அதன் பேர் என்ன?

கனக்கிறது
பொழுதெல்லாம்!

எந்த அலகுகள்வைத்தும்
அதன் எடையைச்
சொல்லமுடியாதது!

தராசில்வைத்து
எடைபார்க்கமுடியாதது!

இறைவனைப்போல
வடிவமில்லாதது!

காற்றில் கலந்திருக்கும்
தூசாகவுமில்லை
மாசாகவுமில்லை

சுவாசக்
காற்றாகவுமில்லை

ஒவ்வொரு கணமும்
ஏதோவொன்று
காரணமாகிவிடுகிறது

என் எடை
கூடவில்லை
எனினும்
கனக்கிறதே!
அறிந்தவர் கூறுங்கள்
அது என்னவென்று?

அதுவரை
என்கவலை
தொடரும்…..

(9.11.2018 பிற்பகல் 2மணிக்கு அலுவலகத்தில்)

Series Navigationவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது