சுப்ரபாரதிமணியன் கொங்கு பகுதி மக்களின் கிராம வாழ்வை நுணுக்கமாகத தன் சிறுகதைகளில் சித்தரித்த குமாரகேசன் வியத்தக்க விதத்தில் ஏறக்குறைய தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு இந்த சரித்திரக் கதையைப் படைத்திருக்கிறார். சரித்திரக் கதைகள் என்றால் கொங்கு வேம்பாக தூரம் போகும் நான் கொங்கு நாட்டு வாழ்க்கை எனும் விதத்தில் நாவல் குமாரகேசனை கவனமாய் படிக்க வேண்டியிருந்தது. நுணுக்கமான வாசிப்பைக் கோரும் நுணுக்கமான விவரிப்புகள் கொண்ட நாவல். கொங்கு பேச்சு மொழியிலேயே […]
சுப்ரபாரதிமணியன் — கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்குக் கத்த வேண்டும் போலிருந்தது. கண்டேன் சீதையை என்று அனுமன் கத்தியது சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது. “ அடப்பாவி கிளம்பீட்டியா “ என்றுதான் கத்தினான்.உடனே அவளைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான். மஞ்சள் சுரிதாரில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் தேவி..முப்பது வய்தில் அவள் முகத்தில் இல்லாத அழகையெல்லாம் அவன் கண்டிருக்கிறான் தினம் நூறு குறுஞ்செய்திகள் அனுப்பிய காலம் உண்டு. பிரியலாம் என்று கூட ஒரு […]
“ புருசன் பொண்டாண்டின்னா இப்பிடித்தா இருக்கணும்..எப்பிடி தோளோட தோள் உரசிட்டுப் போறாங்க பாறேன். இது போதும். ஒரு பொம்பளைக்கு புருசன் இப்பிடி நடந்துட்டாப் போதும்’’ சிந்தாமணி சொல்வதைக் கேட்டு ருக்குமணி ஒரு நிமிடம் ஆச்சர்யத்துடன் பார்பபது போல் நின்றிருந்தாள்; அவள் ஏதோ பரவசத்தில் ஆழ்ந்திருந்தவள் மாதிரி சொன்னாள் . “ இதை விட ஒரு பொம்பளைக்கு வேறெ என்ன வேண்டியிருக்கும்’. வானம் நீலத்தைக் குறைத்துக் கொண்டு பல்லிளித்த்து. தாய்த்தமிழ்ப் பள்ளி முக்கு […]
” தொடர்ந்து புத்தகம் படிக்காதவர்கள் கழுதைகள் போல் திரிவார்கள் ” 18வது கேரள சர்வதேசத் திரைப்பட விழா தொடக்க விழா படத்தில் ( அன்ன அரபியா – இஸ்ரேலியப்படம்; இயக்குனர் அமோஸ் கிட்டாய் ) ஒரு முக்கிய கதாபாத்திரம் சொல்லும் வசனம் இது. திருவனந்தபுரத்தில் துவக்க விழா படம் திரையிடப்பட்ட நிசகாந்தி அரங்கின் முகப்பிலேயே புத்தக்க கண்காட்சி., திரைப்பட விழாவின் அலுவலக பகுதி அமைந்த கைரளி திரையரங்கு சுற்றிலும் திரைப்பட சம்பந்தமான பல புத்தக […]
யானையின் பிரமாண்டம் எப்போதும் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் தேர்ச் சிற்பங்களுக்குள் அது அடைபட்டுப்போவது இன்னும் ஆச்சர்யமே தரும். கவிஞர்களின் வேலையில் சிற்பமாய் யானையை அடக்குவது என்றாகிவிடுகிறது. சிறுகதை, கவிதை , பத்திரிக்கைப் பணி என்று இருப்பவர் அமிர்தம் சூர்யா. பத்திரிக்கைப்பணியே அவரின் நேரத்தைச் சாப்பிட்டு விடும். அதுவும் தீவிரமான கவிதை உணர்விற்கு எதிரான மனநிலையில் படைப்புகளை அணுகுகிறவருக்கு ஒவ்வொரு கவிதை ஆக்கமும் தவம்தான். பிரசவ அனுபவம்தான். ஆனாலும் பத்திரிக்கையாளனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பல சமயங்களில் கர்வம் […]
