அக்னிப்பிரவேசம் !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
உடல் முழுவதும்
சிறு சிறு
கொம்புகள் முளைத்த
பந்து வடிவக் கருமி
ஆங்காங்கே மனிதர்களைச்
சமைத்துக் கொண்டிருக்கிறது
 
குரல்வளையில் குடியேறி
உடல் நீரைச்சளியாக்கி
உயிர் குடித்து
விலகுகின்றது உயிர்க்கொல்லி
 
கடும் பசியோடு
ஆயிரமாயிரம் 
ஆரஞ்சு நிற சாவுகள்
தொங்கத் தொங்க
காத்திருக்கிறது தீ
 
மனிதர்கள்
இறுதி மரியாதையைக் கூடப்
பெற முடியாமல்
தீக்குகையில் நுழைகிறார்கள் !‌
 
                   +++++++++
Series Navigationவடதுருவக் கடற்பனிப் பரப்பளவு முந்தைய கணிப்பை விட இரண்டு மடங்கு சுருங்கி விட்டது.தில்லிகை | சூன் 12 மாலை 4 மணிக்கு | மாணவர்களிடையே இலக்கியத்தின் தாக்கம்