அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,மலேசியா,பிஜி,இலங்கை கென்யா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்த்து சுமார் 600 க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி முடித்தவர் என்ற பெருமைக்குரிய சிற்பி கணபதி ஸ்தபதி ஆவார். கடந்த 6.9.11 அன்று பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடலின் பல பாகங்கள் இயங்கா காரணத்தால் சத்யலோகம் அடைந்தார். இவர் 1927 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் எழுவன்கோட்டை எனும் கிராமத்தில் வைத்தியாநாத ஸ்தபதி -வேலம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது மனைவியின் பெயர் […]
பணம் மட்டுமே குறிக்கோளாய்க்கொண்ட ஒரு சமூகம்.அதையே இந்தப்படத்தை பார்ப்பவருக்கும் எடுத்திருப்பவர்களுக்குமான மையக்கருத்தாக வைத்து,எப்படியேனும், வலிக்காமல், அதற்கென பெரும் முயற்சி என்று எதுவும் செய்யாமல் , குறுக்கு வழியில்”Easy Money”யை அடைந்து விடத்துடிக்கும் ஒரு கூட்டம் என்ற எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நால்வர் – அஜித்’தோடு ஐவர்,என ஒன்று கூடிச்சேர்ந்து கொண்டு யாருக்கோ சொந்தமான பணத்தை அடி’த்துச்செல்லுவதை கொஞ்சம் மிரட்டலாகவே சொல்லியிருக்கிறார் பிரபு வெங்கட். பணம் , பணம் , பணம் இதுவே தாரக மந்திரம் காதோரத்தில் சிறிது […]
“எல்லாம் ரெடியா? வா சீக்கிரம். ஏழு மணி ஆயிடுச்சு”, ஜிதாமித்ரனின் ஜாதகம் இனிமேல் அவனைத் தவிர வேறு எவருக்கும் தேவைப் படாது. அந்த அழைப்பு, அவன் மாமா ஸ்ரீவத்சவாவின் திருவாயிலிருந்து, வெற்றிலை தெளிக்க வெளிவந்தது. ஆம், மித்துவுக்கு திருமணம்! ஜிதாமித்ரனுக்கு வீட்டில் செல்லப் பெயர், மித்து. ஜிதாமித்திரன், மித்ரனாகி, மித்ரன், மித்துவாகியதற்கான முழு பொறுப்பு அவன் அக்கா அர்ச்சனாவையே சாரும். சிறுவயது முதல் படிப்பையே குறியாக வைத்து வளர்ந்த மித்து, CA முடித்து சில வருடங்கள் ஆகிவிட்டது. […]