கடவுளும் வெங்கடேசனும்

This entry is part 19 of 27 in the series 29 செப்டம்பர் 2013

கலைச்செல்வி “வெங்கடேசா… வெங்கடேசா…” “இதோ வந்துட்டேன்ப்பா…” வந்த மகனிடம் காசை கொடுத்தார் சுதர்ஸன், வெங்கடேசனின் அப்பா. “ரேஸர் ஒண்ணு வாங்கிட்டு வாப்பா…” காசை வாங்கியவன் முதுகுக்கு பின்னாடி அம்மாவோட குரல் கேட்டது “அப்டியே பொட்டுக்கடலை அரைக்கிலோ வாங்கிட்டு வந்துடுப்பா…” வீட்டுக்கு பக்கத்திலேயே பெட்டிக்கடை இருப்பது ரொம்ப சவுகரியமாக போய் விட்டது. “நேத்து இட்லிக்கு மாவு அரைக்கலைன்னு தங்கச்சி சொல்லுச்சு… இந்தாப்பா… இட்லி மாவு ஃபிரெஷ்ஷா இருக்கு.. எடுத்துட்டு போப்பா…” உரிமையோடு இட்லி மாவு பாக்கெட்டை எடுத்து வைத்த […]

மயிரிழையில்…

This entry is part 18 of 27 in the series 29 செப்டம்பர் 2013

கலைச்செல்வி கையை வாய்க்குள் விட்டு எடுக்கலாமா என்றால் அது அருவருப்பாக இருக்கும். சாப்பாடு மேசைக்கான நாகரிகமும் இல்லை. நாக்கால் துழாவ முடிகிறதேயொழிய எடுக்க முடியவில்லை. சட்டை பண்ணாமல் சாப்பிடலாம் என்றாலும் உறுத்துகிறது. இது இவ்வளவு பெரிய விஷயமா..? பருப்பும் நெய்யுமாக ஆரம்பித்திருந்த விருந்தின் சந்தோஷமெல்லாம் இந்த முயற்சியிலேயே வடிந்து விட்டது. இது ஒரு விருந்துக்கான ஏற்பாடு என்றில்லாமலேயே விருந்தாகி இருந்தது. வெள்ளிக்கிழமை. மதிய உணவு நேரம். அலுவலக நண்பன் சந்துருவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பாலு. கத்தரிக்காய் சாம்பார், […]

மதிப்பெண்ணின் மறுப்பக்கம்

This entry is part 17 of 27 in the series 29 செப்டம்பர் 2013

  (18.12.2011 தினமணிகதிரில் அச்சானது) ஷன்மதி, பாடாலூர் டிரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙங்ங்ங்ங்ங்…………………………. ஏண்டி.. பப்பி.. எழுந்திரு மணியாச்சு பாரு…. நாலரைக்கு அலாரம் அடிச்சாச்சு. எழுந்திருடீ.. – லைட்டை போட்டவாறு மகளை எழுப்பினாள் ராதிகா. அம்மா.. ஃபைவ் மினிட்ஸ்மா.. ப்ளீஸ் .. என்றவாறு புரண்டு படுத்தாள் பப்பி என்று செல்லமாக அழைக்கப்படும் மோனிகா. பப்பி… எழுந்திரிம்மா.. இப்படியே அஞ்சு அஞ்சு நிமிஷமாக ஓடி போயிடும்.. என்றவாறு எழுந்து வந்து மகளின் தலையை கோதி விட்டார் ராஜன், அவளின் அப்பா. அனிச்சையாக கணக்கு […]

நீங்காத நினைவுகள் – 17

This entry is part 16 of 27 in the series 29 செப்டம்பர் 2013

    செப்டம்பர் மாதத்தில் நிறைய எண்ணிக்கையில் பல பெரிய மனிதர்களும் புகழ் பெற்றோரும் பிறந்துள்ளனர். ‘அதென்ன, பெரிய மனிதர்கள், புகழ் பெற்றோர் என்று இரண்டு வகைகள்?’ என்கிறீர்களா? அது அப்படித்தான்! ‘புகழ் பெற்றோர் எல்லாருமே உண்மையில் பெரியமனிர்கள் அல்லர்; பெரியமனிதர் யாவருமே புகழ் பெற்றோர் அல்லர்’ – ‘All the popular men are not really great and all the great men do not become popular’ எனும் பொன்மொழியைப் படித்ததன் […]

கம்பனும் கண்ணதாசனும்

This entry is part 14 of 27 in the series 29 செப்டம்பர் 2013

     இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர்.     தேரழுந்தூரில் தோன்றி, சடையப்ப வள்ளலால் திருவெண்ணை நல்லூரிலே ஆதரிக்கப்பட்டு ”ஒரு பூனை பாற்கடலைக் குடிப்பதுபோல மாபெரும் இராமகாதை இயற்ற வந்தேன்” என்ற கம்பனும்,     சிட்டுக்குருவிகள் கூட கூடுகட்டப் பயப்படும், பொட்டல்வெளியான சிறுகூடற்பட்டியிலே பிறந்து, “போற்றுபவர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன், எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்” என்று […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 29

