதில் ஆச்சரியமில்லை இரவை தோற்று பகல் அழிவதில் மழை தோற்று வெயில் அழிவதில் இரைச்சல் தோற்று மௌனம்…
ரிஷி ஆரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று என் கண் முன். அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும் பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன். அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன். அந்தக்…
_கோபால்தாசன் எனக்கான வீடு இது. என் சிந்தனையின் பட்டறை என்றுகூடச் சொல்லலாம். தோற்றம் பழைய கட்ட்டிடமாக இருந்தாலும் உள்ளிருக்கும் ஒவ்வொரு அறையும் என்னுள்ளிருக்கும் உறுப்புகளாய்... மிளகாய் விதை இட்டு முளைத்த செடிகளும் உண்டு. திருட்டுத்தனமாய்…