கல்யாண வீடு களைகட்டியிருந்தது வெளிநாட்டு மாப்பிள்ளை கட்டிக்க கசக்குதா என்றார்கள் நான் இன்னும் படிக்கணும் என்றாள் அவள் அம்மாஞ்சி சேகரை மனதில் வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டி மணவறையில் அமர வைத்தார்கள் காதல் பறவைகளில் ஒன்றை கவண்கல்லால் அடிப்பது சமூகத்திற்கு புதிதல்ல தன் வாழ்க்கையை பிறர் தீர்மானிக்க வைத்து தலை குனிந்து தாலி ஏற்கும் பெண்கள் இன்னுமிருக்கிறார்கள்.