பத்து மணி யிலிருந்து பல மணி நேரம் போராட்டம் செய்த பட்டினி வயிறு பாதையோரக் கடையின் பரோட்டா சால்னாவுடனான பேச்சு வார்த்தையில் சமாதானமானது வயிற்றுக்கு ஈயப்பட்டபின் செவிப் பசிக்கு என்பதுகளின் இரைச்சலற்ற இசை வாகனத்தில் விரவ தூக்கம் தொந்தரவானது இராப் பயணங்களில் இரவின் இருப்பை இசையே நிரப்பும் வழுக்கும் தார் சாலை விடுத்து உலுக்கும் கற்சாலை தொடங்க உறக்கமும் கிறக்கமும் சட்டென கலைந்தது மேற்சென்ற வழியெல்லாம் மற்றுமொரு பசிக்கான பரிவர்த்தனை காட்சிகள் பொதி உண்ட கனரக வாகனங்கள் […]
”முன் ஜென்ம” கணக்கு காட்டி எனக்கு மறுக்கபட்டிருந்த அன்பை நான் மற்றவர்க்கு கொடுத்து விட்டால், தண்டனையென எனக்கு விதித்ததை எப்படி வசூளித்து கொள்வாய்? உன் செயல்களை அறிய முயன்று நான் தோற்கிற வரை நீ பரம்பொருள் தான்.. நிகழ்வுகளின் மூல கூறுகளை அறிய முற்படுவதையே விட்டுவிட்டால் உனக்கு என்ன பெயர் வைத்துகொள்வாய்? எதிர்காலத்தை கையில் கொண்டு வித்தை காட்டி மகிழ்கிறாய் எதுவாயினும் இருக்கட்டும் என நான் விட்டு விட்டால் உப்புசப்பற்று ஆகிவிடுமோ உனக்கு ? இப்படி ,நீ […]
புற உலகை என்ன செய்வது? கண் விழிப்பதும் இயங்குவதும் ஓய்வதும் எப்போதும் புற உலகு என்னைச் சுற்றித்தானே இருக்கிறது? புற உலகில் நான் ஒட்டிக் கொண்டிருக்கிறேனா? இல்லை அது என்னை எல்லாத் திக்கிலும் வளைத்து இருத்திக் கொண்டிருக்கிறதா? அகத்துள் ஆழ்ந்து ஆன்மீகம் தேடுவது தொடங்கியதா இல்லை தேடலின் சங்கிலித் தொடர் அறுபட்டு நான் தடுமாறி மீண்டும் விட்ட இடத்தில் தொடங்க இயலாது உழல்கிறேனா? புற உலகிலாவது ஒட்டி ஒன்றாக முடிகிறதா? கால் பந்தாகவும் பந்தை உதைக்கும் கால்களாகவும் […]
இது ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட படைப்பு! காலை ஆறு மணி.. “பாலக் கறந்துட்டியா? கிளம்பவா?”, குளித்து முடித்து வெளியே வந்த மணி, தன் மகன் இளவரசனிடம் கேட்டது. குளியல் அறை என்று கூற முடியாத ஒரு ஓலைக் கூடு. அதன் மறைப்புத் தடுப்பை (கதவு என்றும் கூற முடியாது) தூக்கி, வெளிப் பக்கமாகத் தள்ளி வைத்து, வெளியே வருவதற்கு வழி செய்தார் மணி. அவர் குளித்து முடித்துவிட்டு உடம்பை ஒரு சொட்டு நீர் கூட […]
எதிர்பார்த்துக் காத்திருந்து படிக்கும் ஒரு தொடர்கதையின் கனத்த கடைசி அத்தியாயமாய், நீண்டு கொண்டே இருந்த என் நாட்குறிப்பிற்கு “முற்றும்” போட்டு விட்டேன்.. நாளை, அடுத்த வாரம் என்று கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் தேர்தல் அறிக்கைகளாகப் போகின்றன.. ஏளனமும் அலட்சியமும் வந்த இடங்களிலிருந்து மாலைகளும் மலர்வளையங்களும் வரலாம், சில பல துளிக்கண்ணீரும்! பார்த்து ஏமாற இருக்கப்போவதில்லை.. எதெதற்கோ பயந்த பயங்களெல்லாம் வேடிக்கையாய்த் தோன்றுகின்றன.. கனவுகளும் அவற்றை நோக்கிய பயணங்களும், தடைகளும் அது குறித்த போராட்டங்களும் அர்த்தமற்றுப் போன வெளி […]
