எப்படி எலியைப் பிடிக்கும் எனக்கு? எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கடித்துக் குதறியிருக்கும். சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருக்கும் புத்தகங்களின் தராதரம் தெரியவில்லை அதற்கு. எழுதப் படிக்கத் தெரியாத அற்பம் அது. சினந்து கவிதை எழுதி சபித்து விடலாம் அதை. ஆனால் அதற்கு கவிதையை இரசிக்கத் தெரியாது. சுட்ட தேங்காய் ருசி தான் தெரியும். திருத்த முடியாது எலியை. எப்படியும் பிடித்து விட வேண்டும். வன்மம் கூடிய இரவில் […]
கண்களில் கூடக் கபடில்லையே. மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே. என்ன செய்தான் பாலகன்? என்ன செய்யமுடியும் சிறகுகள் பிணிக்கப்பட்ட சின்னப் பறவை? தொடும் தூரத்தில் நிறுத்தி துப்பாக்கி ரவைகளால் துளைத்து விட்டான்களே ‘தேவதத்தன்கள்’. தொடும் தூரம் சுடும் தூரமா? உள்ளத்தைத் ‘தொடும் தூரம்’ இல்லையா? விகாரையிலிருந்து பதறி ஓடி வந்து பாலகன் மார்பின் புண்களை மெல்லத் தொடுவான் புத்தன். கொலையுண்டது மனிதமென்று சில்லிடும் அவன் விரல்கள் […]
பூமி மேல் தன் முதலடியை எடுத்து வைக்க முயலும். உயிர்ப் பந்தாய் மெல்ல எழுந்து நிற்கும். பூமிப் பந்தைப் பிஞ்சுக் கால்களால் உருட்டி விடப் பார்க்கும். பிஞ்சுக் கால்களின் கிளுகிளுப்பில் சுழலும் பூமியின் களிப்பு கொஞ்சம் கூடிப் போயிருக்கும். ‘பொத்’தென்று கீழே விழும் குழந்தை கத்தும். ’தரை தானே தடுக்கிச்சு’- தரையை மிதித்துக் குழந்தையைச் சமாதானப்படுத்துவாள் தாய். சுழலும் பூமி சற்று நின்று சுழலும் மீண்டும். […]
’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை (‘A Hanging’- An Essay by George Orwell) (1) ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் பர்மாவில் மழையில் முழுதும் நனைந்த ஒரு காலை வேளை. மஞ்சள் தகர மென்தகடு(tinfoil) போன்று நலிந்த வெளிச்சம் உயர்ந்தோங்கிய சுவர்களுக்குச் சாய்வாக, சிறைவெளியில் விழும். சிறிய மிருகங்களின் கூண்டுகள் போல், முன்புறம் இணை கம்பிகளால் கட்டமைக்கப்பட்டு வரிசையாய் இருக்கும் கொட்டங்கள்(sheds) போன்ற மரணக்குற்றக் கூடங்கள்.(condemned cells) வெளியே நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு […]
(1) கனவின் மேல் கல் விழாமல் வெயிலையும் வெட்டவெளியையும் சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் படுத்துக் கிடக்கும் நாய் உறங்கித் தீர்க்கும் தன் பிற்பகல் தனிமையை. நாயின் கனவைச் சுடாமல் எப்படி மெல்லச் சூரியன் சாய்ந்து கொண்டிருக்கிறான்! உன் கனவு போலத் தான் நாயின் கனவும் தனித்தது. முடிந்தால் கனவின் மேல் கல் விழாமல் நாய் மேல் கல்லெறிந்து பார் மனிதா! (2) இந்தப் பொழுதைப் பறித்து வேலியை மீறி வெளியே சிரிக்கும் பூவைப் பறிக்கவும் மனமில்லை. […]
