குரு அரவிந்தன் வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. காலையில் எழுந்து நிலானி பள்ளிக்குச் சென்று விட்டாள். செல்லும்போது ஓடி வந்து வழமைபோல கட்டி அணைத்து முத்தம் தந்துவிட்டுச் சென்றாள். உடம்பு வளர்ந்து விட்டதே தவிர மனசளவில் எந்தவொரு கவலையும் இல்லாத குழந்தையாகவே இருந்தாள். தெளிந்த நீரோடையாய் நகர்ந்த எங்கள் குடும்ப வாழ்க்கையில் சிறு தடுமாற்றம், காரணம் சென்ற வாரம் மகள் வயதிற்கு வந்து விட்டாள் என்ற உண்மைதான். கற்பனை உலகிலிருந்த என்னை நிஜவாழ்க்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருந்ததும் […]
செந்தில்… சந்தைக்குப் பல வழிகள்… தனியார் கடைப் பொருளுக்கு பொது வீதியன்றி… வேறுவழியில்லை… சன்னிதானத்திற்க்கு ஏது வழி? எதற்க்காக இத்தனை வழிகள்? தெற்க்கு வீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி…சந்தை களைகட்டுகிறது…கோவில் சன்னிதானத்திற்க்கு செல்லும் வழிகள் ஆயினும்… கடை விரித்தும்கருத்துளம் கொள்வாரின்றிசந்தை விட்டு சயனக்கிரகம் வீற்றிருக்கும்உண்மைப் பொருள் ஓங்குயர்பெருமாள் நோக்கிதான் நகரும் எவ்வழியும்.. தனி வழி ஏதும் இல்லைவைகுந்தப் பெருமாளுக்கு என்றுணர்த்தத்தான்இப்படி பலப்பல பொது வழிகள்… உண்மைக்கு ஏது ஒரு வழி…படிகள் இல்லா உலகிற்க்குதிசைகள் இல்லா […]
முரளி அகராதி காய்ந்து உதிர்ந்ததால் சருகுகள் சவமாய் காற்றினால் காதல்வயப்பட்டு கடத்திச் செல்லப்படுவதாகவே உயிர்பிக்கப்படுகிறது
முரளி அகராதி நெடுநேரம் கொண்ட முத்தத்தில் கணநேரம் யோசிக்கலானேன். இப்படியே இருந்த இடத்திலே வெகுதூரம் பயணிக்கலானோம். இலக்கில்லை என்றறிந்தும் வழிமறக்க வகைசெய்யக் கூடும். இறுதிவரை வழி தேடியே நிதம் வாழ வேண்டும்.
நோயல் நடேசன் கவிஞர் இந்திரனது ‘தமிழ் அழகியல்’ ‘புத்தகத்தைப் படிக்கும் வரை நான் தமிழில் அழகியலை முழுமையான ஒரு பகுதியாகச் சிந்திக்கவில்லை . ஆனால் , உலகத்தின் பல வசதியான நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்தாலும் துபாயில் உள்ள நட்சத்திர விடுதிகள்தான் என்னைக் கவர்ந்தன. அதற்கான காரணத்தை யோசித்தேன். அரேபியா இஸ்லாமியர்களிடம் எப்பொழுதும் இன்ரீரியரர் டிசையின் ( interior design) நன்றாக இருந்தது. உருவங்கள் அற்று அவர்கள் சிந்திப்பதாலோ? தெரியவில்லை. அதேபோல் லண்டனில் உள்ள கட்டிடங்களுக்கும் பாரிசில் உள்ள […]
அன்புடையீர், 9 ஜனவரி 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் 22 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: ’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’ – புத்தக அறிமுகம் – எஸ்ஸார்சி ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு– தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்-10] நேரம் எனும் கள்வன் – உத்ரா இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும்– ஒரு அரிசோனன் (சீனா-சீனா தொடர்- பாகம் 2) உத்தரகாசி– லதா குப்பா […]
முருகபூபதி தனது வாழ்நாட்களில் பெரும்பாலான பொழுதுகளை பயணித்துக்கொண்டே கடந்து செல்லும் எழுத்தாளர், களப்பணியாளர், மனித உரிமை ஆர்வலர், மொழி பெயர்ப்பாளர், தேர்ந்த வாசகர், தானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கும் ரஸவாதம் கற்றவர், அ. முத்துக்கிருஷ்ணன். எங்கள் அவுஸ்திரேலியாவின் நிரந்தர இலக்கிய விருந்தினர். மெல்பனில் வாசகர் வட்டம் அமைப்பதற்கு தூண்டுகோளாகவிருந்தவர். இன்றளவும் அதன் பணிகளில் இணைந்திருப்பவர். உறவாடுவதற்கு எளிமையானவர். இத்தனை சிறப்பியல்புகளை கொண்டிருப்பவரின் மற்றும் ஒரு வரவு, தூங்கா நகர் நினைவுகள். மதுரையின் முழுமையான வரலாற்றையே இதனைப் படித்து […]
கனவுகள் நம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் காலத்தை வெல்லக்கூடியது. யார் சொன்னது “காலத்தை கடக்க முடியாது என்று “? நம் தாத்தா , பாட்டி சொன்ன ; சொல்லிக்கேட்ட கதைகள் -ஏராளம் ,ஏராளம். இந்த கதைகளை காலத்தின் எல்லையை வைத்து நிர்ணயிக்க முடியாது. நான் ஒரு நாள் என்பாட்டியிடம் கேட்டேன். கடவுள் யார்? கண்ணை மூடிப்பார் கடவுள் தெரிவார்!!! கண்ணை மூடினேன், தெரியவில்லை என்றேன். திரும்பவும் செய்யச் சொன்னாள் என் அம்மாச்சி!!! நான் ‘கவிஞர் இல்லை’ கடவுளை […]
வெங்கடேசன். ரா அது என் கல்லூரி காலம். நான் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்த காலமூம் கூட. நான் அனுதினமும் கல்லூரி சென்று வர, என் தந்தை எனக்கு தரும் பணம் இரண்டு ரூபாய். நான் காலையில் கல்லூரிக்கு புகைவண்டியில் செல்ல ஒரு ரூபாய் , திரும்பி பேருந்தில் வர ஒரு ரூபாய் என , ஆக மொத்தம் இரண்டு ரூபாய். சில நேரங்களில் அவரிடமே பணம் தட்டுபாடு ஏற்படும் போது , அன்றைய தினம் […]
குரு அரவிந்தன் காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் சென்ற வியாழக்கிழமை 2023, தைமாதம் 26 ஆம் திகதி சிறப்பாக நடந்தேறியது. இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களில் கும்பாபிஷேகம் நடப்பது ஒரு சாதாரண பாரம்பரிய நிகழ்வுதான். ஆனால், இலங்கையில் இப்போது, அதாவது யுத்தத்திற்குப் பின்னாக நடக்கும் இத்தகைய கும்பாபிஷேகங்கள் காலத்தால் முக்கியமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். காரணம் யுத்தகாலத்தில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்த அனேகமான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். இக்காலத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் […]
பின்னூட்டங்கள்