இந்தி : அவத் நாராயன் சிங் தமிழில் : முனைவர் தி.இரா.மீனா “உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் நான் உங்களிடம் ஆலோசனை கேட்க விரும்புகிறேன் “அவன் மிக இயல்பாகச் சொன்னான். அறிமுகமில்லாத அந்த மனிதனின் பேச்சு என்னைச் சிறிது ஆச்சரியப் படுத்தியது.”எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள் ” நான் மிக பணிவாய்ச் சொல்லி விட்டு “நாம் பரிச்சயமானவர்களா?”என்று கேட்டேன். “பரிச்சயம் என்றால் உங்கள் பார்வையில் என்ன பொருள்?” நான் உடனடியாக எந்த விளக்கமும் தராமல் அமைதியாக இருந்தேன்.ஒரு திருப்தியான பதிலைப் […]
யாரோ…என் நிழலை மிதித்துப் போனது போல்…ஒரு சிலிர்ப்பு ..! யாரோ…என் இதயத்தை இழுத்துச் சென்றது போல்…ஓர் ஈர்ப்பு..! யாரோ…என் கனவை கலைத்தது போல்…ஓர் உணர்வு..! அதனை போராட்டத்திலும் யாரோ…என்னை அழைத்தது போல்..ஒரு சுகம்..! கண்ணைத் திறந்தேன்… கனவென உணர்ந்தேன்….ஓர் வெறுமை..! ஓசை இன்றி சொல்லிக்கொள்ளாமல் இறங்கிப் போகும் ரயில் பயணி…! உறக்கத்தில் கனவு..! =============================== ஜெயஸ்ரீ ஷங்கர்…
சகுந்தலா மெய்யப்பன் அரபு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டைச் சேர்ந்தவர் கலீல் கிப்ரான். இவர் ஒரு சிறந்த மேதை. சிந்தனையாளர். துத்துவ ஞானி. புரட்சிக் கவிஞர். அத்துடன் நகைச்சுவை வேந்தர். இவருடைய நகைச்சுவைகள் கேட்கக் கேட்கத் தெவிட்டாதவை. நினைத்து நினைத்துச் சுவைக்கலாம். அது மட்டுமல்ல. நடைமுறை வாழ்க்கையிலும் மிகவும் சுவைபட நடந்து கொள்வார். அவருக்கு ஒரு நாள் குளியல் துறைக்குப் போய் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வர வேண்டும் என்று ஆசை வந்தது. அந்த நகரத்துக் […]
மின்சாரக்கடத்தியாய் திகழ்வது ஒரு காலம் மினசாரம் கடந்து வாழ்வது ஒரு காலம் வானம் தெளிவாய் இல்லாத ஒரு காலமும் உண்டு அது எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காலம் அதை பதுக்கிவைத்திருந்தால் ஏமாற்றமில்லை அது பதுங்கியிருந்தால் ஏமாற்றம்தான் இரவில் இரைதேடும் எலிகளைப்போலவும் எலிகளைத்தேடும் பாம்புகளாகவும் தலைகாட்டும் தருணங்கள் அத்துபடிதான் பெருங்காயப்பெட்டியை திறந்துவைத்துவிட்டு ஊதுபத்தியைக் கொளுத்திவிட்டு காற்றின்மீது கறைபூசமுடியுமா? அது வெங்காயத்திற்கும் கண்ணீருக்குமான பந்தம் என்னைமீறி எதுவுமில்லை என்றிருந்ததுதான் தவறு என்னைப் பலமுறை வென்றது வென்றிருந்தால் நான் இளங்கோ அடிகள் வெல்லாததால் […]
காலச்சூழல்களே கவிஞர்களை உருவாக்குகின்றன. அவ்வாறு காலத்தால் உருவாக்கப்பட்ட கவிஞரே பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார் ஆவார். தம் காலத்தில் வாழ்ந்த பாவேந்தரைத் தன் குருவாகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டு பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞராகப் பட்டுக்கோட்டையார் திகழ்ந்தார். பாவேந்தரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டாலும் தாம் செல்லும் பாதையை தாமே தெரிந்தெடுத்து அதன் வழியே இறுதிவரைப் பிறழாது வாழ்ந்தவர் மக்கள் கவிஞர் ஆவார். பட்டுக்கோட்டையில் மிக எளிய வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே துன்பங்களால் சூழப்பட்டவர் மக்கள் கவிஞர். […]