காலத்தின் கண்ணியில் இன்னொரு இரவு கூடியிருக்கும். மழையின் இடைவிடா மோகத்தில் மையிருள் இன்னும் குழைந்திருக்கும். மின்னல் வெட்டி மழை கொளுவி நிலம் எரிவதாய்த் தோன்றும். சரமென இடி இடித்து கடித்துக் குதறும் குகையை யார் புரட்டிப் போடுவது? வெளவால்கள் கதறும். தெரிந்த முடிவிலிருந்து தெரியாத கேள்விக்கு தயாராகாது பழகிய இருளில் பரபரக்கும். இருள் கூடி இனி இடி மின்னல் கேள்வி இல்லையென்று தளர்த்திக் கொண்டு தளர் மேனி […]
43-வயதான முகம்மது அப்ஜல் குரு(Mohammad Afzal Guru) தூக்கிலிடப்பட்டுள்ளான். 2001-ல் பாராளுமன்றத்தின் மேல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சதிப் பின்ணணியில் முக்கிய பங்கு வகித்த குற்றத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட பின் அப்ஜல் குருவின் தூக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. முகம்மது அஜ்மல் அமீர் கசாப் (Mohammad Ajmal Amir Kasab) தூக்கிலிடப்பட்டு மூன்று மாதங்களுக்குள் இன்னொரு தூக்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மரணதண்டனைக்கெதிரான வலுவான வாதங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான். திண்ணையில் வெளியிடப்பட்ட […]
காடு இடுங்கியதாய் எறும்புகள் கூடியிருக்கும். கலங்கி அது விசும்புவதாய்ப் புட்கள் கீச்சிடும். காட்டின் எந்த மரத்திலிருந்தும் உதிரா ஒரு ’வண்ணப்பூ’ உதிர்ந்திருக்கும். பறந்து பறந்து சென்ற அதன் பின்னால் காடு பலகாலம் திரிந்து திரிந்து போயிருக்கும். இனி காட்டின் அழகை வெளியின் வெள்ளைச் சீலையில் யார் பறந்து வரைவது? பறந்து போன ’உயிர்ச் சிட்டு’ ’கூடு’ திரும்பாதென்றால் காடு திரும்புமா? உயிர்ப்பிப்பது போல் எறும்புகள் ’வண்ணப்பூவின்’ உடலை வளைய வளைய வரும். சின்ன உடலின் உயிர்ச்சாவின் ’சுமை’ […]
புதுதில்லியில் 23-வயது நிரம்பிய ஒரு மருத்துவ மாணவியின்(physio therapist) மேல் நடத்தப்பட்ட பாலியல் வன்முறை இந்திய சமூகப் பிரக்ஞையில் அதிர்ச்சியையும், அரசுக்கு இனிமேலும் வெறுமெனக் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க முடியாது என்ற கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் எத்தனையோ பாலியல் வன்முறைகள் கண்டு கொள்ளப்படாமல் போய் விட்டன என்பதையும் மறக்க முடியாது. அவற்றையும் உள்ளடக்கிய தீவிரம், புதுதில்லியில் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கெதிரான வலுவான எதிர்வினைகளிலும், போராட்டங்களிலும் உட்கிடையாய் இருக்கிறது என்று அரசு எடுத்துக் கொள்வதுதான் சரியானதாக இருக்கும். […]
காகங்கள் என்னைப் போல் நிம்மதியற்றவையா? கறுப்புக் கேள்விகளாய்ப் பறந்து பறந்து கரைந்து கொண்டிருக்கும். சூரிய வேட்கையில் கரிந்ததாய் ஆகாயக் கந்தல்கள்களாய் அலைந்து கொண்டிருக்கும். ஒரு கணம் ‘குபுக்’கென்று உச்சிமரக் கிளையில் காய்த்தது போல் உட்காரும். அடுத்த கணம் ‘விசுக்’கென்று வெளியில் ஆகாயச் சில்லை அலகில் கொத்திப் பறக்கும். ஊர் மரத்தையும் வெறிச்சோட விடுவதில்லை. மரத்தின் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவி வேறு மரம் போல் பார்க்கும். கத்திக் கத்தி மரத்தின் ’தவத்தைக்’ கலைக்கப் பார்க்கும். ஒரு […]