திருவரங்கப்ரியா மனவெளி என்றதலைப்பைவிட இந்த மணல்வெளி என்னும் தலைப்புஅனைவருக்குமானதாக தோன்றியது. மனவெளியின் பதிவு தனிமனித அனுபவச்சாயல் படர்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். மணல்வெளி பொதுவானதாக இருக்கிறதல்லவா? மேலும் வெளி அனைவருக்கும் சொந்தமானது. உள் என்பது பிரத்தியேகமானது அவரவர்க்கானது. உள் என்பதிலிருந்துதான் உள்ளம் என்ற சொல் வந்திருக்கவேண்டும். உள்ளம் இருக்கிறது ஆனால் கண்ணுக்குத்தெரிவதில்லை. இல்லாத ஒன்றுடனே நமக்கான உறவு பலமானது. உள்ளத்தின் உட்ச்செல்ல ஒருவரால்தான் முடியும். இதயச்சுரங்கத்தில் ஒற்றையடிப்பாதைமட்டும். உள் என்பதன் எதிர்ச்சொல் வெளி என்றாலும் பொருள் எனப் பார்த்தால் இரண்டும் […]