This entry is part 13 of 27 in the series 29 செப்டம்பர் 2013

சினத்தை அடக்க முடிந்தாலும், ராதிகாவால் அழுகையை அடக்க முடியவில்லை. தனது மதிப்பில் மிகவும் தாழ்ந்திருந்த சிந்தியாவுக்கு முன்னால் மனம் உடைந்து அழ நேர்ந்த்து அவளது அழுகைக்குச் சுருதி கூட்டியது. சிந்தியா அவசரமாய் எழுந்து அவளருகே வந்து உட்கார்ந்துகொண்டாள். ஒரு தாய்க்குரிய ஆதரவுடன் ராதிகாவின் தோளை யணைத்துக்கொண்டாள். ராதிகா கூச்சத்துடன் அவள் கையை விலக்கினாள். “ராகேஷ்கிட்ட நான் சொன்னதையெலாம் பத்திக் கேக்கப்போறேதானே?” கண்களைத் துடைத்துக்கொண்ட ராதிகா, “பின்னே? அதைப் பத்தி எதுவும் கேக்காம அவர் கிட்டேர்ந்து விலகிக்க முடியுமா? […]

மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்

This entry is part 12 of 27 in the series 29 செப்டம்பர் 2013

                                                              டாக்டர் ஜி. ஜான்சன் அல்ஜைமர் நோய் ( Alzheimer Disease ) என்பது நிரந்தரமான நினைவிழத்தல் நோய் எனலாம். இது ஏற்பட்டால், தொடர்ந்து நோய் முற்றி மரணம் நேரிடும். இதை குணப்படுத்தக்கூடிய சிகிச்சைகள் இல்லை. இவர்கள் தாங்கள் யார் என்பதை மறந்து செயல்படுவதால், உறவினர்களுக்கு பெரும் துன்பம் நேரிடும். இந்த வினோத நோயை 1906 ஆம் வருடத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மனோவீயல் மருத்துவரும், நரம்பியல் நோயியல் நிபுணருமான ( psychiatrist and neuropathologist […]

தாகூரின் கீதப் பாமாலை – 83 என் இறுதிப் பரிசு .. !

This entry is part 11 of 27 in the series 29 செப்டம்பர் 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   மழை  கொட்டி முழக்கும் இருட்டினில் நுழைந்து நானுன் வாசற் படியில் தயங்கி நிற்கிறேன். பயணியிடம், உன் ஓய்வுக் கோயிலின் ஒரு புறத்தில் ஒதுங்கிக் கொள்ள லாமா என்று  கேட்கிறேன். உனக்கு நான் வழிப் பாதையில் பறித்த எழிலான  சிறுகிளை மல்லிகை  மொட்டுகளைக் கொண்டு வந்துள்ளேன். பின்னலில்  அதைச் சூடிக்கொள் . மனத்தில் எழ இயலாமல் கிடந்த எனது நம்பிக்கை அது ! […]

படிக்கலாம் வாங்க..

This entry is part 10 of 27 in the series 29 செப்டம்பர் 2013

                      1. நூல் : போயிட்டு வாங்க சார் ( நாவல் ) தமிழில்: ச.மாடசாமி ஆங்கில மூலம் : ஜேம்ஸ் ஹில்டன் ( குட் பை மிஸ்டர்  சிப்ஸ் )       சிப்பிங் என்ற  பள்ளி ஆங்கில ஆசிரியரின் கதை இது. லத்தின், கிரேக்க மொழிகளை பழைய பாணியிலேயே கற்பிப்பதில் விருப்பம் கொண்ட ஒரு  பள்ளி ஆசிரியர் பற்றிய நாவல் . நவீன விசயங்களை காது கொடுத்துக் கேட்கிறவரின் பள்ளி அனுபவங்களும், ஆசிரியர் மாணவர் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -42 ஆதாமின் பிள்ளைகள் – 2 வையகப் பூங்கா (Children of Adam)

This entry is part 9 of 27 in the series 29 செப்டம்பர் 2013

 (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     வையகப் பூங்காவுக்கு மறுபடியும் வழிபார்த்துச் செல்வோம். வலுவான துணைவர்,   புதல்வர், புதல்வியர் இருப்பதை முன்னறிப்பாய். அவரது காதல் தாகம், உடலுறவு வாழ்க்கை, அவர் வாழ்வதின் அர்த்தம், என்ன ? வசித்து வருவது, எதற்கு ? புதிராக உள்ளது உயிர்ப்பித்து வருவேன் நான்   மரித்த பிறகு ! பிறப்பு இறப்பு சுழற்சியில் தான் திரும்பவும்  பிறந்திருக்கிறேன் நான். காதலுக் […]