அகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.

Spread the love

இலங்கையின் கலை இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘அகரம்’ கலை இலக்கிய ஊடக நிலையத்தினால் புதிய தலைமுறை கலைஞர்களை ,படைப்பாளிகளை உருவாக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக திரைப்பட பாடலாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மிகவிரைவில் கொழும்பில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இப் பயிற்சிப்பட்டறையில் திரைப்படத்தில் பாடல் எழுதும் நுட்பங்களையும் தன் அனுபவங்களையும் பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பொத்துவில் அஸ்மின் வழங்க இருக்கின்றார்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தென்னிந்திய சினிமாவில் கால்பதிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதோடு பாடலாசிரியருக்கான பெறுமதியான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். இப்பயிற்சிப்பட்டறையின்போது உருவாக்கப்படும் பாடல்கள் இசையமைக்கப்பட்டு இருவட்டுக்களாக வெளியிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பயிற்சி பட்டறையில் திறமை காட்டும் பாடலாசிரியர்களுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பயிற்சிப்பட்டறையில் வயது வேறுபாடின்றி கவிதைத்துறையில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

அமைப்பாளர்,

‘அகரம்’

கலை -இலக்கிய -ஊடக நிலையம்,

இல.77, அருணோதய மாவத்தை ,

ராஜகிரிய.

E-mail: agaramfm@gmail.com

அல்லது 0771600795 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Series Navigationகவிதைபெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புநீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’