பெண்களின் உலகில் அவர்கள் தன் முனைப்புடன் செயல்படுவது, முன்னேற்றத்தின் தனி பாதையை தேர்ந்தெடுத்து குடும்பச்சூழலிலும், வியாபாரத் தளத்திலும் அவர்கள் முன்னேறுவவதைப்பற்றி வனஜா டேவிட்டின் “ சிலையைச் செதுக்கிய உளிகள்” , “ மாறுபட்ட மங்கை இவள்” ஆகிய நாவல்களில் காணக்கிடைக்கிறது. இவரின் சிறுகதைகளில் அவ்வகைப்பெண்களையும் குடும்பச் சூழலின் அவலங்களை ஏற்றுக் கொண்டு வாழ்கிற பெண்களையும் பார்க்கிறோம்.குடும்பத்தை நிராகரிக்கிற ஆண்களைக் காண்பிக்கிற போது சாபமிடுவதில்லை. அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்க்கையிலிருந்து நம்பிக்கைத் துளிகளுக்காய் காத்திருக்கிறார்கள்.குடும்பத்தை அலட்சியப்படுத்தி வாழும் ஒருவனின் […]
பெண்களின் உலகில் அவர்கள் தன் முனைப்புடன் செயல்படுவது, முன்னேற்றத்தின் தனி பாதையை தேர்ந்தெடுத்து குடும்பச்சூழலிலும், வியாபாரத் தளத்திலும் அவர்கள் முன்னேறுவவதைப்பற்றி வனஜா டேவிட்டின் “ சிலையைச் செதுக்கிய உளிகள்” , “ மாறுபட்ட மங்கை இவள்” ஆகிய நாவல்களில் காணக்கிடைக்கிறது. இவரின் சிறுகதைகளில் அவ்வகைப்பெண்களையும் குடும்பச் சூழலின் அவலங்களை ஏற்றுக் கொண்டு வாழ்கிற பெண்களையும் பார்க்கிறோம்.குடும்பத்தை நிராகரிக்கிற ஆண்களைக் காண்பிக்கிற போது சாபமிடுவதில்லை. அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்க்கையிலிருந்து நம்பிக்கைத் துளிகளுக்காய் காத்திருக்கிறார்கள்.குடும்பத்தை அலட்சியப்படுத்தி வாழும் ஒருவனின் […]
திரை விலக்கும் முகங்கள் வெகுஜன இதழ்களின் முக்கிய பரிசுக்கதைகள் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள். இவர் பரிசு பெற்ற ஒரு கதை ரூ 50,000 பரிசை பெற்ற போது ஒவ்வொரு வார்த்தையும் நூறு ரூபாய் சன்மாம் பெற்றிருப்பதாய் கணக்கிட்டு எழுத்தாளனுக்கு கிடைத்த அங்கீகாரத்தை எண்ணிப் பூரித்துப் போயிருக்கிறேன்.சக எழுத்தாளர்கள் பரிசும் பாராட்டும் பெறுவது மகிழ்ச்சியே தருகிறது. (ஆனால் பரிசுக் கதைகளுக்கான் பார்முலாவில் தொடர்ந்து இயங்குகிற எழுத்தாளர்களின் உலகம் உவப்பானதாக இல்லை […]
நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி ஆசிரியர்: என் . மணி ” விசன் 2023 “ திட்டம் பற்றி இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது. கறும்பலகை பாடம் போய் எட்டாக்கனியாக இருந்ததெல்லாம் மடிக்கணியாக வந்து விட்டது. கிராமப்பள்ளிகளுக்கு மாணவர்கள் போகும் சிரமம் நீங்க மிதிவண்டிகள் வந்து விட்டன.முன்பு வகுப்பில் பத்துப் பேர் இருந்தால் ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் அபூர்வம். இப்போது புத்தகம், சீருடை இலவசம். மடிக்கணிணியில் உலகத்தையே பார்க்கும் லாவகம். 2023 தனி நபர் […]
அவனுக்கு நேர்ந்த நிர்வாணம் எதேச்சையானது என்பது குற்றவுணர்வாய் அவனுள் எழுந்தது. சந்திரா என்ன அம்மணக்குண்டியோட நிக்கறே என்று சொன்னதில் எரிச்சல் தெரிந்தது. அவள் இது போன்ற சம்யங்களில் நமட்டுச் சிரிப்பை உதிர்ப்பாள். இப்போதைய வார்த்தைகளில் இருந்த கோபமான நிராகரிப்பு அவன் உடம்பைக் குறுகச் செய்த்து. வேர்த்து விறுவிறுத்திருந்த பனியன் சட்டையை கழற்றியிருந்தான். இடுப்பு உள்ளாடையைக் கழற்ற எத்தனித்தபோது அவன் லுங்கியின் நுனியை வாயில் கவ்வியிருந்தான். ஆனால் அது ஏனோ நழுவி அவனை நிர்வாணமாக்கியிருந்தது. ஜெயபால் […]